முன்னைய தடாகம் கலை இலக்கிய வட்டம்
அமரர் - கலைமகள் கிதாயா றிஸ்வியின் முகநூல்
செய்த கவிதைப்போட்டிகளில் பங்குபற்றி
விருதுகள் வாங்கியுள்ளேன் - கவியூற்று
கவினெழி -கவியருவி. அவர் ஒரு நூல் செய்தார்
100 போட்டியானர்களின் கவிதகள். அதில்
வெற்றி பெற்ற எனது கவிதையும் அதன்
ஆங்கில மொழி பெயர்ப்பும் பிரசுரமாகியிருந்தது.
புத்தகத்திற்கு பணமும் அனுப்பியிருந்தேன். சடுதியாக
அவர் மறைந்துவிட்டார் புத்தகமும் எனக்குக்
கிடைக்கவில்லை. தேடிப்பிடித்து பிறரிடம் பெற்றது இது.
5-9-2025
பணம்
ஒரு கடதாசிக்குக் கிடைத்த வெகுமதி
ஒரு சோடி எண்களுக்குக் கிடைத்த பெறுமதி
பெருமைமிகு மனிதப் படைப்புப் பணம்.
அருமைத் திறமை மதிப்பு மனிதப் பெறுமதி
துரும்பாகிறதே இவன் படைப்பின் முன்பு.
மாறுபட்ட வடிவமாகி நாட்டுக்கு நாடு
பெறுமதி பெயர் வேறு ஆகிறது.
திருவாகி இலட்சுமி கடாட்சம் ஆகிறது.
00
பணம் மட்டும் எதுவும் செய்திடாது.
பணம் இல்லாவிடில் எதுவும் ஆகாது.
பணம் – மனிதக்குணம் மாற்றும் உரைகல்.
கடின உழைப்பாளி உழைத்துப் பெறுவான்.
கருமிஇ உண்ணாமல் உடுத்தாமல் சேர்ப்பான்.
திருடன் பித்தன் கனவான் விபச்சாரம்
திருவோடு ஏந்தி திருமண் பூசியும்
திறமையாய்ப் பணம் சம்பாதிப்பார்.
00
ரூபா - றுப்பியா -டொலர் -றிங்ஙிட்-
ரூபிள்- ஈறோ - குரோணர் - பவுன்சென்று
நாடுவிட்டு நாடு மாறி மனிதர்
வாடுவதும் மகிழ்வதும் இவைகளுக்காக.
பணம் பற்றிப் பழைய மொழிகள்-....
பணமென்றால் பிணமும் வாய் திறக்கும்.
பணமில்லாதவன் பிணத்திற்குச் சமம்.
பணம் பாதாளம் வரை பாயும்.
00
15-11-2006.
(சிஐ ரிவியில் வாசித்தேன்.ரி.ஆர்.ரி தமிழ் அலை - இலண்டன் தமிழ் வானொலியிலும்
என்னால் வாசிக்கப்பட்டது.)
வெற்றி பெற்ற இருவருக்கும் வாழ்த்துக்கள்
வெற்றியாளர்களுக்கு வாழ்த்துக்கள்….!!
நெஞ்சை நெகிழ வைத்த கவிதைகள். கண்களை கலங்க வைத்த கவிதைகள்.
விடியல் வரவேண்டும் வாழ்க்கை ஒளிர வேண்டும். நம்பிக்கைதான் வாழ்க்கை நல்லது நடக்கும்.
அருமைச் சகோதரி மேகலா இராமமூர்த்தி அவர்களுக்கும், சிறந்த கவிஞராகத் தெரிவு செய்யப்பட்ட திருமிகு. வேதா. இலங்காதிலகத்திற்கும், சிறந்த பாராட்டுதலைப் பெற்ற திரு. எஸ். பழனிச்சாமி அவர்களுக்கும்,
என் நெஞ்சார்ந்த பாராட்டுகளும், அவர்தம் கவியால் அனைவரின் உள்ளத்திலும் ஏகியதற்கு நன்றியையும் காணிக்கையாக்கி,
ஏனைய சக கவிஞர்களுக்கு ஊக்கத்தையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து
அடுத்ததொரு புனைவுக்கு புத்துணர்வோடு தங்களின் எண்ணங்களைத் தருவதற்கு மகிழ்ச்சியுடன் வரவேற்று காத்திருக்கிறேன்.
வெற்றியாளர்களுக்கு என் இனிய வாழ்த்துகள்
வல்லமை – இவ்வாரக் கவிஞராகத் தேர்வு.
அதில் நாடும் சேர்ந்து என்னை அழ வைத்து விட்டீர்கள்.
என்னை; சரி செய்யச் சிறிது நேரம் சென்றது.
வல்லமைக் குழுவினருக்கு மனமார்ந்த நன்றி உரித்தாகட்டும்.
மிக்க மகிழ்வு. மே 2ம் திகதி எனக்கொரு பாராட்டு விழாவை நமது நகர் தமிழ் சங்கம் முன்னெடுக்கிறது. அதோடு இதுவும் மகிழ்வு தருகிறது.
மறுபடியும் நன்றி.
இந்த வாரத்தின் சிறந்த கவிஞராகத் தேர்வு பெற்ற கவிஞர் வேதா. இலங்கா திலகம் அவர்களுக்க்கும், பாராட்டு பெற்ற கவிஞ்ர்களுக்கும் உற்சாகத்துடன் பங்கேற்ற அனைத்து கவிஞர்களுக்கும் வாழ்த்திய நல் உள்ளங்களுக்கும் மிக்க நன்றி.
என்னைi இந்த வாரத்தின் பாராட்டுக்குரிய கவிஞராகத் தேர்ந்தெடுத்த அருமைச் சகோதரி மேகலா ராமமூர்த்தி அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.
வெற்றி பெற்றவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் !