புதன், 30 செப்டம்பர், 2026

634 (1133) தூரிகைகளால் சித்திரமாகிறது.

 

     




  தூரிகைகளால் சித்திரமாகிறது.

00

அனவரதமும் எழுத இன்பமாகச் 

சனனிக்கும் கவிதையே எனக்கு

கனமழையான கருத்தாகப் பொழிந்து

மனநிறைவான மகிழ்வு தரும்.

00

இறைவன் தந்த வரமிது

குறையின்றித் தினம் வாசியுங்கள்

மறைவின்றி;  அனுபவித்து மகிழ்ந்து

நிறைவான கருத்திடலாம் தயக்கமின்றி.

00

கடற்கரையின் காலடித் தடங்களல்ல!

படர்ந்த தமிழ் விவசாயம்

நடனமிடும் என்னிடம் கவிதையாக

நித்தியமாக  நிறைந்த மகிழ்வு

00

பயணத்தால் ஈரமாகிய உணர்வுகள்

இயல்பாகக் காய்கிறது. ஆயினும்

கயலாகத் துள்ளும் ஆழ்மனச் சித்திரங்கள்

இயற்கையான அந்திவானச் சித்திரமாகிறது

00

வேதா.இலங்காதிலகம் - தென்மார்க். 19-9-2026




        

  


6 கருத்துகள்:

  1. Natarajan K
    ·
    அழகான பெருமை மிகு வரிகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ!....மிக நன்றி!......ஐயா!..மகிழ்ச்சி!...
      வாழ்க வளமுடன்.1-10-2026

      நீக்கு
  2. M.A. Ramamoorthy
    ·
    அருமை.... வாழ்த்துகள்.


    M.A. Ramamoorthy ஓ!!! மிக நன்றி ஐயா.!...மகிழ்ச்சி!
    வாழ்க வளமுடன்..2-10-2026

    பதிலளிநீக்கு

649 (1149) photo poem -5

       5.       photo  poem