செவ்வாய், 2 ஜூலை, 2019

121. . (699) பாட்டெழுதும் பாவலன் கை.









பாட்டெழுதும் பாவலன் கை.

(தாட்டிகம் . வலிமை, இறுமாப்பு)

ஊட்டமுடை உணர்வுகளை அனுபவத்தை
ஏட்டிலே பதித்து உலகத்தை
கேட்டிடச் செய்யும் முயற்சியை
நாட்டுவதே பாவலன் ஆசை.
பாட்டெழுதும் பாவலன் கை
கேட்டெழுதாது இரவல் வரியை.
காட்டும் திறமைக்கு அலட்சியத்தை
தாட்டிகமாய் உமிழும் வெறுப்பை.

உண்மையை உள்ளபடி உரைத்தல்
கண்ணியம் காத்து நடத்தல்
பெண்ணியம் பேணிடச் செய்தல்
உண்மையாய் பாவலன் எழுதிடணும்.
தகுதியற்றோருக்குப் பட்டங்கள், பதக்கங்கள்
வெகுமதிகள் பட்டாடைகள் தவிர்த்தல்
பகுதி பகுதியாயிதை உணர்த்தல்
பாட்டெழுதும் பாவலன் கையே.

மரபு, புதுக்கவிதை தந்து
பிரபுவாகத் தமிழில் தோய்ந்து
அரவிந்தக் காதலில் குழைந்து
வரம்பின்றிக் காவியம் வரைவான்.
இயற்கையை, தொலைந்த கிராமத்தை
இயல்பாய் வரைந்து நிறைவையுணர்த்தும்
செயற்கை வலிமை தரும்
அயர்வற்றது பாலலன் கை.

23-4-2016









1 கருத்து:

435 (969) தோற்றால் வரும் ஏமாற்றம்

                          தோற்றால் வரும் ஏமாற்றம்   எதிர்பார்ப்பின் பரிசு ஏமாற்றம் எதிர்பார்க்காதவன் மகிழ்ச்சியாளன் ஏமாற்றம் உயர்விற்குப் பட...