புதன், 3 ஜூலை, 2019

123. (701) விளையாடலாம் வா!






விளையாடலாம் வா!

சேற்றிலாடி மழையில் நனைந்து.
காற்று வாங்கிக் குளிரிலாடி
தொப்பலாகித் தாளம் தட்டி
கப்பல் விட்டு விளையாடலாம் வா!

மழை விட்டதும் ஆடை மாற்றி
குழை நீரைக் குலுக்கித் தெளித்து
பல்லாங்குழியும் ஆடுவோம் வா
ஓடி வா! விளையாடலாம் வா!

எட்டுக் கல்லு சோகியாடி
வீடு கட்டி சோறாக்கி
கில்லியடித்து கிளித்தட்டு ஆடி
கிலுகிலுப்பாய் விளையாடலாம் வா!

அம்மா அப்பா விளையாட்டு
வாத்தியார் பாடசாலை விளையாட்டு
தபால்காரன் தபாற் கந்தோர் 
எல்லாம் விளையாடலாம் வா!


13-7-2016.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

602 (1102) பெட்டகோ பட்டம்!

                நான் 1990 ல் இருந்து 1993 வரை படித்த செமினாறியக் கட்டிடம் இடித்து தொடர் மாடியாகக் கட்டி பலர் குடியிருக்கின்றனர். வாகனத்தில் ...