சமீராவின் கவிதைகளைப் பார்த்தால் மனதில் மகிழ்வு துள்ளாது.
வெறுப்பு மேலிடுவதுண்டு. அந்த உணர்வுகளைத்தான் இங்கு கவிதையாக எழுதியுள்ளேன்.
கவிதைப்பள்ளு - 4
வாசிக்க மனமின்றிச் சிறிதும்
நேசிக்க முடியாத பக்கமாக
கூசிடும் வரிகளாகக் கவிதை
வாசிக்க முடியாத ஓலமாக
ஊசியாகும் ஒரு ஈனக்குரல்
00
வன்மம் அருவருப்பும் வெறுப்புமாக
இன்தமிழ் கொப்பளித்து நெளிகிறது
இன்னிசை துளியுமற்ற பனுவல்
ஈன்றவளான மென் மனத்தாள்
ஊன்றும் செந்தமிழ் வரிகளா!
00
ஏன் இப்படி அனலாகத்
தன்னக வெஞ்சினம் ததும்புகிறது!
உன் மனதை வென்றிட
பன்முக முயற்சி செய்!
வன்சொல்லால் உன்னைக் கடியாதே!
00
மென்சொற்கள் சர்க்கரையாக இனிக்கட்டும்.
வன்சொற்கள் தற்கொலை செய்யட்டும்!
மலிந்த பயனற்ற சொற்கள்
வலிந்து எழுதுதல் விலக்கலாம்
நலிவுடை தீச்செயல்கள் தீயவை
00
அக முக மலர்ச்சியை
மிகவாய்க் கொல்லும் சினம்
மனிதம் உரிக்கப் படுவதாக
புகும் கவிதை கொடுமை!
புனிதம் இழக்கும் நிலையே!
00
பா வானதி . வேதா. இலங்காதிலகம் -தென்மார்க்- 23-9-2025


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக