தூரிகைகளால் சித்திரமாகிறது.
00
அனவரதமும் எழுத இன்பமாகச்
சனனிக்கும் கவிதையே எனக்கு
கனமழையான கருத்தாகப் பொழிந்து
மனநிறைவான மகிழ்வு தரும்.
00
இறைவன் தந்த வரமிது
குறையின்றித் தினம் வாசியுங்கள்
மறைவின்றி; அனுபவித்து மகிழ்ந்து
நிறைவான கருத்திடலாம் தயக்கமின்றி.
00
கடற்கரையின் காலடித் தடங்களல்ல!
படர்ந்த தமிழ் விவசாயம்
நடனமிடும் என்னிடம் கவிதையாக
நித்தியமாக நிறைந்த மகிழ்வு
00
பயணத்தால் ஈரமாகிய உணர்வுகள்
இயல்பாகக் காய்கிறது. ஆயினும்
கயலாகத் துள்ளும் ஆழ்மனச் சித்திரங்கள்
இயற்கையான அந்திவானச் சித்திரமாகிறது
00
வேதா.இலங்காதிலகம் - தென்மார்க். 19-9-2026


sivakumay...mikka nanry.. vaalka valamudan....30-9-2026
பதிலளிநீக்குParamasivam Ponnampalam mikka nanry Sivam.....1-10-2026
பதிலளிநீக்குNatarajan K
பதிலளிநீக்கு·
அழகான பெருமை மிகு வரிகள்
ஓ!....மிக நன்றி!......ஐயா!..மகிழ்ச்சி!...
நீக்குவாழ்க வளமுடன்.1-10-2026
பதிலளிநீக்கு·
Samekankan Shanmugam mikka nanry...2-10-2026
M.A. Ramamoorthy
பதிலளிநீக்கு·
அருமை.... வாழ்த்துகள்.
M.A. Ramamoorthy ஓ!!! மிக நன்றி ஐயா.!...மகிழ்ச்சி!
வாழ்க வளமுடன்..2-10-2026