அறிவின் தேடல்
உயிர்களின் தேடலில் வாழ்வு அமைவு.
அறிவின் தேடலில் ஞானம் குவிவு.
அறிவின் தேடலில் பகிர்தல் நிறைவு
உழைப்பின் தேடலில் பிரகாசம் ஒளிர்வு.
உணர்வின் தேடலும் அனுபவமும் கற்றலே.
இயற்கையறிவு, சூழ்நிலை அறிவு பட்டறிவென்று
இயற்கையாகவே அறிவு அனைவருக்கும் உண்டு.
பேரறிவு சிற்றறிவென்ற பிரிவு முறைகளுமுண்டு.
15-5-2018
அறிவால்…
அறிவின் தரத்தை அறியா திருந்தால்
அறிவுத் தமிழும் அறியாமல் அமிழும்
அறிவைத் திறனாய் அலசி அறிவோம்.
அறிவைத் தினமும் அமுதாய்ப் பயில்வோம்
அறிமுகம் தமிழில் அமைதல் வெற்றியாம்.
அறிந்தேன் என்ற அகந்தை வெறுப்போம்.
அறிவால் உலகை அளத்தல் நிச்சயம்.
அறிவே தெய்வம் அமைவாய் நடப்போம்.
2-4-2018
அறிவால்…
அறிவின் தரத்தை அறியா திருந்தால்
அறிவுத் தமிழும் அறியாமல் அமிழும்
அறிவைத் திறனாய் அலசி அறிவோம்.
அறிவைத் தினமும் அமுதாய்ப் பயில்வோம்
அறிமுகம் தமிழில் அமைதல் வெற்றியாம்.
அறிந்தேன் என்ற அகந்தை வெறுப்போம்.
அறிவால் உலகை அளத்தல் நிச்சயம்.
அறிவே தெய்வம் அமைவாய் நடப்போம்.
2-4-2018
அருமை
பதிலளிநீக்கு