முற்றுப் புள்ளி
முயற்சிக்கு வேண்டாம் முற்றுப் புள்ளி.
முயற்சிக்காவிடில் நீயொரு வேலைக் கள்ளி.
முயற்கொம்பாம் நேர்மைக்கு முற்றுப் பள்ளி
முயற்சி ஒரு போதும் வேண்டாம்.
பெண்ணை மதிக்காதோரை தூர தள்ளி
உண்மை எடுத்தியம்பு அறிவோடு அள்ளி.
கண் திறக்கச் சென்றிடு பள்ளி
எண் எழுத்திற்கில்லை முற்றுப் புள்ளி.
நல்ல உறவு நட்சத்திரப் புள்ளி
இல்லை இதற்கொரு முற்றுப் புள்ளி.
இலங்கையின் இன மோதலைத் தள்ளி
எவரிடுவார் இதற்கொரு முற்றுப் புள்ளி.
அன்பு, காதல், அறம், தர்மம்
என்றும் நிலைத்திட முற்றுப் புள்ளி
என்பதே வேண்டாமிது ஆறுதல் புள்ளி.
நன்மையற்றவைக்கு வேண்டும் முற்றும் புள்ளி.
நடுவர்கள் பாரபட்சம், கோணல் நீதி
கொடுமை ஊழலிற்கிடுவோம் முற்றுப் புள்ளி.
இடுக்கண்ணான பாலியற் கொடுமைக்கு அவசியம்
இடுவோம் கட்டாய முற்றுப் புள்ளி.
பால பாடம், இளமைக் கோலக்
காலம் மாறியிட்டது முற்றுப் புள்ளி.
சீலமுடை வயோதிபம் தொடக்கப் புள்ளி.
ஆலமர வாழ்வினிறுதி முற்றுப் புள்ளி.
அக்டோபர் மாதம் 2016
Syed Mohamed :- வாங்கக்கா வாங்கா
பதிலளிநீக்குVetha Langathilakam:- மிக்க நன்றி சாயிட்...
இங்கு தான் உள்ளேன்.
ஓராயிரம் குழுக்கள்.
சில போட்டிகளில் மட்டும் கலக்கிறேன்.
உள் பெட்டியிலும் நிறையக் கதைக்க எனக்கு நேரமில்லை.
பிடிப்பதும் இல்லை
2016
Syed Mohamed :- நானும் தான் சகோதரியாரே...
ஓருநாளைக்கு நான்கு கவிதை உடனக்குடன் எழுதியவன்....
இப்போதோ ஏனோ தொய்வு ...
இருந்தாலும் தங்களிடம் அன்பின் அழைப்பில் உள்ளேன் ..மிக்க மகிழ்ச்சி
Ratnam Vijayan:- wishing image
பதிலளிநீக்கு2016
Vetha Langathilakam :- வாழ்த்திற்கு மிக்க நன்றி சகோதரரே.
மகிழ்ச்சி.
Rathy Mohan:- வாழ்த்துக்கள்
Vetha Langathilakam:- வாழ்த்திற்கு மிக்க நன்றி சகோதரி.Rathy Mohan
மிக்க மகிழ்ச்சி.
Jasmin Kennedy:- அருமை
வாழ்த்துக்கள்
2016
Vetha Langathilakam :- வாழ்த்திற்கு மிக்க நன்றி சகோதரி.
மிக்க மகிழ்ச்சி.