திங்கள், 8 ஜூலை, 2019

129.. (706) சங்கே முழங்கு.








சங்கே முழங்கு.

முத்தமிழ்  படி எத்தவறுமற்றபடி
சொத்தையின்றி ஊன்றிப் படி
பண்டைத் தமிழாம் சங்கத் 
தமிழென்று ஊது சங்கே!

உயிர் மெய்யாய் உயர்வாய்
பயிரிட்டு உயிர்ப்பித்தே வேராய்
உயிர் மூச்சான மொழியென்று
ஊது சங்கே  ஊது!

தமிழ்த்தேன் சுவைத்தேன் மலர்ந்தேன்
களித்தேன் மலைத்தேன் இது
இலக்கியத்தேன் அரும் தேனென்று
ஊது சங்கே ஊது!

7-6-2016





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

602 (1102) பெட்டகோ பட்டம்!

                நான் 1990 ல் இருந்து 1993 வரை படித்த செமினாறியக் கட்டிடம் இடித்து தொடர் மாடியாகக் கட்டி பலர் குடியிருக்கின்றனர். வாகனத்தில் ...