புதன், 11 மே, 2022

384. (917) சொற்பொருள் விளக்கம் - கலங்கரை விளக்கம்





 





சொற்பொருள் விளக்கம்  - கலங்கரை விளக்கம்


சொற்பொருள் விளக்கமொரு சோதி

அற்புதத் தெளிவு தரும்.

விற்பன்னருக்கு இது அற்பமென

விகற்பமாய்க்  கற்பிதம்  ஆகலாம்

சிற்றறிவிற்கக் கருத்து விளக்கமினிமை

சிற்குணம் (மெய்யறிவு) தரும் மூலம்.

நற் புதுச் சொற்களால்

கற்கண்டுச் சுவை உடைத்தாம்.


வேதா. இலங்காதிலகம் -தென்மார்க் - 11-5-2022

வெள்ளி, 6 மே, 2022

383. (916) விருட்சமாய் மொழிபெயர்க்கும்

 



   




        விருட்சமாய் மொழிபெயர்க்கும்


விரிபுவி   உலகில்  விரல்கள்  வடிக்கும்

வித்தகமான எண்ண விதையை வியனுலகில்

விருட்சமாய்  மொழி பெயர்த்து  விரிக்கும்

விந்தை கவிதை!   வேறுபாடின்றி விகசிக்கும்

வெறும் புள்ளிகள் விலகாது  கோடாதலாக

வெளிப்படையாய்  வெளிச்சமிடும் வர்த்தகமாகும் கவிதை

00

கவிதையில் ஈரமாகிக் கருத்தால் அலசுங்கள்

கவித்துவம்  வார்த்தைகளில்  குவியும்  பேரழகு.

குவியும் பாடுபொருளில் குவலயம்  சீராகலாம்.

கரும்பு இனிப்பாய்க் கவிவரி இனித்திட

கண்ணிய வரிகளும் காவியமாய் தீபமிட

கீர்த்தனமாய் அறநெறிகள் காப்பியமாய் ஆகட்டும்.

00

தூய    மனமும் துணிந்த செயலும்

தூரிகையாய் வரையும் தமிழும் போதும்.

தூறல் மழையாய் தூசி விலக்கி

தூய்மை தரும் தாய்த்தமிழ்

தூண்டிலாகத் தமிழ் தூதன் தூது சொல்ல

தூபமாய்  மனதை எழுப்பிடட்|டும் இன்கவிதை.


கவியரசி  வேதா. இலங்காதிலகம் -தென்மார்க் - 6;5;2022.


428 (961) ஆலமர விழுதற்ற அவலநிலை மனிதக்காட்சிச் சாலை.

                       ஆலமர விழுதற்ற அவலநிலை மனிதக்காட்சிச் சாலை மிருகக் காட்சிச் சாலை மாறி மனிதரே மறந்த மனிதம் போனதால் மனிதக் காட்சிச் சாலை...