செவ்வாய், 20 செப்டம்பர், 2022

393. (926) என்ன மனிதம்!!!!!

 


        




என்ன மனிதம்!!!!!





வயதானவர்களின்  நிம்மதியை

உயர்நிலையாகப் பாதுகாக்க

செயல்-நடைமுறைகளில்  இயல்பாய்

வியப்பின்றி நடையிடலாம்.

தயக்கமின்றி நயங்காட்டும்

சுயநலமற்ற நியதியாளராகலாம்.

00

கைபேசியில் பேசவும் கைராசியற்ற

கையறு   நிலைமை துன்பம்.

வைகையாறாகச் சுதந்திர வரமோடு

தைரியமாகப் பேசுதல் இன்பம்.

நையாண்டி நிலைக்குச் சென்று

பைத்தியத்     தனமாதல்   பசுமையல்ல.

00

குரலைக் கே;ட்கவும்

தரமான   தகவல் 

அரங்கேறலை அறியவும் 

இரங்க வேண்டுமா!!!!

இயற்கையாய் வெளியாகாதா!!!!!

இதயம் இறுக்கமா!!!!!

இலுப்பைக்    கொப்பை

உலுக்குதலாக  உலுக்க வேண்டுமா!!!!!


. 20-9-2022

செவ்வாய், 13 செப்டம்பர், 2022

392. ( 925) ஆண்டவனின் புதிய உலகம்.

    



  


ஆண்டவனின் புதிய உலகம்.   

   


அதிகம்   கெட்டு    விட்டது

அதிகாரம்  தலைவிரித்தாடுகிறது.

அதிக  சொத்து சேர்த்து

ஆதி இயக்கர் நாகராகிறார்

புதிய உலகம் தேவையே

00

ஆண்டவன் என்னை அழைத்தால்

நாண்டு கொண்டு மறுப்பேன்.

வேண்டுதலும் ஒன்று உண்டு.

தோண்டித் தமிழ் படிக்கும்

பாண்டித்தியத்  துணைகள் வேண்டும்

00

மாண்புடை எண்ணங்கள் விதைக்க

மாசற்ற அறிவு வயல்

மழலையில் தொடங்க வேண்டும்.

மண்ணிலே அகரம் எழுதி

மண்ணாசை பெருக்க வேண்டும்.

00

மகிமையுடை தன்னம்பிக்கைத் தூண்

மகாசக்தியாக மழலைகளிடம் ஊன்றி

மனதில் வஞ்சகம் பொறாமை

மகுடம்  ஏறாது  நேச

மகாநதி பெருக்க வேண்டும்

00

இயற்கைச் செய்வினைகள் உயர்த்தி

அயர்ச்சியற்று உழவு பெருக்கி

சுயநலப்   பேய்   விரட்டி

சுயாதிபதியாய்  புது  உலகம்

செயற்கையின்றிச் செயித்தல் வேண்டும்.

00

சோம்பலற்ற    சத்திய நல்வினை

சுயகட்டுப்பாடு  முதுமை  போற்றுதல்

பயமற்ற பெண்மை வாழ்வு

பதியும் மதிக்கும் பெண்மை

புதிய உலகில் வரட்டும்.

00

இறை  உணர்வு பெருகட்டும்

கறை    துடைத்தால் உலகுய்யும்.

குறையற்ற    உழைப்பு  இன்பம்.

நிறைவு தராது அகந்தை.

சான்றோர் நட்பு புத்துலகீயும்.

00


-29 -6-2022


புதன், 7 செப்டம்பர், 2022

391. ( 924) ( ஊடகம் ) வாழ்வைச் செதுக்கி எடு!

 



  





இலங்கையில் வெளிவரும் ஞானம் சஞ்சிகையில் எனது கவிதை.

மிக்க நன்றி ஞானம் குழுவினருக்கு.

00


வாழ்வைச் செதுக்கி எடு!



(அனித்தியம் - பொய்.  அனிதம் - கணக்கில்லாதோர். )

00 

எதுவும் கடுமையாய் வரும்

பொதுவாய் மனது உடையும்

அதுவும் கடந்து போகும்!

இதுதான் வாழ்வு!  நீயும்

செதுக்கி எடு சிந்தனையால்!

முதுமை வருமுன் முயன்றிடு!

00

மனிதனை மாற்றும் காதலே

அனித்தியத்தை முற்றாய் அழித்து

புனிதன் ஆக்கும் காதலே

அனிதம் பேர் உயர்வதும்

எனினும் அழிந்தோரும் உளர்.

தனிவிதம் மழலைக்  காதல்

00

விழுத்த முடியாத வீரநடையுடய

எழுத்துலகம் ஒரு தனிப்பாதை

எடுக்க முடியாதது யாராலும்

விசமமாகச் சிலரை உயர்த்தலும்

விளையாட்டாய்த் தாழ்த்துவதும் தொடரும்

விற்பன்னராய்த் தொடரும் வாழ்வு

00

எழுத்ததிகாரம் நல் தகவுடைத்து

அமிழாத மரபதிகாரம் மகத்துவமுடையது

குமிழும் கவிதையதிகாரம் வித்துவமுடையது

சுழலும் தூங்காத அலையாக

நீங்காத முயற்சி வேண்டும்

மங்காத காதலில் தமிழௌட்டும்!

00

 26-4-2022

428 (961) ஆலமர விழுதற்ற அவலநிலை மனிதக்காட்சிச் சாலை.

                       ஆலமர விழுதற்ற அவலநிலை மனிதக்காட்சிச் சாலை மிருகக் காட்சிச் சாலை மாறி மனிதரே மறந்த மனிதம் போனதால் மனிதக் காட்சிச் சாலை...