சனி, 26 செப்டம்பர், 2026

632 (1131) uudakam - சனநாயகம் மலருமா! (சிட்னி வானொலிக் கவிதை)

 

          


 https://www.facebook.com/sownthary.sivananthan/videos/4697591673819100

சனநாயகம் மலருமா!
(சிட்னி வானொலிக் கவிதை)
00
அமெரிக்க ஐக்கியநாட்டு முன்னாள்
குடியரசுத் தலைவர் ஆபிரகாம்லிங்கன்
' மக்களால் மக்களுக்காக மக்களே
நடத்தும் ஆட்சி மக்களாட்சி ' என
வரையறுத்தார்.
00
மக்கள் கருத்து தேர்தலின் மூலம்
மகிழ்ந்து பெறும் ஆட்சி.
சனநாயகம் தனி மனிதனின்
சுதந்திர அரண்மனை - மாளிகை.
00
சுதந்திர உலாவிற்கு சனநாயக சுதந்திரம்
மிருகங்கள் பறவைகளுக்கும் தேவை.
இனவாதம் மதவாதம் சனநாயகத்தின்
கனதியான அச்சுறுத்தல்.
00
பேச்சு சுதந்திரம் பத்திரிகைச் சுதந்திரம்
சனநாயகத்தின் சக்கரங்கள். அரசியல்
அமைப்பு சனநாயகத்தின் ஆணிவேர்.
அடிப்படை உரிமை சனநாயகத்தின் சல்லிவேர்.
00
கல்வி சுகாதாரம் பொருளாதாரமெனும்
சனநாயகக் கிளைகளால் மக்களாட்சியை
மலரச் செய்தல் மக்கள் பணி
மலருமா சனநாயகம்! இது மக்கள் சவால்!!
00
வேதா. இலங்காதிலகம்.- தென்மார்க் .17-9-2026








6 கருத்துகள்:

  1. Paramasivam Ponnampalam
    ·
    High Five Praying Hands Sticker by imoji, GIF may contain transparent, emoji, hand, hands, high five, pray, want, blessed, need, good luck, prayers, praying hands, good luck today, blssd and #blssd
    Reply
    Vetha Langathilakam
    ·
    Paramasivam Ponnampalam Thank you Sivam....29-9-2026

    பதிலளிநீக்கு

649 (1149) photo poem -5

       5.       photo  poem