செவ்வாய், 8 ஜனவரி, 2019

10 (599) மதமல்ல இது மனிதம்.






மதமல்ல இது மனிதம்.

மதம் வேறானாலும் இதமுடைய மனிதம்.
கதமின்றிக் கந்தவேளும் இஸ்லாம் அக்பரும்
ததம் (அகலம்) அன்பென்று முத்திடும் நிலைமை.
நிதமனைவரும் நிசமாயிப்படி வாழ்தல் சொர்க்கம்.

கொலை,   களவு, பொய் மதுவின்றி
வலையெனும் நீதிநெறி தருமம் உண்மையுள்
குலையாது மதமென்ன மார்க்கமென்னவென
நிலையூன்றுவது வேறுபாடற்ற ஒரு பாதையே!

சலாம்.   இசுலாம்,   சாந்தி,   அமைதி.
படைத்த வல்லமை இறைக்குக் கட்டுப்படுதல்.
இந்துவானவர் கடவுளையிதயத்தால் நெருங்குவோர்
இறையையறிவார்,   நம்மாற் காணவியலாதவரெவரும்
கண்டதுமில்லையென்கிறது உபநிடதம். 


 3-5-2017




புதன், 2 ஜனவரி, 2019

9 (598) ஆண்டிடட்டும் எம்மை ஆனந்தமாய்







ஆண்டிடட்டும் எம்மை ஆனந்தமாய்

தீண்டியது மறுபடியும் தீப ஒளியாக

தாண்டிட வந்தது புது வருடம்.

ஆண்டகைமை காட்டி அடியெடுக்க எம்மை
ஆண்டிட வரும் காலப் படியாம்.

காணாக் காதலர் மணவினைக்காய்க் காத்திருக்க

வீணா கானமுடன் அரங்கேற்ற நேர்ந்திருப்பு

தூணாய் நம்பிக்கையைக் கெட்டியாய்ப் பிடித்து
நாணாய் நிமிர்ந்திட நல்லவர் காத்திருப்பு.

நேசங்கள் பிறவி பிறவியாய்த் தொடர

பாசங்கள் பாரமின்றிப் பரவி இசைத்திட 

கேசம் கோதும் பரிவுகள் பெருகிட
வாசம் கமழும் ஆண்டாய் விரியட்டும்.


வேதா. இலங்காதிலகம். டென்மார்க்- 2-1-2019






494 (1036) கவியரங்கம் எனது 10வது

             நிலாமுற்றம் தொடர் நிகழ்வாகக் கவியரங்கம் நடந்ததில் சிலவற்றில் நான் கலந்து கொண்டேன். வேதாவின் வலை ஒன்றில் கவியரங்கம் நிகழ்வில் 6...