செவ்வாய், 28 செப்டம்பர், 2021

361. (934) எவரின் வழிகாட்டல்!...

 





எவரின்  வழிகாட்டல்!...

00


மகிழ்ந்து  கால்களை மாற்றி மாற்றி

மடக்கியுதைத்து நீட்டுதல் மரபுவழியோ!

மதர்ப்புடன் கைகளையும் மதியூகமாய்

மதுரமாய் நீட்டி மதிநுட்பமான

மடக்கலில் விரல்கள் முகருதலாகி

மதனபானமாய்ச்; சுவைத்து மிடுக்குடன்

மாறாட்டமின்றிச்  சூப்பி   மகிழ்ந்தது 

மங்கலமாய்க் கொழுகொழு மழலை

00

எவரின் வழிகாட்டலின்றி எட்டியது

எல்லையற்ற எடுப்பான வினைவண்ணம்.

எதிர் காலத்தில் எதார்த்தமாக

எதிர் காற்றை எளிதாய்

எதிர் கொள்ளும் எமகாதகமோ!

எத்துணையானாலும் சுயமுயற்சி என்றும்

எல்லையற்ற சுயாதிபதி ஆக்கும்

எள்ளலற்றது எழிலன் ஆக்கட்டும்

00

உன் ஓயாத உற்சாகம்

உன் வியக்கும் உந்துதல்

என்னவொரு சுய விளையூக்கம்!

ஊன்னதமாயுலகைத் தனியே  அளக்கும்

உன்னுதல் முதற்படி ஆராரோ!

பின்னின்று உதவுங்கள் பெற்றோரே! 

என்றும் சார்பாய் இருத்தலே

வென்றிட வலியின்றி வளர்த்தல்

00

(மதர்ப்புடன் - அழகு.  மதுரமாய் - இனிமை.)

00

நாவலர் (விருது) வேதா. இலங்காதிலகம்  

டென்மார்க். 15-9-2021.










திங்கள், 20 செப்டம்பர், 2021

360 - (933) மதி - விதி - சதி

 






                                         மதி  - விதி - சதி

                                                        00


மதியின் எண்ணத்தைத்  துதித்து நட!

மிதித்து நடக்காது மிகுதியைக் கட!

மதிநுட்பத் தடம் மகிமையாய்ப் பதித்திடு!

முதிர்ந்த ஞானத்தின் முடிவு எடுபடும்

மதி  சதியை  மோதி வென்றிடும்.

00

விதியிலிருந்து விலக்காக விதிமுறை உண்டோ!

மதியும் ஒரு நேரம் மாயமாவதுண்டோ!

கதியற்றோர்  விதிவசமாய் குலைவதும் உண்டோ!

சதிகாரரால் வாழ்வு சதிராட்டமும் கண்டிடுமோ!

நதியோடும் நிலையாக  வாழ்வோரும் உண்டே!

00

சதி பதியாய் விதியென வாழ்வது

கதி என்ற காலம் அன்றையது

மதியால் காலத்தில் முதிர்ந்த அன்பது

நதியாய்   ஓடிட நளினமாய் வாழ்வது

நிதியாய்க்  குடும்பம் நிறுவுவது மதிநுட்பமானது

00

கவிஞர் திலகம் - வேதா. இலங்காதிலகம்

டென்மார்க் - 19-9-2021







வெள்ளி, 10 செப்டம்பர், 2021

359. (922) ( ஊடகம் ) கதவுகள் எத்தனை!!!!

 








இலங்கை சஞ்சிகை  புரட்டாதி இதழில் -  ஞானம் -

பிரசுரமானது

மிக்க நன்றி

00





கதவுகள் எத்தனை!!!!  


மூடிய கதவு திறப்போடு

கோடி நிம்மதி கொள்ளும்

பாடிடும் மனம் பாதுகாப்பாய்

கேடிகள் உலவும் கோளமிது.

ஓன்றல்ல பல கதவுகளின்றி

முன்னோர் வாழ்ந்தனர் அன்று

இன்பக் கதவு திறந்திருந்தால்

துன்பக் காற்றுத் தாரமாகும்.

00

மனக்கதவு நல்லெண்ணங்களால் ஆகினால்

கனமான வாழ்வு இலேசாகும்

சினமும் தொலைந்திடும்  நல்ல

சிரிப்புடை பூங்கா ஆகிடும்

ஊக்கும் மணியொலிக்கும் கதவு

தேக்கு மரக் கதவு

நோக்கும் இமைக்கதவு

தாக்கும் மௌனக் கதவு

00

கதவு மூடியது பிரிவால்

மெதுவாய்த் திறந்தது உறவால்

கதவினாற்தான் உள்ளே வெளியே

உதவியது இலக்கம் உன்னைக்காண

கதவற்றது திறந்த புவனம்

திறவுகோல் தொலைந்து விட்டது

கதவு திறக்க முடியவில்லை

உதவியற்றிடில் கதவை உடைக்கலாம்

00

வானக் கதவு திறப்பதாலோ

சோனா மாரி பெய்கிறது!

பூமிக் கதவு திறப்பதாலா

பூமிப் பிளவு வருவது!

மனக்கதவு திறக்கும் இயல்பறிவு

எனக்கான யன்னல் கதவும்

என்றும் குடையாக மூடிவிரியும்.

இயற்கைக் கதவைத் திறவுங்கள்.

00

 25-5-2021







428 (961) ஆலமர விழுதற்ற அவலநிலை மனிதக்காட்சிச் சாலை.

                       ஆலமர விழுதற்ற அவலநிலை மனிதக்காட்சிச் சாலை மிருகக் காட்சிச் சாலை மாறி மனிதரே மறந்த மனிதம் போனதால் மனிதக் காட்சிச் சாலை...