திங்கள், 21 ஜூன், 2021

351. (914) கவிதையே தெரியுமா!

 





கவிதையே தெரியுமா!

00

உயிர்மொழிகள் திரண்டு உருவாக்கும்

உணர்வு நிகழ்வு சமூகத் தாக்கம்.

பூவிதையாகப் பாவிதை தூவும் சமூகவயல்

கவிதையே தெரியுமா தொலைக்காட்சி அரங்கு.

பாகுபாடின்றி மனஎண்ணங்களை விதைப்போர்

பாணராகிப் பங்கெடுக்கும் கருத்துடைக் களம்.

பாவும் கருத்துத் தொலைபேசி   ஊடாக

பகிர்ந்திடும் வாரத்தின் ஒருநாள் உற்சவம்.

00

வளமிகு கலை கவிநய ஆளுமையாளர்

வரைப்புடுத்தும் நிகழ்வு, விதைப்பு சிறப்பு

வாஞ்சையுடன் சிஐ ரிவி வான் களத்தை

வாய்ப்புடன் ஆவலாய் வெள்ளியில் எதிர்பார்ப்பேன்.

வாரமொரு தலை;பு நீங்கள் இடுவதும்

வளமுடன் எமது தலைப்பில் கவிதையும்

வள்ளிசாய் இருவகையிலும் கவிதை வளைக்க

வாக்கு நயம் காட்ட நான் தயார்.

00

பூகோள மறுபகுதி மக்களும் கவிதைகளைப்

பூவிரிப்பாய்க் கேட்கவும் கவிதைகள் தரவும்

பூரண வாய்ப்பு கவிதையே தெரியுமா

தோகை விரிக்கும் இலக்கிய அழகு

தோரணம் கட்டிய பொலிவு தொலைக்காட்சிக்கு

வாகைசூடி வாய்மலரும் கவிதைகளின்

வாசம் அறிந்து புதிதாய்ப் பலரும்

வாசிக்கட்டும் கவிதைகள் திறமை வானெட்டட்டும்

00

29-6-2006

(வள்ளிசாய் - நேர்த்தியாய், சரியாய்)ச

சிஐ ரிவியில்----







செவ்வாய், 8 ஜூன், 2021

350. (913) சூழ்வினையாய் வந்த சூர்ப்பனகை.

 




சூழ்வினையாய் வந்த சூர்ப்பனகை.     

00

இரத்தம் குடிப்பவளாகவும், பாம்பை வளையலாகவும்,

இரத்தப் பலி கொள்கவளுமான அரக்கர் குல

இரத்தவெறி அரசி தாடகையின் கொடுமை

இரக்கமற்று அதிகரித்ததால் இராமன் அழைக்கப் பட்டார்.

00

பெண் கொலையாவென்று இராமர் தயங்கினாலும்

எண்ணியபடி தாடகை வதம் நடந்தது

கண்ணியமாய் ஈமக்கிரியைகள் தாய்க்குச் செய்ய

கண்ணான புதல்வரை இழைத்தார் இராமர்.

00

இங்கு இராமரின் ஈகைக் குணம்

இனிதாய்  வெளியானது கொன்றது ராமராயினும்

இறுதிச் சடங்கை நிறைவேற்றப் கதல்வரை அழைத்தார்

இசைந்து மாரீசன் சடங்கை நிறைவேற்றினான்.

00

விடை பெற்ற மாரீசன் தம்பி

வினையானவன் சுபாகு கெடு செய்வான்

விவரமாக இருங்கள் என்று விலகினான்.

விக்கினமுடைய சுபாகு மாரீசனைக் கொன்றான்.

00

13-9-2017







வியாழன், 3 ஜூன், 2021

349. (912) (என் மன முத்துகள் - 17)

 





 (என் மன முத்துகள் - 17)


மனிதர்கள்    ஒருவரையொருவர்   அடக்கவும்,    ஆளவும்   எண்ணும்  போது   பரந்தாமன்  சிறீ கிருஷ்ணன்     கீழிறங்கி   வந்து   அருச்சுனனுக்குச்   சாரதியாக  இருப்பேன் என்கிறார்.

  எமது  நேர்மை, துணிவில்   ஆண்டவனே   நம்மை   சாரத்தியம் செய்கிறார். 

 அநியாயம்  செய்பவர்களை,  அநீதியாக நடப்பவர்களை   நிச்சயம்   ஆண்டவனே  பார்த்துக் கொள்வார். அவாகளது  ஆணவம்  பிறரை மதிக்காத தன்மையை  ஆண்டவன்   நிச்சயம்   பார்த்துக்   கொள்வார்.






428 (961) ஆலமர விழுதற்ற அவலநிலை மனிதக்காட்சிச் சாலை.

                       ஆலமர விழுதற்ற அவலநிலை மனிதக்காட்சிச் சாலை மிருகக் காட்சிச் சாலை மாறி மனிதரே மறந்த மனிதம் போனதால் மனிதக் காட்சிச் சாலை...