செவ்வாய், 9 செப்டம்பர், 2025

510 (1052) 4. நாலடியார் - அறிவுடைமை

 

நாலடியார்  அறிவுடைமை- முதல் 3 அதிகாரங்களும் 

வேதாவின்வலை -2ல்   வலையேற்றியுள்ளேன்.

4 ல் இருந்து இங்கு தொடருகிறது.


(மூன்றாவது இன்பவியல்.

00

மனதிலே மகிழ்ச்சியை அடைதல் 

அம் மகிழ்ச்சி  பொருளாலும் உறவினர்

நண்பினராலும் பெறப்படுவதால் இது பொருட்பாலில்

நட்பியலுக்குப் பின் வைக்கப் பட்டது.)


25ம் அதிகாரம்

4.    நாலடியார் - அறிவுடைமை

(தேடி ஆராய்ந்து எழுதுபவை முகநூலில் - இணையத் தளத்தில் பதிவது ஆவணமுமாகலாம்.)


400 தனிப்பாடல்களின் தொகுப்பு சமண முனிவர்களால் தொகுக்கப்பட்ட பதினெண்கீழ்க்கணக்கு நூல்களிகளின் ஒன்றான நாலடியார் ஆகும். திருக்குறளுக்கு இணையாகப் பேசப்படுவது. திருக்குறள் இரு வரிகள் நாலடியார் நான்கு வரிகளுடையது. 

2015 -2017ல்  3 பாடல்களிற்கு எனது வரிகள் எழுதி வேதாவின் வலை-2ல் பதிவேற்றி வல்லமை இணையத் தளத்திலும் பதிந்திருந்தேன். இன்று 4வது பாடலிற்கு வரிகள் எழுதி இங்கு பதிகிறேன்.




நாலடியார்- அறிவுடைமை;

அதிகாரம் -25

4. (244)

வேம்பி னிலையுட் கனியினும் வாழைதன்

றீஞ்சுவை யாதுந் திரியாதா – மாங்கே

யினந் தீதேனினு மியல்புடையார் கேண்மை 

மனந் தீதாம் பக்க மரிது


வேம்பின் இலையுள் - வேப்பிலையில்    கனியினும் - பழுத்தாலும் தீஞ்சுவை - இனிய சுவை  யாதும் - எவ்வளவும்  திரியாது – வேறுபடாது ஆங்கு – அது போல  இனம் - தாம் நட்புக்கொள்ளும் இனம் தீது எனினும் - தீமை பயப்பதாயினும்  இயல்பு உடையார்- நற்குணமுடையவரது  கேண்மை – உறவு  தீதுஆம் -கொடியதாகும். (இயற்கையில் நல்லறிவுடையோர் தீயோர் உறவால் கெடுவதிலர் என்றபடி)


எனது வரிகள்:-


வைக்கோலினுள் மாம்பழம் பழுக்கும்.

வேப்பமிலையுள் வாழைப்பழம் பழுத்தாலும்

தப்பாது இனிக்கும் கசக்காது.

இப்படியாக நம் நட்பினம்

தப்பானவரானாலும் எம் குணம்

செப்பமானதால் கொடியதான தன்மைக்கு

ஒப்பாகாது  நற்குணம் நீளும்.

--------------

கவியருவி  வேதா.இலங்காதிலகம் - தென்மார்க் 9-9-2025 


         



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

568 (1068) sanrithal - (பெண்மை) யாதுமாகி நின்றவள் பெண்ணே!

                 (பெண்மை)    யாதுமாகி நின்றவள் பெண்ணே!   - ( தேன்தமிழ்க் கவிவனம். சர்வதேச மகளிர்தினச் சிறப்புப் பேட்டி.) 00 (குமைதலின்றி – ...