சனி, 12 செப்டம்பர், 2026

627 (1126) uudakam - cidny ATBC தொலைதல்.

 

        https://www.facebook.com/sownthary.sivananthan/videos/4231147217022803/




             

╔══════════════════════════════════╗

🎙️ சிட்னி வானொலிக் கவிதை

சௌந்தரி கணேசனின் வாசிப்பில்

╚══════════════════════════════════╝

🌙 தொலைதல்....... 🌙

✦ ─────────── ❖ ─────────── ✦

தொலைப்பதும் தேடலும் சேமித்தலும்
மலைத்து அழுவதும் மகிழ்வதும்
அலை ஓடிவரும் அழகு
தொலைதல் போலவே வாழ்வும்.

✦ ─────────── ❖ ─────────── ✦

தொலையாத நினைவுகள் அமரர்களான
விலைமதிப்பற்ற பெற்றோர் உறவாடல்.
பாலைவனத்து ஊற்று உடன் பிறப்புகள்
சிலையானது தாய்நில நினைவுகள்.

✦ ─────────── ❖ ─────────── ✦

கலையும் கவலை முகில்கள்
நிலையற்ற இளமையும் அழிதலே
நினைவுகளைத் தொலைத்தலும் ஒரு
நிலைத்த வரம் ஆகுமோ!

✦ ─────────── ❖ ─────────── ✦

செல்வம் பேறுகள் கோபம்
எல்லாமே காலத்தில் தொலையும்.
இல்லாத நித்திரை நோயென
கொல்லும் துன்பமழிதல் இன்பம்.

✦ ─────────── ❖ ─────────── ✦

தொலைதலற்ற நிலைத்தல் உண்டா!
விலையற்ற எழுதுகோலில் வாசிப்பில்
கலையாம் இசையில் இயற்கையில்
மனமாடி துன்பமழிதல் உண்டு

✦ ─────────── ❖ ─────────── ✦

🌺 வேதா. இலங்காதிலகம்

— தென்மார்க் —

10-9-2026

╰─────────────── 🌿 ───────────────╯











Nederst på formularen

 

3 கருத்துகள்:

649 (1149) photo poem -5

       5.       photo  poem