திங்கள், 15 செப்டம்பர், 2025

516 (1059) வாழ்த்துகள்-3 - ஐம்பத்திநான்காவது மணநாள்.

 

            


            


ஐம்பத்திநான்காவது மணநாள்.


ஐம்பத்து நான்கு திருமண ஆண்டு

ஐக்கியமாக நீண்டது அருமை அருமை

ஐசுவரியத்திற்கும் குறைவென்று சொல்ல இயலாது

ஐங்கரன் அருள் நாளும் இணையட்டும்

00

வாழ்த்திடும் வழமை அழிந்தொழியும் காலம்

ஆழ்ந்த அன்பாய் வாழ்த்தினாலும் அன்பைத்

தாழ்வாய் எண்ணும் காலம் இது

வாழ்த்துவேன் நாளும் நீடு வாழ

00

வெயில் மழை புயலிலும் ஒன்றாகத்

துயிலாது பயணித்தோம் இறை அருளால்

மயிலாக ஆடி மகிழ்ந்து ஒன்றாக

குயிலாகப் பாடிக் களிப்பேம் இன்பமாக.

00

வேதா. இலங்காதிலகம்  - டென்மார்க் 21-7-2021



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

588 (1088) மாயக் காலம்.

            மாயக் காலம். 00 (கேலம் -விளையாட்டு. சாலகம் - சிலந்திவலை. தாலம் -பனைமரம். நாலா - பள்ளத் தாக்கு.) 00 காலம் ஒரு நீண்ட கனவு ஆலம் ...