புதன், 17 செப்டம்பர், 2025

520 (1063) இயற்கை - 1 பூகம்பம்.

 

     

இயற்கை  தலைப்பில் - வேதாவின் வலை 1  ல் 78 கவிதைகளும் 

வேதாவின் வலை 2 ல்  95 -கவிதைகளும்

பதிந்துள்ளேன். இனி ஒன்றிலிருந்து ஆரம்பம் இந்த வலையில்

இந்த இணையத்தில்.    


 2015ல் எழுதிய அன்றைய நிலைக் கவிதை இது



1 -  பூகம்பம்.


ஆதி மௌரிய குப்த

இராச்சியத்தின் கீழாக இருந்த

இமாலய இராச்சியம் என்ற

நேபாளம் இன்று கிலியுள்.

ஏழைமை புத்த நாடன்று

முப்பத்தெட்டு விகித வறுமை

காட்மண்டு தலைநகர் கொண்டு

காத்திரமான பாதிப்பு பூகம்பம்.


பூமிக்கடி அழுத்தம் அதிகரித்து

பூமிப் பாளங்கள் அசைவால் (அதிர்வால்)

புவி நடுங்கப் பூகம்பமென்கிறோம்.

மூவித நில நடுக்கம்

சாதாரண முறை, மேற்தள்ளல்

முறை, சமாந்தர அசைவென

மானுட வாழ்வைப் பாதித்து

பல்லுயிர் அழிவுச் சேதமாகிறது.


சாதாரணமாகக் கூறும் பூகம்பம்

பல்லுயிர் காவு கொண்டது.

பாரிய சேதம் சோகம்!

பன்னாட்டு உதவிகள் விரைகின்றன.


ஓன்பது மாடித் தரஹரா

கோபுரம் ஒன்றுமில்லாது சரிந்தது.

சோதனைகள், சோகம் விலகட்டும்.

சோதிக்கும்  இயற்கை அமைதியாகட்டும்.


பா வானதி -  வேதா. இலங்காதிலகம்.

டென்மார்க்    27-4-2015.

பிரசுரிப்பு - 17-9-2025


            



              

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

588 (1088) மாயக் காலம்.

            மாயக் காலம். 00 (கேலம் -விளையாட்டு. சாலகம் - சிலந்திவலை. தாலம் -பனைமரம். நாலா - பள்ளத் தாக்கு.) 00 காலம் ஒரு நீண்ட கனவு ஆலம் ...