ஞாயிறு, 14 செப்டம்பர், 2025

513 (1056) வாழ்க்கையை வாழ்!

 

     வாழ்க்கையை வாழ்!

     



கட்டுப்பாட்டுச் சிறகுள் வளர்ந்த 

பெட்டைக் குருவிகள் கிளர்ந்து

வட்டம் என்ற சுதந்திரத்தால்

விட்டு விரிப்பதேன் சிறகை!


மேற்கத்திய பண்பாடு கண்டு

ஏற்பென எண்ணும் மயக்கமா!

சேற்றில் நெல் விளையும்.

சேற்றில் அப்பிள் விளையாது!


வெறுத்துக் குடிப்பதால்; யாரும்

வெள்ளையராக மாற முடியாது 

எடுத்தெறியாது அனுசரித்தால் திறமையாய்

எச்சிற்படுத்தாது வாழ்வை வாழலாம்!



பா வானதி வேதா. இலங்காதிலகம். - டென்மார்க்.  7-12-2014


                   



         




2 கருத்துகள்:

  1. Rathy Mohan
    சிறப்பு
    16h
    Reply
    Vetha Langathilakam
    M.A. Ramamoorthy
    அருமை............... வாழ்த்துகள்.
    Vetha Langathilakam
    M.A. Ramamoorthy பேரன்புடன் நன்றி.
    மகிழ்ச்சி - 15-9-2025

    பதிலளிநீக்கு

568 (1068) sanrithal - (பெண்மை) யாதுமாகி நின்றவள் பெண்ணே!

                 (பெண்மை)    யாதுமாகி நின்றவள் பெண்ணே!   - ( தேன்தமிழ்க் கவிவனம். சர்வதேச மகளிர்தினச் சிறப்புப் பேட்டி.) 00 (குமைதலின்றி – ...