ஞாயிறு, 31 மே, 2020

278. (841 ) சத்திய சோதனை




இது   சௌந்தரியின் குரலில் அவுஸ்திரேவிய வானொலி இணைப்பு. 

https://www.facebook.com/sownthary.sivananthan/videos/10158704815263984/


இது  பழைய ஒரு கவிதை அதன்   இணைப்பு   இது.



https://kovaikkavi.wordpress.com/2017/03/07/481-%e0%ae%9a%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%9a%e0%af%8b%e0%ae%a4%e0%ae%a9%e0%af%88/


சத்திய சோதனை
0
சத்தியமே கடவுள் வழி காட்டுமொளி.
சத்தியத்தை நாடும் ஒருவனே வாழ்வில்
சரியான விதியைப் பின்பற்றுவானென்கிறார் காந்தி.
சத்தியத்திற்கு என்றுமே சோதனை தான்
சத்தியம் பாதுகாக்கும் கவசம் அல்லது
உத்தம மார்புக் கவசம் எனலாம்.
0
சத்திய சோதனை எங்கும் எவருக்கும்
நித்தியம் ஏற்படும் பிரச்சனைப் பின்னல்.
மன்னிப்பிலும் விட்டுக் கொடுத்தலிலும் வேதனைகள்
யன்னலூடாகத் தானாக விலகுதல் உறுதி.
வன்மமான சுயநலம் தான் உலக
இன்னலிற்குக் காரணம் என்றும் கணிக்கலாம்.
0
உன்னத நோக்கங்களில் தூய்மை அவசியம்.
தன்னலமே கண்களை முற்றாகக் குருடாக்குகிறது.
அன்பின் தேவையும் தெய்வ பக்தியும்
ஆன்மபலம் தந்து வேதனை விலக்கும்.
தியானம் பிரார்த்தனையால் மனக் கட்டுபாடு
வசமாக சத்திய சோதனை வெல்லும்.
0

7-3-2017




வெள்ளி, 29 மே, 2020

277. (840 ). சமூகத் தளங்கள்.







சமூகத் தளங்கள்.


டிக்டாக், யூரியூப் முகநூல்
முட்டையிடும் பொன் வாத்தாம்!
முதலான மானுட கௌரவத்தை
முளைத்தானியமாம் சுய திறமைகளை
முன்றிலுக்கு அழைத்துக் கேவலமாக்குகிறார்.

முன்மாதிரி அழகர் என்று
முகம் கை கால்களை
முறித்துத் தம் தரமழிக்கிறார்.
முறுவல் மறந்தவர் தற்கொலைக்கிறார்.
முறையீடு தற்கொலைகள் ஏராளமேராளம்

மூளையைப் பாவித்துக் கண்ணியம்
மூழ்காது கவனி!   முன்னேற்றம் 
மூலமந்திரப் பணமென்று பல்லிளித்தல்
மூடமதியாளர் நாடகமன்றோ இது
மூதறிவால் பெருமை காத்தலுத்தமம்

நல்லதமிழ் கசந்து  போனதுவோ!
அல்லலுடை சினிமாப் பைத்தியமோ  இது
அன்றி வறுமை வதைக்கிறதோ!
பாழான வழிகளிற் புதைவதேனோ!

29-5-2020




ஞாயிறு, 24 மே, 2020

276. (839 ) radio - பாராட்டுதல







https://www.facebook.com/sownthary.sivananthan/videos/10158681251443984/



 (வானொலி- அவுஸ்திரேலிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்.)


பாராட்டுதல்

(ஓராட்டும் - ஆராட்டும் - தாலாட்டுதல்.
ஆதனம் - சொத்து.  வேதனம் - பொன், வேதம்.
சேதனம் - அறிவு)
1பாராட்டில் சீராடாதார் யார்!
ஓராட்டும் முத்தம், முதுகுத் தட்டு,
தேனாட்டும் புன்னகை, கைகுலுக்கல்,
ஆராட்டும் அன்பு வார்த்தைகளும்!

ஆதன மனம் தேவை பாராட்ட!
சாதனைப் படியிது, கிரியா ஊக்கி!
சேதனமான உயர்வு பாராட்டுதலால் நிகழும்
வேதனம் ஒரு பாராட்டு!   மிகையல்ல!

தன்னம்பிக்கை வெகு தரமாக ஊன்றப்படும்.
சின்னச்     செயலின் பாராட்டுக்   கூட
பென்னம் பெரிய சாதனையின் வித்தாகும்!
என்ன தயக்கம் பாராட்ட ! பாராட்டுங்கள்!

பாராட்டுதல் பாதுகாப்பு உணர்வு தரும்
பாராட்டுதல்  பலர் முன்னிலையிலாகட்டும்! குறையை
பாசமுடன்  எடுத்து ஓதுங்கள் தனிமையில்.!
வேரோடட்டும் பாராட்டும் நற்பண்பு!

உங்களை அங்கீகாரப் படுத்தும் பாராட்டு!
நீங்கள் சமூகத்தால் கவனிக்கப் படுவீர்கள்!
பொங்காத பாராட்டால் அறிவும், ஆற்றலும்
மங்கிட   இடமுண்டு! நன்றே பாராட்டுங்கள்!

நன்றி மறவாமை, இனியவை கூறல்,
அன்புடைமை, இன்னா கூறாமை
இன்ன    பல   நற்பண்பு பாராட்டும்
நன்   மனம்   வளர்க்கும்! பாராட்டுங்கள்!


22-5-2020







ஞாயிறு, 17 மே, 2020

275. (838 ) தயக்கம். ATBC radio







https://www.facebook.com/sownthary.sivananthan/videos/10158658849308984/



2tStpdofon hrsfonresd
 · 

அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் 16/05/20 சனிக்கிழமை காலை 9 மணிக்கு நடைபெற்ற "கவிதை பேசும் நேரம்" என்ற வானொலி நிகழ்ச்சியில் இடம்பெற்ற வேதா இலங்காதிலகம் - டென்மார்க் அவர்களின் "தயக்கம்" கவிதை

தயக்கம்.

தயக்கம் ஒரு கிருமி
முயற்சியால் அதை உடைத்து
இயங்கித் தன்னிறைவு காணலாம்.
மயக்கமின்றித்  தன்னிலையறிதல் தீர்வு
இயங்காத் தன்னம்பிக்கையே பயம்.
தயக்கம்  இருந்தால் கொல்!

உயக்கம் (வருத்தம், வாட்டம்) கூடக் காரணம்
தயக்கத்திற்குக் கறுப்புக் கொடி காட்டு!
தியக்கமின்றிக்  (மயக்கம்) கட்டுப்பாடை உடை!
வியக்குமுன் பாதையை நீயே முடிவுசெய்!
தயங்காதே  கொள்கை   கோடென்று
பயக்கும் நன்மை உன்பாதைப்  பயணம்.

முயக்காத அன்பால் வந்ததோ
முயங்கினால் தயக்கம் பறக்குமோ
தயங்குவோர்  மனதில் இறப்போரே
செயம் காண விடாதோ
துயக்கமின்றி (சோர்வு) கனவு கண்டால் 
தயக்கம் தூர ஓடுமோ

 15-5-2020


தயக்கம் ஒரு முகமூடி எனலாமோ!




திங்கள், 11 மே, 2020

274. (837 ) முத்திரைகள்







முத்திரைகள் 

இவைகளைச் செய்து இசைந்த பலனடையவே
இவ்வுலகில் நேரமற்ற இடைஞ்சலான சுயநலம்.
இறைவா! மானுடர் இன்னல் அணைத்தால்
இகலோகம் போகும்  இடம் எங்கே!

இடறுதல் புகழென்றால் இவ்வுலகில்  இடர்ப்படுதலே!...
இடித்து அழிக்கும் இறுமாப்பு!..துண்டாடு!
இன்னாப்பு (துன்பம்) தராது இன்னிசை!  என்றும்
இன்புறவே வாழ்வில் இன்கவி சொல்லும்.

இன்னணம் வாழ  இனியது அணைக்க
இறுகும் தசைகள் இடம் தராது
இளக விடு!  இளிதலுக்கு ஆட்படாதே!
இளவேனில் தானே  இவ்வுலக வாழ்வு!

  11-5-2020






செவ்வாய், 5 மே, 2020

273. (836 ) (ஊடகம்) வாழ்வே கலை






வாழ்வே கலை

00
கலைகள் பின்னிப் பிணைந்த
விலையற்ற ஆக்கத் தொழிற்பாடுகள்
அலையலையாய் மனதில் ஆனந்தத் தேன்
உலையேற்றும்! ஆக்க உணர்வைக்
குலையாய்க் கொண்டு வரும்.
தொலைத்திடும் விடமான சோம்பலை
மலையான  துன்பத்தையும்   வேகமாய்க்
கொலைத்திடும் மானிட வெற்றிக்கு.
00

சிகரத்தில் நிற்பவருக்குத் தன்னிலை
சுற்றியிருப்பவர்களாற் தான் அறிய முடியும்.
உறக்கத்தின் கைப்பொருள் இருள்
வாழ்வின் கைப்பொருள் கலை.
எதிரிகள் நம்மேணிப் படிகள்
அவர்கள் விடும்  சவால்கள் நம்மைத்
தூக்கி நிறுத்தும் நெம்புகோல்கள்.
தடைகள் நம் சாதளை வெற்றிப்படிகள்.
00
குன்றிலிட்ட தீபமாகு! குணத்தில் தாழ்ந்திடாதே!
நன்றியுள்ள மனமே உயர வாழ்த்திடும்
கன்றிடாது மனதைக் கலகலப்பாக ஆழ்த்திடு!
வென்றிடலாம் உலகில் வெளிச்சம் சூழ்ந்திட!
00
ஓடி ஓடித் தழுவுமலை
நாடியும் ஏற்காத போதும்
தேடித் தேடி வருகிறதே பூமியை
வாடித் தளராதோ கோபத்தில்!
வாடினும் தூக்கம் வராவிடிலும்
தேடி உருள்வதேனோ நித்திரைக்காகவோ!---

 12-2-2020










திங்கள், 4 மே, 2020

272. (835 ) - ஊடகம்.- கன்னல் சுவைத் தமிழ். + மின் கவி.






ஊடகம்.    சிவா கவிதைப் பெட்டகம் - மின்னிதழிலும் எனது கவிதைகள் இடம் பெற்றுள்ளது. இவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.







கன்னல் சுவைத் தமிழ். 

நாரால் இணைத்த மாலையாகவோ
வேரால் மதர்த்த பூவாகவோ
ஊரால் புகழும் தமிழ்
பாராளக் கூலி கேட்காதது.

அறிவுத் துணை அலங்காரம்
அதீதமானதல்ல சத்தியமானது.
அகத்தியமானது முத்திய உரைகளின்
தத்துவமே அற்புத வரலாறாகும்.

எண்ணத்தின் மகரந்தப் பொடி
திண்மையாக விதைப்பாகப் படிகிறது.
அண்ட கோளத்தில் தளிராகிறது.
இண்டு இடுக்குகளில் துளிர்க்கிறது.

முன்னம் செய்த தவமென்பேன்
முன்னோர் தந்த வரமென்பேன்
கன்னல் சேர்த்து இணைக்கின்ற 
கன்னித் தமிழே சுவையென்பேன்.

(அதிதமானது - எட்டாதது. 
அகத்தியமானது - கட்டாயம், அவசியமானது) )

april--2020


ஊர் சிறக்க ஊரடங்குச் சட்டம்.
யார்  அடங்குகிறார் 

பார் முழுதும் போர்வையானது  கொரோனா.





ஞாயிறு, 3 மே, 2020

271 (834 ) அறிவின் புதிய பரப்பு










அறிவின் புதிய பரப்பு
0
வளர்த்திட்டால்  தகுதியை
குளத்தில் தவளையாய்
அளவின்றி வாயாடி
வளம் குறைத்திடலாகாது.
0
அறிவற்றவர் பாணியில்
நெறி தவறுதலாகாது
குறியாய் ஞானம் உயர்த்தி
வெறியாய் உடலைக் குறை
0
அன்பு வழிஇ அறிவு வழி ஓடி
நன்கு  இணைந்து  கருத்தை
அன்னியம் இன்றி அள்ளித்தூவிட
என்ன மயக்கம்! என்ன தயக்கம்!!
0
முரண்களுக்குள்ளும் முழுமையிலும் உருண்டு
இரவும் பகலும் கூழாங்கற்களாக
ஈரத்தோடு பசுந்தாகிப் பதமாகிறது
நிரம்பிய அனுபவத்தால் வாழ்வு.
0
அறிவில் உயர்தல் வாசித்தல்
அகண்ட சகிப்புத் தன்மை
அகந்தையற்ற விட்டுக் கொடுப்பு
அடுத்தவர் கருத்தைச் சீர்தூக்கலென
அறிவின் புதிய  பரப்பை அறிமுகமாக்கு.
0

 

10-5-2021







428 (961) ஆலமர விழுதற்ற அவலநிலை மனிதக்காட்சிச் சாலை.

                       ஆலமர விழுதற்ற அவலநிலை மனிதக்காட்சிச் சாலை மிருகக் காட்சிச் சாலை மாறி மனிதரே மறந்த மனிதம் போனதால் மனிதக் காட்சிச் சாலை...