என் உயிர் தங்கை.
நல்ல குணவதி. உதவும் குணம் கொண்டவள்.
அனைவரையும் அணைப்பாள். அழகிலவள்
இராஜசுலோசனா போன்றவள். என் உயிர் தங்கை.
இறுதியாகக் கொழும்பு சென்ற போது
மிக அருமையாகப் பார்த்துப் பார்த்து
உபசரித்தாள் என்னை. இது தான்
கடைசியக்கா என்று நினைத்தாளோ.
விடுமுறைக்கு அவளை டென்மார்க் அழைத்து
விசாலமாகப் பேசி மகிழ ஆசை
கொண்டேன். விதி நோய் உருவில் வந்தது.
பணம் நீராக ஊற்றி இந்தியா
இலங்கையென மருத்துவம் செய்தோம்
எதுவும் உதவவில்லை.
சற்றும் எதிர்பாராதது. என் உயிர்
தங்கையின் இன்னுயிர் வெண்மை முகிலினுள்.
புற்றுநோய் காவு கொண்டது.
பற்று மிகுதியில் பித்துப் பிடித்து
நான் என்னை மறந்தேன் சோகத்தில் வீழ்ந்தேன்.
எல்லாம் கடந்து போகும்.என்னுயிர்
உன்னுயிர் என்பதெல்லாம் அன்னியம்.பொய்.
ஆசை வைக்காமை ஆதி வரை
காக்கும். ஏமாற்றம் தொலைதூரம் ஏற்றுமதியாகும்.
13-7-2016
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக