மூன்றாவது இன்பவியல்.
00
மனதிலே மகிழ்ச்சியை அடைதல்
அம் மகிழ்ச்சி பொருளாலும் உறவினர்
நண்பினராலும் பெறப்படுவதால் இது பொருட்பாலில்
நட்பியலுக்குப் பின் வைக்கப் பட்டது.
5
நாலடியார் 25ம் அதிகாரம் அறிவுடைமை
400 தனிப்பாடல்களின் தொகுப்பு சமண முனிவர்களால் தொகுக்கப்பட்ட பதினெண்கீழ்க்கணக்கு நூல்களிகளின் ஒன்றான நாலடியார் ஆகும். திருக்குறளுக்கு இணையாகப் பேசப்படுவது. திருக்குறள் இரு வரிகள் நாலடியார் நான்கு வரிகளுடையது.
5வது பாடலிற்கு எனது வரிகள் எழுதி இங்கு பதிகிறேன்.
245:- கடல் சார்ந்து மின்னீர் பிறக்கு மலைசார்ந்து
முப்பீண் டுவரி பிறத்தலாற் றத்த
மினத்தனைய ரல்ல ரெறிகடற்றண் சேர்ப்ப
மனத்தனையர் மக்களென் பார்.
எறிகடல் - அலைகளை வீசும் தண் சேர்ப்ப – குளிர்ந்த துறையுடைய அரசனே!. உப்பு ஈண்டு உவர் - உப்பு சுவை மிகுந்த உப்பு நீர். அனையர் அல்லர் - ஒத்தவரல்லர். மனத்து அனையர் - அறிவின் தன்மையே உடையவராவர்.
எனது வரி :-
குளிர் அலைகள் வீசும் துறையுடையவனே!
குணம் நடத்தைகள் மானுடரின் இனத்தாரை
அணைந்தது அல்ல தம் அறிவையொத்தது.
இனிய அருவி மலையைச் சார்ந்தாலும்
உப்புடை உவர் நீர் உருவாகும்
உப்புச் சுவைக் கடல் சார்ந்தும்
இனிய சுவை நீர் உருவாகும்.
------------
கவிச் சிகரம் வேதா. இலங்காதிலகம். தென்மார்க் 20-9-2025



Sarala Vimalarajah
பதிலளிநீக்குஅருமை அக்கா
20-9-2025
Vetha Langathilakam
Sarala Vimalarajah கருத்திடல் ஒரு ஊக்குவிப்பு
மிக்க நன்றி! வாழ்க வளர்க!!!!!!
20-9
Vetha Langathilakam
அறிவின் வெளிச்சம் வாசிப்பு!
முறியும் வாசிப்பு வளர்ச்சியைத்
தறிக்கும். பொதுஅறிவை வளர்!
கையுள் இருக்கும் நூலால்
உலகை அறியலாம். மதிப்புயரும்!
20-9
Rathy Mohan
நாலடியர் படித்து நாளாச்சு.. நற்பதிவு
21-9-2025
Vetha Langathilakam
Rathy Mohan மிக்க நன்றி! வாழ்க வளர்க!!!!!!
21-9-25
Vasantha Chandran
அருமை வேதாக்கா 👌
21-9-25
Vetha Langathilakam
Vasantha Chandran மிக்க நன்றி! வாழ்க வளர்க!!!!!!
21-9-2025
Paramasivam Ponnampalam
🙏
Vetha Langathilakam
Paramasivam Ponnampalam Sivam! மிக்க நன்றி! வாழ்க வளர்க!!!!!!
21-9-25
Vetha Langathilakam
பதிலளிநீக்குHaja Alawudeen
அருமை
24-9-2025
Vetha Langathilakam
Haja Alawudeen மிக்க நன்றி. வாழ்க வளமுடன்!
Nagula Sivanathan
பதிலளிநீக்குnice
25-9-2025
Vetha Langathilakam
Nagula Sivanathan நன்றி. வாழ்க வளமுடன்!
1m
Reply