முன்னைய தடாகம் கலை இலக்கிய வட்டம்
அமரர் - கலைமகள் கிதாயா றிஸ்வியின் முகநூல்
செய்த கவிதைப்போட்டிகளில் பங்குபற்றி
விருதுகள் வாங்கியுள்ளேன் - கவியூற்று
கவினெழி -கவியருவி. அவர் ஒரு நூல் செய்தார்
100 போட்டியானர்களின் கவிதகள். அதில்
வெற்றி பெற்ற எனது கவிதையும் அதன்
ஆங்கில மொழி பெயர்ப்பும் பிரசுரமாகியிருந்தது.
புத்தகத்திற்கு பணமும் அனுப்பியிருந்தேன். சடுதியாக
அவர் மறைந்துவிட்டார் புத்தகமும் எனக்குக்
கிடைக்கவில்லை. தேடிப்பிடித்து பிறரிடம் பெற்றது இது.
5-9-2025
பணம்
ஒரு கடதாசிக்குக் கிடைத்த வெகுமதி
ஒரு சோடி எண்களுக்குக் கிடைத்த பெறுமதி
பெருமைமிகு மனிதப் படைப்புப் பணம்.
அருமைத் திறமை மதிப்பு மனிதப் பெறுமதி
துரும்பாகிறதே இவன் படைப்பின் முன்பு.
மாறுபட்ட வடிவமாகி நாட்டுக்கு நாடு
பெறுமதி பெயர் வேறு ஆகிறது.
திருவாகி இலட்சுமி கடாட்சம் ஆகிறது.
00
பணம் மட்டும் எதுவும் செய்திடாது.
பணம் இல்லாவிடில் எதுவும் ஆகாது.
பணம் – மனிதக்குணம் மாற்றும் உரைகல்.
கடின உழைப்பாளி உழைத்துப் பெறுவான்.
கருமிஇ உண்ணாமல் உடுத்தாமல் சேர்ப்பான்.
திருடன் பித்தன் கனவான் விபச்சாரம்
திருவோடு ஏந்தி திருமண் பூசியும்
திறமையாய்ப் பணம் சம்பாதிப்பார்.
00
ரூபா - றுப்பியா -டொலர் -றிங்ஙிட்-
ரூபிள்- ஈறோ - குரோணர் - பவுன்சென்று
நாடுவிட்டு நாடு மாறி மனிதர்
வாடுவதும் மகிழ்வதும் இவைகளுக்காக.
பணம் பற்றிப் பழைய மொழிகள்-....
பணமென்றால் பிணமும் வாய் திறக்கும்.
பணமில்லாதவன் பிணத்திற்குச் சமம்.
பணம் பாதாளம் வரை பாயும்.
00
15-11-2006.
(சிஐ ரிவியில் வாசித்தேன்.ரி.ஆர்.ரி தமிழ் அலை - இலண்டன் தமிழ் வானொலியிலும்
என்னால் வாசிக்கப்பட்டது.)




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக