செவ்வாய், 9 பிப்ரவரி, 2021

335. (898) (ஊடகம் - ஞானம்) ஒன்றுபட்டால் நமக்கு ஒளி

 



இலங்கை  ஞானம் சஞ்சிகைக்கு மனமார்ந்த நன்றி


ஒன்றுபட்டால்  நமக்கு ஒளி  


ஒன்றுபடுதலால்  உண்டு  வாழ்வு

அன்றேல் அண்டும் கேடான தாழ்வு

நன்றே கூட்டுமுயற்சியாலில்லை  வீழ்வு

வென்றே பண்போடு நடத்துவோம் வாழ்வு


கங்கை நதியருகு கோதுமைக்கு அன்று

காவிரி வெற்றிலை மாறுகொண்டு

சிங்கமராட்டியர்  கவிதைக்கு சேரத்துத் தந்தங்கள்

பரிசளித்த பண்டமாற்று நல்லொற்றுமை


நேர்மையாம் நல்ல ஆயுதம் கொண்டால்

ஆர்வமுடன் வாழ்வு நேராகச் செல்லும்

பார் போற்றக் கள்ளமற்ற சிந்தனையுண்டானால்

பேர் சொல்ல ஒன்றுமையாய் வாழலாம்


குழந்தை மனதிருந்து நஞ்சு விதைக்காது

முழங்கும் மதம் சாதி பேதமின்றி

வழங்கினால் சகோதரத்துவம் சமுதாய ஒற்றுமையை

புழங்கும் ஒன்றுபடலால் இன்பம் பெருக்கலாம்.


தீர்மானங்களின் தெளிவு நல்ல தலைமைத்துவம்

சேர்த்தணைக்கும் உலகில் நன்மையாம் ஒருமைப்பாட்டை

வார்த்திடுங்கள் ஒன்றாகி உலகினை. ஒரு

சார்பற்ற அன்பு இன்பக் கேணியாக


27-1-2017






வெள்ளி, 5 பிப்ரவரி, 2021

334. (897) (ஊடகம் - காற்றுவெளி) மனரேகைகளின் பரமபதம்.

 





காற்றுவெளி சஞ்சிகை 2021- மாசி மாதம் எனது கவிதை...

பிரசுரிப்பிற்கு மனமார்நத நன்றிகள்


மனரேகைகளின் பரமபதம்.


(அகிற் கூட்டு – சநதனம். சுகித்தல் .நலமாக. 

ஆரணித்தல் - காவல் செய்தல்  இரணியம் - பொன்);


அகம் திறந்து பாராட்டி

முகம் மலர்ந்து வரியொட்டல்

மகிமையுடன் திறனை ஒப்புதலாக்கும்.

அகிற்கூட்டு வார்த்தை அங்கீகாரம்

சுகித்தலாகி வேர் நீண்டு

திகிலழித்துத் திராணியேற்றும் சிகரமேற.


கரணமடித்துப் பாலனுக்கும் பலமேற்றும்

அரணித்தலாகும் அன்பு வார்த்தைகள்

இரணியமாகும், மழையாகும் இதமிகுமொழிகள்.

பரணிபாடும் பாங்காக எழுத்துலகில்.

உரமிகு அங்கீகார மொழியால்

தரமற்றுத் தோற்பவனும் நந்தவனமாகும் நிலையுண்டு


கனமான தோல்வியால் நிலைமாறினும்

தனமாகும் பாராட்டால் வனமாகும்

மனதின் ரேகைகளின் பரமபதம்

தினம் வெற்றிக் கதிரொளி விரிக்கட்டும்.

வானளாவிய அதிகாரம்  ஏளன 

இளக்காரம் தோல்வியின்றுp உயரட்டும்.


இனிய வலியகற்றும் மென்மை

கனியும் இதமுடை வார்த்தைகள்.

மனித இதயத்துச் சிறகுகளே

புனிதமாய் அடைகாக்கிறது வார்த்தைகளை.

காலையோ மாலையோவெனும் இதமான

மானசீக  பேறுதான் மொழி.


தீராநதி ஓயாத போராட்டம்

சீராயோடும்  நிபந்தனையற்ற எழுத்து

சோராது இதயத்துச் சிறகுகள் வெப்பமாகி

போராக ஏவாது இதமாயெழுதுவது

மனித நுண்ணறிவின் விரிப்பு

புனிதப் பழமாகும் கருத்து.


 25-10-2020






428 (961) ஆலமர விழுதற்ற அவலநிலை மனிதக்காட்சிச் சாலை.

                       ஆலமர விழுதற்ற அவலநிலை மனிதக்காட்சிச் சாலை மிருகக் காட்சிச் சாலை மாறி மனிதரே மறந்த மனிதம் போனதால் மனிதக் காட்சிச் சாலை...