ஞாயிறு, 31 அக்டோபர், 2021

365. (938) கண்கள்

 






கண்கள்

00
சொற்கள் இல்லை அற்புத நாதமில்லை
பொற்பதமாய்க் காண்பதை நற்பதமாய் இரசிக்கும்.
பழுதற்ற காதலையும் எழுதும் கண்கள்
பார்க்கும் - சிரிக்கும் - பேசும் கண்கள்
00
அதிசய உறுப்பால்  இரவுப் பார்வையுண்டு
அதிசயம் விலங்குகளிற்கு அதிக சக்தியமைந்தது
கண்கள் பார்வையால் எண்ணம் உணரலாம்
கண்கள் மீன்களாகக்  கற்பனையில் மலருமாகிறது
00
தென்றலில் மயங்கும் கண்களின்
எடை ஏழு புள்ளி  ஐந்து கிராம்
கட்டிப் போடும் அச்சுறுத்தும்
பொக்கிசமாகப் பாதுகாக்கலாம்
00
தண்மைப் பனித்துளி கண்கள்
கண்ணுக்குக் கண்ணோக்கிக் கருத்திட்டால்
உண்மையின் அளவீடு தெரியும்
கண்ணாடியாய் மனதைக் காட்டும்
00
இளமைக்கு விருந்தாகும் மருந்தாகும் கண்கள்
களமான பள்ளியாகும் பார்வை விருந்து
அம்சுடர் நெடுவேல் - மானின் விழி
மனித இச்சைகளைப் பார்வை தீர்க்கிறது
00
கண்கள் ஓவியம் காவியம் வரையும்
கண்ணுக்கு விருந்து கள்ளப் பார்வை
கண்புரை முதுமையில் கடின தொல்லை
கருத்தாயுதவும் கணிக்கும் அறுவை சிகிச்சை
00
செந்தணல் கவி -  வேதா. இலங்காதிலகம்
டென்மார்க்  28-10-2021







வெள்ளி, 15 அக்டோபர், 2021

364. (937) வான் புலம் வளர்க்கலாம்

 





வான் புலம் வளர்க்கலாம்


(வான் புலம் - உண்மையறிவு)

00

வள்ளல்   தன்மையாய்

வடிவாகச் சமைத்தலும்

வள்ளிசாக அலங்கரித்தலும்

வாழ்வு   அல்ல!

வான் புலம் வளர்க்கலாம்!

00

வரம்பின்றி  அறிவு

வசீகரித்தலும்  மொழிசார்ந்த

வல்லமைத்   தகைமையும்

விசுவருபமாய்   வளர்த்தெடுத்தலும்

வழுதலற்ற விதைப்பாகட்டும்

00

உள்ளாடும் அறிவை

உயர்த்து!  உக்கும்   உடல்

உள்ளதைச் சொன்னால்

உள்ளம் வலிப்பதேன்!

உயிர்ப்பாகுமறிவு  உச்சாணிக்கேற்றும்!

00

கவியருவி  வேதா. இலங்காதிலகம் - டென்மார்க் 15-10-2021.









செவ்வாய், 5 அக்டோபர், 2021

363. (936) (ஊடகம் . மனிதர்கள்.)

 







-(இலங்கை   சஞ்சிகை ஜீவநதி  யில்.  ஜீவநதிக்கு  மிக்க நன்றி  22-3-2021)


மனிதர்கள். -

00


மனிதர்கள் மனம் கடல்

புனித  குணவிரிப்பில் அசுத்தங்களை

வனிதமாகச் சுத்திகரிக்காது அதனுள்

விழுந்து அழிகின்றனர் சிலர்

அறிவோசைi அன்போசையை நிதம்

குறியாக அத்திவாரமாக்கும் பெற்றவர்.

பொறியாகி அனுபவங்கள் பொசுக்கியும்

தறித்தும் வீழ்த்தப் பார்க்கிறது. எம்மை.

00

பொல்லாத் துரோகங்களும்  அவமானங்களும்

வல்லமையாய் ஏமாற்றித் துகிலுரிய

செல்லாது இது என்னிடமென்று

நல்ல அத்திவாரத்தை உணர்ந்து வாழ்!

வேடிக்கை மனிதராக இன்றி

வாடி வீழாது---------இரக்கம்     

கூடிய அன்பு கருணையோடு

தேடித் தலைவனாகு! தெய்வமாவாய்!

00

வள்ளலாகித் தியாகி ஆகு!

எள்ளலற்ற வாழ்வை நோக்கு!

கொள்முதலான பகுத்தறிவை வளர்த்து

குள்ளமனமற்ற பேரறிவாளன் ஆகு!

மனிதநேயம் நிறைந்தவன் மனிதன்.

மனிதம் எங்கே தேடுகிறோம்.

மனிதம் பாதி மிருகம் முழுவதுமாய்

புனிதம் கெட்ட  மனதர்களாகிறாரே   இன்று.

00


  6-11-2020





வெள்ளி, 1 அக்டோபர், 2021

362. (935) விரலோவியம்.

 





விரலோவியம்.
00

அபிநயமும் ஓருவகை விரலோவியம்
அற்புத நான்கு பிரிவுகளாய்
ஆகார்ய, வாசிக, ஆங்கிக, சாத்வீகமாய்
கருத்தை உணர்வை கலையாக்குதல்.
விரலோவியம் (கைமுத்திரை) நாட்டியத்தில் முதன்மை.
00
ஓவியம் விரலோவியக் கவின்கலை
ஆவியுருகப் பாளை விரியும் வனப்பு
தாவி மனமீடுபடும் கலை
நீவுதலால் (பூசுதலால்) கருத்து நிறப்பூச்சால் வெளிப்பாடு
ஆவணமாகியது மோனலிசா ஓவியமும்.
00
கனவுகளின் கூடாரமாக நர்த்தனமிடும்
தினவெடுக்கும் விரல்கள் அர்த்தமுடனசைந்து
ஆனந்த விருந்திடும் விரலோவியம்.
ஆனந்தித்து அப்பும் குழந்தைக் கிறுக்கலும்
ஆனந்தபரவசம் வண்ணக் கலவையால்
00
புள்ளியிட்டுக் கோலமிடுதல் மனம்
அள்ளும் வல்லவொரு விரலோவியம்.
கொள்ளையிடும் கவிதைக்குப் பெயரென்ன!
தள்ளமுடியாத விரலோவியம் அன்றோ!
தையல் பின்னலென எத்தனை எத்தனை!
00
19-2.2020






428 (961) ஆலமர விழுதற்ற அவலநிலை மனிதக்காட்சிச் சாலை.

                       ஆலமர விழுதற்ற அவலநிலை மனிதக்காட்சிச் சாலை மிருகக் காட்சிச் சாலை மாறி மனிதரே மறந்த மனிதம் போனதால் மனிதக் காட்சிச் சாலை...