செவ்வாய், 28 ஏப்ரல், 2026

581 (1081) மாண்புறு மானுடராகவின்றி எல்லாம் மாறிவிட்டது

 



     



       மாண்புறு மானுடராகவின்றி

எல்லாம் மாறிவிட்டது

00

ஆண்டுப் பிரகாரப் பதிவல்ல

ஆதியில் பின்பற்றிய பழக்கம்

இணைய -மின்னஞ்சல்- தொலைபேசி

இன்ஸ்ரா -வாட்ஸ் அப்- எக்ஸ்

இன்னும் பலப்பல! மக்களுக்கு

எதிலும் திருப்தி   இல்லையோ!

00

எதிலும்   நிலைப்பதுமில்லை  இணைவதுமில்லை

உதாசீனம் வேணுமென்று  செய்வதும்

உடல்  நலம்   இழந்தாலும்

குலம் மீறிய குணமாக

பலவீனமாய்  மௌனிப்பதும்

நிலம்  கடந்தும் நிலைமாறுகிறது.

00

மனித விதிமுறை விழுமியங்களோடு

வனிதமாக நடக்காது   சஞ்சலித்து

வில்லங்கமாகப் பச்சோந்தி மானுடராவது

வீணான பலவீன நிலையோ!

காயங்கள் கொடுக்கும் ஆட்சியால்

சாயங்கள்  வெளுப்பது நிலையோ!

00

கவிஞர் திலகம். வேதா. இலங்காதிலகம். தென்மார்க்.28-4-2026



     



11 கருத்துகள்:

  1. Pss Manian
    👌 அருமையான வரிகள். 🌹 🌹

    Vetha Langathilakam
    Pss Manian அன்புடன் மகிழ்ச்சி.
    நன்றி.( நிலாமுற்றம்)..28-4-2026

    பதிலளிநீக்கு
  2. Vetha Langathilakam
    Vetha Langathilakam
    அன்புடன் மகிழ்ச்சி. Rajendran
    நன்றி.(erodu thamilanpan )..28-4-2026

    Vetha Langathilakam
    Rajendran
    அருமையான💕 கவிதை வரிசையில் இந்த💜❤️ கவிக்கு இடமுண்டு நன்று💕 நன்றி🙏

    பதிலளிநீக்கு
  3. Vetha Langathilakam
    Rathy Mohan அன்புடன் மகிழ்ச்சி. நன்றி. 28-4-2026

    பதிலளிநீக்கு
  4. வேதா மாயன்
    Photo wish....
    Vetha Langathilakam
    வேதா மாயன் அன்புடன் மிகுந்த நன்றி.
    வாழ்க வளமுடன்.(சந்திரோதயம்) 28-4-2026

    பதிலளிநீக்கு
  5. Uvarna Thiru
    Anand Maheswaran...அன்புடன் மிகுந்த நன்றி.....28-4-2026

    பதிலளிநீக்கு
  6. Vetha Langathilakam
    M. Aiyappan Pillai....அன்புடன் மிகுந்த நன்றி.
    வாழ்க வளமுடன்.(யாதும ஊரே யாவரும் கேளீர்) 28-4-2026

    பதிலளிநீக்கு
  7. Janaki Sreenivasulu
    கருத்தாழம்மிகுந்தவரிகள்!
    High Five Praying Hands Sticker by imoji, GIF may contain transparent, emoji, hand, hands, high five, pray, want, blessed, need, good luck, prayers, praying hands, good luck today, blssd and #blssd
    photo wish
    Vetha Langathilakam
    Janaki Sreenivasulu அன்புடன் மிகுந்த நன்றி...29-4-2026

    பதிலளிநீக்கு
  8. M.A. Ramamoorthy
    அருமை...
    "மனித விதிமுறை விழுமியங்களோடு
    வனிதமாக நடக்காது சஞ்சலித்து
    வில்லங்கமாகப் பச்சோந்தி மானுடராவது
    வீணான பலவீன நிலையோ!
    காயங்கள் கொடுக்கும் ஆட்சியால்
    சாயங்கள் வெளுப்பது நிலையோ!"
    வாழ்த்துகள்.
    Vetha Langathilakam
    M.A. Ramamoorthy..இனிய கருத்து ஊக்கமுடைத்து ஆழ்ந்த அன்பும் நன்றியும்.
    (சென்னை முத்தமிழ்சங்கம்.)- 29-4-2026
    May be an image of text that says 'அனிய கருத்து ஊக்கமுடைத்து. ஆழ்ந்த அன்பும் நன்றியும்! https:// wor wordpre dpress.con dpress வேதா. இலங்கா திலகம். டெள்மார்க்.'

    பதிலளிநீக்கு
  9. Thank you Teabreak - கதைகள் & கவிதைகள்..2-5-2026

    பதிலளிநீக்கு

588 (1088) மாயக் காலம்.

            மாயக் காலம். 00 (கேலம் -விளையாட்டு. சாலகம் - சிலந்திவலை. தாலம் -பனைமரம். நாலா - பள்ளத் தாக்கு.) 00 காலம் ஒரு நீண்ட கனவு ஆலம் ...