புதன், 31 ஆகஸ்ட், 2022

390. ( 923) மனிதர்கள் மிக மாறிவிட்டார்கள். 00

 


     




   மனிதர்கள் மிக மாறிவிட்டார்கள்.

00

ஏமாற்றாதே.... ஏமாற்றாதே என்பது

ஏமாறாதே என்பதற்கும்  இரு பக்கமும் பொருந்தும்.

தர்மம் என்றும் காக்கும்  இவை பழைய சொல் வழக்கு ஆனாலும் 

இன்று தூக்கி எறிபவர் பலர்.

என்றும் பழைய நீதிமுறை நம்மைக் காக்கும்.

00

நேசம்  பாசம் தூரவாகிறது.  ஓன்றில் தானே மாறுகிறது  அல்லது தம்பதிகளாக ஒருவரை ஒருவர் கட்டுப் படுத்துதலிலும் மாறுகிறது 

00

பணம் மிகப் பிரமாதமாய் வேலை செய்கிறது. யாரையும் சார்ந்து வாழும் தேவையற்ற சமூக அமைப்பு  வல்லமை தருகிறது   அதனால் யாரையும் கணக்கெடுக்காது வாழலாம்.   நொண்டும் போது தானே கைத்தடி தேவைப்படுகிறது.

00

பெரியவரை மதித்தல் எகிறுகிறது. நலம் விசாரித்தல் நாறிப்போகிறது.  நெருங்கி வந்து நலம் விசாரித்தலால் நாம் குறைந்துவிடப் போவதில்லை.  நான் பெரியவன் எனும் தலைப் பாரம் குறைக்கலாம்.

00

29-8-2022


வெள்ளி, 19 ஆகஸ்ட், 2022

389 ( 922) ஆளுமை

 



            




ஆளுமை

00

ஆளுகையே  பன்முகமான ஆளுமை.

ஆளுமை நிலையற்றது. பிறப்பிலிருந்து

நீளுவது. வாழும் காலமாக.

தோளணையும் நற் சகவாசமும்

நாளதுவரை தன் பங்கீயும்.

00

சாதக எண்ணங்கள் குவியலாகி

என்னை நான் ஆளுவதும்

உன்னை உலகை ஆளும்

திறனும் ஆளுமை தான்.

குணாதிசயங்களின் கூட்டுச் செயல்

00

ஓன்றாயமைந்த இயங்கும் பண்பும்

நன்கு அழகாக்கும் செயலுணர்வு

சின்ன மாற்றமும் தருமாளுகை.

பென்னம் பெரிய மதமுமரசியலும்

உன்னுதலாய் உயர்த்தும் தாழ்த்தும்.

00

ஒருவரைப் பார்த்தறியும் செயல்

அருமை நடத்தை பழக்க வழக்கம்

ஒருவரின் பண்பு கவரும் தன்மை

விருப்புடை ஒருங்கான உணர்வும்

திறனுமே நல்ல  ஆளுமையாகும்.

00

முயற்சியின் நீட்சி ஈடுபாடு

அயராத எழுச்சி  நேர்மை

உயர்த்திடும் வெகுவாக ஆளுமையை.

நயமுடை சூழலின் தாக்கம்

நல்லவரைக் பின்பற்றல் நலமாகும்.

00

ஏராகும் நம்பிக்கை அமைதி

வேராகும் காதலன்பு  குடும்பம்.

நேரான குணம் நட்பு

நேரம் வார்த்தைகள் சந்தர்ப்பம்

சீரான கடுமுழைப்பு  தூணாகும்.

00

பாரமான  சினம் கர்;வம்

காரமான மன்னிக்காமைக் குணம்

கோரமாய் ஆளுமையை அழிக்கும்.

சேராது முளையிலேயே கிள்ளுங்கள்.

தீரமான உடலாரோக்கியம்  மனவாரோக்கியமே.

00

 17-8-2022 ---

( படத்தை   பெரிது பண்ணிப் பாருங்கள்)

திங்கள், 15 ஆகஸ்ட், 2022

388 ( 921)

 


கையணிகள்.  


ஆடைகளின்   நிறங்களுக்கு ஏற்றபடி கையணி  கழுத்தணி போடுவது.

சுயமாகச் செய்வது  கடையில் வாங்குவதுஎன்று பல வகைகள்.

இதில் நான் செய்த   கையணிகள் சில.

1 -  ஒரு சீன கை மணிக்கூடு. வாங்கிய காலம் முடிய 

பட்டரி மாற்ற முடியவில்லை.

 பின் பக்கம் திறக்க முடியவில்லை என்றனர்.

வண்ணத்திப்பூச்சி உருவங்கள் ஒவ்வோன்றும் ஒவ்வோரு நிறத்தில்.

எறியவில்லை. வீச மனமின்றி வைத்திருந்தேன். 

பர்க்கப் பார்க்கத்  துன்பமாக  ஏமாற்றமாக இருந்தது. 

துருக்கிக் கடையில் வாங்கிய இமிட்டேசன் மோதிரம் 

கீழே   விழ   உடைந்துவிட்டது.  முகப்பு  சிவப்புக் கற்களுடன் 

அழகாக இருந்தது.  அதுவும் வீச மனமின்றி வைத்திருந்தேன்.

ஒரு நாள்  சீன மணிக்கூடடு   முகப்பை மறைத்து

சிவப்பு மோதிர முகத்தை இணைத்தேன் . 

அமைந்து விட்டது அழகாக  -   பாருங்கள்.

2  -   மற்றவை எட்டு கையணிகள் சாதாரணமாக 

இரண்டு - மூன்றாக இணைத்து நான் செய்தவை. 

கடையில் வாங:கியவை வேறாக உள்ளது. 

13 -8 -2022











வியாழன், 11 ஆகஸ்ட், 2022

387. ( 920_ மனம் சோர்ந்த போது

 












                                                                 black 3 maalaikal. Abl



மனம்   சோர்ந்த போது 


மனம்   சோர்ந்த போது  ஏதாவது ஒரு வேலையில் ஈடுபடுவது

மனதை உற்சாகப் படுத்தும். புது எண்ணங்கள் தோன்றும்

மனமகிழ்வு   நிறங்களாலும் உருவாகும். ஒவ்வொரு

மாறுபட்ட நிறங்களும் பல  உணர்வுகளைத் தூண்டும்

இது ஒரு பெரிய தலைப்பு.   பெரும் கட்டுரையே எழுதலாம்.


பேரின்பத்தின் மறைவு- தாழையான் அனுபவங்களும் 

மனத்துன்பத்தைத் தந்த போது இதை எடுத்துப் பார்த்தேன்.

பளிச்சென்று இவைகளைப் படம் எடுத்தால் என்ன 

என்ற நினைவு வந்தது. சிறிது நேரம் மனம் அனைத்தையும் மறந்து 

நிறங்களோடு உறவாடியது. 


மிகப் பெரிய மணிகளால் ஆன மாலை வெற்றி 

எனக்குச் செய்து தந்தார். பிள்ளைகளோடு

 வேலை செய்ததால் மணிகளுக்குப்   பஞ்சமில்லை.

பிள்ளைகளோடு மாலை செய்தே எடுத்து வரலாம்.


படத்தைப் பெரிது பண்ணிப் பாருங்கள்.

நல்ல காதணி உடைந்து போனால்  அழகானதானால் 

வீசமாட்டேன். அதை இங்கு பென்ரன் ஆக்கியுள்ளேன்.

அழகான இமிட்டேசன் மோதிரம் உடைந்தால்

 ( இவை ஒட்டித்தான் செய்வது துருக்கிக்  கடையான்)

அதையும்   ஏதாவது செய்வேன். பின்பு காட்டுவேன்.


11-8-2022

428 (961) ஆலமர விழுதற்ற அவலநிலை மனிதக்காட்சிச் சாலை.

                       ஆலமர விழுதற்ற அவலநிலை மனிதக்காட்சிச் சாலை மிருகக் காட்சிச் சாலை மாறி மனிதரே மறந்த மனிதம் போனதால் மனிதக் காட்சிச் சாலை...