செவ்வாய், 31 டிசம்பர், 2019

238 . (806 ) சரித்திரம் செய்ய வா!









சரித்திரம் செய்ய வா!
Happy new year 2020 for all of you
*
புதுக்கிய இரண்டாயிரத்து இருபதே
புத மலர்கள் மணம் விரிய
மதுவோடு மகரந்தம் சரிய
மெதுவாய்த் தென்றல் பன்னீர் சொரிய
பதுமநிதியும் ஒன்றாகக் குவிய
புதுவாழ்வு நெறியாயுயர வா!
*
சித்திகள் பலவோடு அருத்தமாய்
நித்திய வெற்றி தோல்வியுடன்
சத்தாகப் பிணைந்து வென்றிட
மொத்தமாய்ப் புத்துணர்வோடு வா!
ஆற்றிடும் கடமைகள் நிறைவுற
போற்றும் ஊக்கமாய் வா!
*
நழுவியது இரண்டாயிரத்துப் பத்தொன்பது
கொழுவியது இரண்டாயிரத்து இருபது.
தழுவியே எதிர்பார்க்கும் திருவாய்
முழுமையாய்ச் சாகசங்கள் நிகழ்த்த
வழுவாது சரித்திரமாக இணைய
பழுதின்று நலமாக வா!
*
புதிய நிலத்தில் எழுதுகோல்
பதியும் கலப்பையாய் வீரமான
விதி மாற்றத் தயாராக வா!
குதித்திடு குலைந்திடா உற்சாகமாக!
எதிர்க்கும் நிர்ப்பந்தங்கள் சமாளிக்க
துதித்துக் கல்யாணிபாடி வா!
*
கவிச்சுடர் வேதா. இலங்காதிலகம்.

டென்மார்க். 31-12-2019


023 றே வா! வா! 00 புதுக்கிய இரண்டாயிரத்து இருபத்துமூன்றே புது மலர்கள் மணம் விரிய மதுவோடு மகரந்தம் சரிய மெதுவாய்த் தென்றல் பன்னீர் சொரிய பதுமநிதியும் ஒன்றாகக் குவிய புதுவாழ்வு நெறியாயுயர வா! 00 சித்திகள் பலவோடு அருத்தமாய் நித்திய வெற்றி தோல்வியுடன் சத்தாகப் பிணைந்து வென்றிட மொத்தமாய்ப் புத்துணர்வோடு வா! ஆற்றிடும் கடமைகள் நிறைவுற போற்றும் ஊக்கமாய் வா! 00 வேதா. இலங்காதிலகம் -தென்மார்க் - 31-1-2023





சனி, 28 டிசம்பர், 2019

237, (805 ) ஆழிவித்தாம் (முத்து) கவிதை வீதியில் நான்








ஆழிவித்தாம் (முத்து) கவிதை வீதியில் நான்

ஆழிவித்தெனும் கவிதை வீதியில் செல்கிறேன்
கீழிருந்து உயர ஏறிக் கொடியேற்ற
வாழிய என்று வாழ்த்து ஓசை
யாழிசையாய் அசைய, சூழ்ச்சி புரிந்து
கீழிருந்து  வக்கிரம் வஞ்சகம் எழுவதா!

தானிஷ் ( 1987-டென்மார்க்) வந்து டெனிஷ் படித்து
தமிழ் இலங்கைப்  பெண்ணாக முதலில்
முன் பாடசாலை ஆசிரியராகியது (1993) பெருமை.
முதற் தமிழ் இலங்கைப் பெண்ணாக தமிழ் கவிதை 
நூலுருவாக்கியதும்  (2002) ஒரு சாதனை


மூன்று தசாப்தத்திலும் அதிகமாக டென்மார்க்கில்
மூத்த  பன்முகப் பெண் படைப்பாளி.
மூத்த இணையத்தளமெனது ' வேதாவின் வலை '
மூடியது இலவச அளவு நிறைய.
மூச்சாகத் திறந்தேன் இரண்டாவது இணையம்.

கோலோச்சிய  முதல்  "வேதாவின் வலை "
கோமளமாய் " வேதாவின் வலை.2 " உதித்தது.
கோவைக்கவி.வேட்பிரஸ்.கொம்  ஆங்கிலத்தில்.
கோவைக்கோதை.வேட்பிரஸ்.கொம் இரண்டாவதாக.
கோலூன்றியது  ஐந்து தமிழ் நூல்கள் பிரசவம்.

இரண்டாவது இணையத்தில் " என்னைப் பற்றி  "
திரண்ட தகவல்கள் அழுத்தினால் அறியலாம்.
இணையத்தின் பொருளடக்கம் பாமாலை கதம்பம்,
தரமுடன் காதல், பெண்மை, இயற்கை,
தமிழ்மொழி, அஞ்சலி வாழ்த்துப்பாக்களெனப் பல.

இன்று " கோவைக்கோதை.புளோஸ்பொட்.கொம்  "
மூன்றாம் வலையாக திறந்துள்ளேன் வாருங்கள்!
நன்று தமிழ் பின்னுவோரைக் கண்டு
என்றும் பெருமைப்படுங்கள்!  பொறாமை வேண்டாம்!
பொன்றும் தீமை நெஞ்சைத் தாக்கும்.

உங்கள் ஆதரவே என்னை உயர்த்தும்

கவி வித்தகர்  வேதா. இலங்காதிலகம். டென்மார்க். 19-12-2018

(என் ஏழாவது நூலுக்கு முன்னுரையில் இக்கவிதையை இணைத்தேன்.)






236. (804 ) மதம்... மதம்





                                                             மதம்...   மதம்


சித்தார்த்தனின்  சிலைகளுக்குக் கீழ் 
சிரிக்கின்ற செந்தாமரையே நீ
சித்திரிக்ப்பட்டாயா புத்த மதத்திற்காய்!

தேவனின்  ஆலய வாசலில் 
தேவாராதனை கூறும் அலரிமலர்களே
தேவன் இயேவுக்காய்ப் படைக்கப்பட்டீர்களா!

மதம் ஒரு சிறையா!
கதம் அழித்து மாந்தரை
பதமாக்கும் நற் பாதையன்றோ!

கெட்டவன் விழுந்து விழுந்து
கொட்டுகிறான் பணம், வணக்கத்தை
வெட்டாமல் தீயதையேன்  வளர்க்கிறது!

மதம் ஒரு நடிப்பாகிறது
மனிதன் மதத்தையும் ஆயுதமாக்கி
புனிதமற்ற நடிப்பாகிறது.

இவன் என்று திருந்துவது!
நலமுடை உலகு எழுவதற்கு!

28-12-2019








புதன், 25 டிசம்பர், 2019

235 (803 ) மூழ்கி நீந்துங்கள்!...







மூழ்கி நீந்துங்கள்!... 

ஆலகம் (நெல்லி) போன்றது கவிதை.
கீலகம் (ஆணி) போன்ற பூவிதை.
கேலகன் (கழைக்கூத்தாடி) போன்று கோலங்காணும்.
தாலப்புல்லான (பனை)  திறன் உடைத்து.
தூலகம் (பருத்தி), தூலிகை (அன்னத்தின் இறகு) போன்றது. 

எழுத்தாளன் எழுத்துகள் பூவனம்.
அழுத்தி அச்சிடுதல் ஆவணம்.
கழுத்திலணியும் ஆபரணமாய் என்
எழுத்துகள் ஐந்து நூல்களாய்
விழுத்தியுள்ளேன் நூலகம்.ஓர்க் இணையத்தில்.

நீலமணியெனப் பிடிஎப்ஃ தொகுப்பில்.
பேலகமாய் (தெப்பம்) அசைகிறது தினமும்.
பீலகமான (எறும்பு) அழகு ஊர்வலம்.
மூலதனமான என் தமிழை
மூழ்கிப் படித்து மகிழ்ந்திடுங்கள்!!....





சனி, 21 டிசம்பர், 2019

234 (802 ) கலைக்கொரு தாலாட்டு.








இலக்கியத்தின் அரசி கவிதையால் 
கலைக்கொரு தாலாட்டு.

கலை என்பது இனத்தின் அடையாளம்
நிலைவாழ்வின் எச்சம்
கலையொரு வெளிப்பாடு
உள்ளுணர்வின் சுதந்திரம்.
கலைகள் பண்பாட்டு ரீதியாக
பண்பாடு கடந்த ஓரழகிய மொழி.

இயந்திரமாய் இயங்கும் வாழ்வில் ஓர்
இதமான இயக்கம் கலை. உடலின்றி
இதயமும் இங்கிதமாய்க் கலக்கும் வேட்கை.
இன்னுமின்னும் என்று மனதை இயக்கும்.

வல்லமையின் உயிர் கலை நுட்பம்
நல்ல கற்பனையின் உள் எழுச்சி.
பல்லின விலங்கியலற்ற மானுட வேறுபாடு.
வெல்லும் அகன்ற வரையறை கொண்டது.

பதினேழாம் நூற்றாண்டு வரை கலை
பயனுடை திறமை அறிவியல் நுட்பக் கணிப்பாயிருந்தது.
பின்னாக அழகியல்இ கற்பனை திறமை
பயனுறு கலை – நுண்கலைகளாகவும் பகுக்கப்பட்டது.

கலையும் பல சமுதாயத் தாக்கம் தாங்கியது.
சிற்பமோவியம்இ ஒளிப்படம்இ கட்புலக் கலையாகவும்
சொற்பொழிவுஇ நடனம்இ நாடகமிசை தற்காப்புக் கலையாகவும்
அரங்காடல் கலையாகவும்இ கதைஇ கவிதைஇ கட்டுரை
நாடகவியல் எழுத்துக் கலையாகவும் உள்ளது.

இன்று ஊடகக் கலை நவீனமென்றுள்ளது.
அன்று ஆயகலைகள் அறுபத்துனான்கு என்றனர்.
நன்றான கலைவரலாறு கற்காலம் தொடங்கி
உலகின் பல நாகரீகங்கள் கலைவரலாறு உள்ளடங்கியதே.

சரித்திரச் சித்திரங்களிற்கு
கலைகள் சிறந்த ஆதாரம்.
தூரநோக்கக் கண்ணாடியுமாகிறது.
இதை இப்படிச் சிறிதாகச்
சொல்லி முடிக்க முடியாது.
கலை பெருங்கடல்.

கவி வித்தகி - வேதா. இலங்காதிலகம்.
(இலங்கை) டென்மார்க் 24-5-2018



233. (801 ) மனிதம் நழுவுவதென்ன







மனிதம்   நழுவுவதென்ன

மனிதநேயம் பேணாமையென்ன
மகத்துவமாய் அதை எண்ணாமையென்ன
வனிதமற்று வாழாமையென்ன
வஞ்சித்து வாழ்வின் வளமிழப்பதென்ன

மனிதப் பிறவியென்ன 
குறி மறந்த நிலையென்ன
புனிதப் பிறவியென்று
அறிவை வளர்க்காமை என்ன

பழமை போற்றாமையென்ன
பெரியவரைப் பெயரிட்டு அழைப்பதென்ன
வழமையைப் பெயர்ப்பதென்ன
உயர் உறவைப் பேணாமையென்ன.

ஒருத்திக்கு ஒருவனென்ன
ஒருவனுக்கு ஒருத்தியான தூயதன்ன
கருத்தைப் பேணாமையென்ன
பெரும் தயக்கம் என்ன

பெண்மையென்ன தாய்மையென்ன
கண்ணெனச் சமனாகக் கருதாமையென்ன
உண்மையாய் பேணுதலாலென்ன
உலகில் பெருமை குறையுமாவென்ன

புத்தியைத் தீட்டாமையென்ன
கத்தியைத் தீட்டும் வன்முறையென்ன
சொத்தையாவதா உறவுகளென்ன
உத்தமமாகி இணைவதில் குறையென்ன

மதிக்க நடந்தாலென்ன
மதிப்பை பிறரிற்குக் கொடுத்தாலுமென்ன
துதிக்கும் பண்புகளென்ன
கதியின்றிப் பேதமாகிப் போவதென்ன.

மதமென்ன இனமென்ன
ஓடும் குருதியில் மாற்றமென்ன
இதயங்களில் கசப்பென்ன
மனிதரில் உயர்வு தாழ்வென்ன


2018







232. (800 ) செயலாய் நான்....1 - 2.





1.செயலாய் நான்

(துயங்குதல் - சோர்தல்.  தியாலம் - காலம்  

புயலாய்   இல்லாவிடிலும்    செயலாயென்  வினைகள்
அயலாரைப் பேணுதல,;  அன்பாய்  உறவாடுதல்,
இயலாதவருக்கு   உதவுதல்,  இன்பமாய்ப்  பேசுதல்,
தயங்காது கைகொடுக்கும்  செயலராய் நான்.
செயலோடு  இன்றி  உரையாக எழுதியும்
பயனுறு  சிறு  பாவென  கட்டுரையாய்
துயங்குதலின்றி  தியாலம் கருதித் தூவுகிறேன்
நியமம்  இதுவென்று  நிசமான  செயலில்.

குழந்தைகள்  பேணல்  கூடிக் குலவுதல்
வழக்கமாய்க்  கொள்ளும்  பழக்கமாய்  என்றும்
முழக்கமிடுதல்  இன்றி  முழுவதுமாய்  இயங்குவேன்.
உழவு போன்று தான் இதுவும்.
கழகம் அமைக்காது கழலுதலற்ற செயலிவை.
கிழமை    தோறும்    மூன்று   நாட்கள்
மழலை  போல  மனம் மகிழும்
சுழலுதலான இலவச சமூகசேவை  இது.
-------------- 
2. செயலாய் நான்....

(விமலன் - குற்மற்றவன்)

கல்வி கொடுத்தல் கண் கொடுத்தல்
வல்வினை என்று  வளமாய்த் தொடர்ந்தேன்.
கல்லும் கனிய  காதலாய்  பிள்ளைச்
செல்வங்களோடு  கலாச்சாரம்  செழிக்கவும் பாடுபட்டேன்
இல்லையென்னாது  அன்பை   இயல்பாய்க் கொடுப்பதால்
தொல்லையற்ற உலகு  தொழிற்படும் என்று
மெல்லக்  கூறி    மெய்யுணர்த்தி   வன்மை
பொல்லாமையென   மனதில் பொன்னில்  பொதிப்பேன்.

சமத்துவம்  எழுப்பி,  சகலரும்  சமமென்று
தமக்குள்  உணர்வது  தன்மையாம்  மனிதநேயமென்றும்,
அமரத்துவம்   பெற்றோருக்கு  அன்பு செலுத்துதல்,
இமயத்திற்கு  உயர்த்தும்   இழிந்தோருக்கு    உதவுதல் 
எமது கடனென உணர்த்துவேன்   செயலில்.
கமக்காரன்  உலகின்  கரு   என்பேன்
நிமலனையெண்ணி  மமதை நீக்கி கண்ணியமாய்
விமரிசனமில்லாச் செயலாய் விமலனாய் நான்.

 22-1.2019







231. (799 ) அழகு







அழகு

அழகு   மனிதர்  எண்ணம்  பொருளிடவியல்பு.
பழகிட  மகிழ்வு    திருப்தி  காட்சியநுபவமீயும்.
அழகாடை,  முடி ,  முகவழகிலும்,   நல்லொழுக்கம்,
கல்வியழகு,  பேரழகு,  கவர்ச்சியீர்ப்பு  நல்கும்.

வணிகமயவழகென   இப்போது  உருவாகி  மனிதனையாட்டுகிறது.
வணிதமிகு   மனவமைதி,  நிதானம்,   ஆரோக்கியம்,
பிணியற்றவுடல்   மட்டுமல்ல  தன்னம்பிக்கையுள்ளமேயழகு  தரும்.
துணிவுடன்   நாமினியர்,  திறமையாளரெனுமெண்ணமே  பேரழகீயும்.

(வணிதம் - செப்பம்)

 11-5-2017




வெள்ளி, 20 டிசம்பர், 2019

230. (798 ) (ஊடகம் காற்றுவெளி) மாட்டு வண்டி.- மிதி வண்டி









மாட்டு வண்டி.

மாட்டு வண்டி ஒற்றையாய் இங்கே
காட்டு வழியேகும் காளைகள் எங்கே
பாட்டுப் பாட மனசு ஏங்க  
காட்டு;க் கத்தலாய் குரலுமோங்க
கால்கள் ஆட்டிக் காற்று வாங்கி
நூல் கொண்டிழுக்காத காளை வண்டி.
கட்டுச் சோறும் கன்னியு மிருந்தால்
கூட்டுக் கவியாய் காதலைப் பாடலாம்.

20-4-16    

மிதி வண்டி 

மிதிக் கட்டைகளைக் கால்களால்
மிதித்து உந்தும் சக்தியால்
மிதி வண்டி பெயரானது.
பத்தொன்பதாம் நூற்றாண்டறிமுகம் ஐரோப்பாவில்.

உலகெங்கும் பாவனையில், தபால்காரர்,
உடலுறுதி காப்போர், பயணக்காரர்,
உலக மிதிவண்டிப் போட்டிக்காரர்
குழந்தைகள் விளையாடவும் பயனுடைத்து

பொருட்கள் கட்டிக் காவவும்
பொறுமையாய் காதலர் சவாரிக்குமுதவும்.
என் அப்பா ஓடினார்.
நானும் ஓடி மகிழ்ந்தேன்.


5-6-2016



திங்கள், 9 டிசம்பர், 2019

229. (797 ) ஊடகம் - ஜீவநதி - கீழடி







மனமார்ந்த நன்றி ஜீவநதி குழுவினருக்கு

கீழடி

சங்ககாலச் சம அடியெனும்
தொல்லியல் அகழாய்வு அடி
தமிழனும் சங்ககாலமுமான தொடர்படி
சிவகங்கை மாவட்டக் கீழடி
தமிழனின் பெருமித அடி.

இரண்டாயிரத்து அறுநூறு ஆண்டடிக்கு
முன்னானது தமிழ் எழுத்தடியென
அறியப்பட்டஉண்மை ஆய்வடி
இரண்டாயிரத்து இருநூறு வருடவடி
பழமையானதென்ற நிரூபண நிசவடி.

ஆய்வு தமிழனுக்கு மேலடியே
முழுஉலகும் வியந்த அடி
முன்னோர் கதை சொல்லுமடி
பாண்டிய நாணயங்களாம்இ வணிக 
ஆதாரம் ரோமானியர்களுடனாம்

சங்கஇலக்கியம் கற்பனை என்றதை
நொறுக்குமொரு நகரநாகரீகம்கண்டனர்.
சாதி மத குறியீடுஇ தாலி இல்லை.
ஆயுதம் தாங்கிய உருவமில்லை
தாய்த் தெய்வ வழிபாடே ஊகம்.

பண்புடை வைகைக் கரை நாகரீகமடி
மண்ணுக்குள் பாண்டியநாடு தாய்மடி
கண்முன்னேயான ஆவண சாட்சியடி
யூப்பிரட்டீஸ் ரைகிறீஸ் காலம் கடந்தோர்.
சங்ககால வசிப்பிடம் கீழடி

 3-10-2019. 




சனி, 7 டிசம்பர், 2019

228. (796 ) ஞானம் சஞ்சிகையில் ---------- கீழடி








இலங்கை ஞானம்  மாத சஞ்சிகையில் எனது கீழடி பற்றிய கவிதை
மனமார்ந்த நன்றி ஞானம் குழுவினருக்கு.

கீழடி அகழ்வாய்வு -

கீழடியின் தாய்மடி குமரிக்கண்டமாம்.
கீழடி குமரிக்கண்ட மதுரையாம்.
வைகைநதி  சுமந்து சென்ற
வைர இரகசியங்கள் இதுவோ!

தமிழ் வரலாற்றின் நங்கூரம்
அமிழ்ந்திடாத நன்னம்பிக்கை முனை
இரண்டாயிரத்து அறுநூறு ஆண்டு
பழைமையான கீழடி நாகரீகமோ!

முழுமை நாகரீக வாழ்வினாதாரம்
யானைத்தந்தச்  சீப்பு,  தாயக்கட்டை  
அணிகலன்கள்,   ஆதிச்சநல்லூர்,   அரிக்கமேடு
காவிரிப்பூம் பட்டினத்திலும் ஆய்வு பெருமளவில்.


பானைகளில் பிராமிய எழுத்து
ஆதன்,   முயன், வேந்தன்
பெயர்கள்,   வணிகம்,   தொழில்நுட்பம்
கலாச்சாரம் ஓங்கி  இருந்தமை
அறுபது விளையாட்டுப் பொருட்கள்
பேரினத்தின் ஆய்வுப் பேரொளி

நகரநாகரீக ஆதார அடி
ஆயிரத்து ஐந்நூறு தொல்பொருட்கள்
தலைநிமிரச் சொன்னது தமிழனை.
மொகஞ்சதரோ ஹரப்பா சிந்துவெளிக்கு
முந்தியவர்கள் வாழ்ந்த ஆதாரங்கள்.
மூவாயிரம் ஆண்டுக்கால நாகரீகம்.

 3-10-2019





திங்கள், 2 டிசம்பர், 2019

227. (795 ) வாசிப்பு. கற்பனை- அறிவு (தியானம்).....








வாசிப்பு. கற்பனை- அறிவு (தியானம்).....

கண்ணால் பார்க்கும் மரம் அழகு
கண்ணால்   பார்க்க முடியாதது   வேர்களாக
எண்ணத்தில்  சில   நூல்கள்(வரிகள்) புரியாது
கண்ணால்    காணாத   வேர்கள் போல

வாரம் ஒரு  முறை தவறாது 
வாசிகசாலையில் புத்தகங்கள் எடுத்து
வாரப்பாடாய் வாசித்து மகிழ்வார் சிலர்.
வாசிப்பு வாசனை வேண்டாம் என்பார் சிலர்.

புத்தகமும் ஒரு ஆவணம் தான்
எத்தகைமை வாழ்வென வாழ்பவன் மனிதன்.
இத்தகைமை   என்று   வாழாதது விலங்குகள்.
புத்தகம் வாசித்தல் நல்ல கலை

நற்குணங்களை  நம்முள் விதைப்பது நூல்கள்.
அற்புத உணர்வுடன் இன்பமீவது நூலகம்
தன்னம்பிக்கை வாசிப்பால் பெருகுவது நிச்சயம்.
வாசிப்பும் ஒரு வகைத்   தியானமே.

 2-12-2019








ஞாயிறு, 1 டிசம்பர், 2019

226. (794 ) மனதை வெள்ளை அடிக்கலாம்.






மனதை  வெள்ளை அடிக்கலாம்.

அன்பென்ன அன்பு! அலட்சியம் செய்திடு!
பண்பென்ன பண்பு! பணத்தைக் கையிலெடு!
இன்பத்தின் துணயைத் துறைமுகம் எட்டியதும்
துண்டித்துவிட்டுத் துச்சமாய் எண்ணலாம்.

குன்றில் ஏறிக் குவலயத்தில் நிமிர்ந்திடல்
என்றும் மாமனிதன் கொள்கையாக்கலாம்.
நன்று நல்வழி தைரியமாயச் செல்வதற்கு.
நன்றி என்பது வைரவர் வாகனத்திற்கு.

செப்பிய உண்மை வாழ்வில் ஈனம்
தப்பான பண்பிது அழிவின் பாதை.
உப்பிட்டு நாம் உணவு உண்கிறொம்
' சப் ' பெனும்  இவ் வாழ்வைத் தடுத்தல் தர்மம்.

உரியவன்  வாழ்வைச் சுரண்ட எண்ணுதல்
எரிந்ததில்  மீதியை எடுத்திட எண்ணுதல்
அரிய மனிதத்தின் கரிய பகுதியாம்
பெரிய மனசோடு வெள்ளை அடிக்கலாம்.

 8-5-2004

( தமிழ் விசை.கொம் இணையத்தளத்தில்  பிரசுரமானது.
இலண்டன் ரைம் வானொலியில் வியாழன் கவிதையில் திரு. அதிபர் நடாமோகன் வாசித்தார்.)




428 (961) ஆலமர விழுதற்ற அவலநிலை மனிதக்காட்சிச் சாலை.

                       ஆலமர விழுதற்ற அவலநிலை மனிதக்காட்சிச் சாலை மிருகக் காட்சிச் சாலை மாறி மனிதரே மறந்த மனிதம் போனதால் மனிதக் காட்சிச் சாலை...