https://www.facebook.com/sownthary.sivananthan/videos/10159760329638984
சௌந்தரி கணேசன் is with Vetha Langathilakam.
பணம்
அந்தியம் வரை தேடும்
சிந்தனை மாற்றும் கருவி.
அந்தரப் படுத்தும் ஆறுதல்
பந்தாடும் பகுத்தறிவாளனையும் பணம்.
கடதாசிக்குக் கிடைத்த வெகுமதி
அட! இலக்கங்களின் பெறுமதி.
நாட்டுக்கு நாடு மாறுபடும்
கட்டாய தேவை - இலட்சுமிகடாட்சம்.
வட்டி குட்டியாகிப் பெருக்குவர்.
மனித குணமறியும் உரைகல்.
கனமாக இல்லையெனில் தரித்திரம்.
தினமும் தேவையரங்கேற்றும் சூத்திரம்.
பணமென்றால் பிணமும் வாய்திறக்குமாம்.
பணத்திலும் சிறப்பு திடவுடல், மனம்.
பணம் பத்தும் செய்யும்.
பணம் மட்டுமெதுவும் செய்யாது
உழைப்பாளி உழைத்துப் பெறுவான்.
கருமி உண்ணாது உடுத்தாது சேர்ப்பான்.
ஆழ்ந்தவொரு போதை பணம்.
சீதனமென்று சீர் கெடுக்கும்
ஆதனமென்று சோம்பல் வளர்க்கும்.
ஊதிய ஊற்றென்று சூதாட்டமிணையும்.
போதியளவு பணத்தேட்டம் மதிப்பு – நிலையுயர்வு.
சாதிக்கும் உந்து சக்தியுமாகும்.
ஏழை ஏங்கும் பொக்கிசம்.
பாதாளம் வரை பாயும்
பொறாமை, பெருமை அழித்தால்
பணம் பேரின்ப வீடு
அளவோடு பணம் சேர்ப்போம்.
20-12-2020
வாழ்த்துகள் சகோதரி
பதிலளிநீக்கு