திங்கள், 31 மே, 2021

348. (911) - ஊடகம் சிட்னி வானொலி ... - பணம்

 

https://www.facebook.com/sownthary.sivananthan/videos/10159760329638984


அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் 19/12 & 26/12/20 சனிக்கிழமை காலை 9.15 மணிக்கு நடைபெற்ற "கவிதை பேசும் நேரம்" என்ற வானொலி நிகழ்ச்சியில் 'பணம்' என்ற கருப்பொருளில் இடம்பெற்ற கவிதை. எழுதியவர் வேதா இலங்காதிலகம் - டென்மார்க்.




பணம்


அந்தியம் வரை தேடும்

சிந்தனை மாற்றும் கருவி.

அந்தரப் படுத்தும் ஆறுதல்

பந்தாடும் பகுத்தறிவாளனையும்  பணம்.


கடதாசிக்குக் கிடைத்த வெகுமதி

அட!  இலக்கங்களின் பெறுமதி.

நாட்டுக்கு நாடு மாறுபடும்

கட்டாய தேவை - இலட்சுமிகடாட்சம்.

வட்டி குட்டியாகிப் பெருக்குவர்.


மனித குணமறியும் உரைகல்.

கனமாக இல்லையெனில் தரித்திரம்.

தினமும் தேவையரங்கேற்றும் சூத்திரம்.

பணமென்றால் பிணமும் வாய்திறக்குமாம்.

பணத்திலும் சிறப்பு திடவுடல், மனம்.


பணம் பத்தும் செய்யும்.

பணம் மட்டுமெதுவும் செய்யாது

உழைப்பாளி உழைத்துப் பெறுவான்.

கருமி உண்ணாது உடுத்தாது சேர்ப்பான்.

ஆழ்ந்தவொரு போதை பணம்.


சீதனமென்று சீர்  கெடுக்கும்

ஆதனமென்று சோம்பல் வளர்க்கும்.

ஊதிய ஊற்றென்று  சூதாட்டமிணையும்.

போதியளவு பணத்தேட்டம் மதிப்பு – நிலையுயர்வு.

சாதிக்கும் உந்து சக்தியுமாகும்.


ஏழை ஏங்கும் பொக்கிசம்.

பாதாளம் வரை பாயும்

பொறாமை, பெருமை  அழித்தால்

பணம் பேரின்ப வீடு

அளவோடு பணம் சேர்ப்போம்.


  20-12-2020








ஞாயிறு, 30 மே, 2021

347 (910) அன்பின் நீரூற்று....

 




அன்பின்  நீரூற்று....


உதயமான கோவிட் உக்கிரத்தால்

இதயம் தீப்பிடிக்காத நிலையே

இதமான நோய்த் தடையூசியால்

இதயத்தில் ஓரளவு அமைதி 

பேணி அன்பினைப் பெய்தோம்

00

காணாத செல்வங்களைக் கண்டோம்

வீணாளாகாது அன்பினை விதைப்போம்

வாணாளில் கொரோனா வேண்டாம்

ஓய்ந்திடாது ஆசீர்வதிக்கப்பட்ட ஓதுவானாய்

வாய்த்த இன்பம் வளரட்டும்

00

இறக்கை பிடுங்கிய இசைப்புள்ளாக (குயில்)

திறக்க  முடியாத  கதவுகளாகவும்

துறந்தவர் போலப் பேரர்கள்

மறந்திடட்டும் இனி அதை

சிறப்புடன் புது இரத்தம் ஓடட்டும்.

00

சுட்டி மனம் சுகிக்கட்டும்

கட்டி அணைப்பதைக் கவனமாய்

கெட்டியாக மடித்து மனப்

பெட்டகத்தில் வைக்கப் போகிறேன்

ஒட்டியுறவாடக் கிட்ட வாங்கோ!


30-5-2021






428 (961) ஆலமர விழுதற்ற அவலநிலை மனிதக்காட்சிச் சாலை.

                       ஆலமர விழுதற்ற அவலநிலை மனிதக்காட்சிச் சாலை மிருகக் காட்சிச் சாலை மாறி மனிதரே மறந்த மனிதம் போனதால் மனிதக் காட்சிச் சாலை...