செவ்வாய், 22 செப்டம்பர், 2020

304. ( 867) (ஊடகம் - மண்.) பசுந்தான பண்பு.

 


பசுந்தான பண்பு.


முதலாவது வலையில் 300வது கவிதை பண்பு தலைப்பில் உள்ளது. 

https://kovaikkavi.wordpress.com/2014/01/02/299-%e0%ae%aa%e0%ae%a3%e0%af%8d%e0%ae%aa%e0%af%81/





Samme karu.:-   

https://kovaikkavi.wordpress.com/2014/01/02/299-%e0%ae%aa%e0%ae%a3%e0%af%8d%e0%ae%aa%e0%af%81/




சனி, 19 செப்டம்பர், 2020

302. (865 ) ஊடகம் radio மதிக்கப் பழகு

 


https://www.facebook.com/sownthary.sivananthan/videos/10159051028638984




மதிக்கப் பழகு!  


மதிப்பு ....கொடுத்து வாங்குவது
மதிக்கப் பழக வேண்டுமா!
மதித்திடு நீயாகப் பிறரை!
மதிப்பைத் தானாகப் பெறுவாய்!

நன்னெறி உன்னிடம் மதிப்பைப்
புன்னகையோடு தரும்
மின்னும் எல்லையற்ற அன்பு 
இன்னும் மரியாதை தரும்.

விரிந்த கரங்களாய் மனமிருந்தால்
எரிந்திடாதோ கெட்ட எண்ணங்கள்.!
பரிந்துரை தேவை  யில்லை 
சொரிந்த நல் விதிகளைப் பின்பற்று.

கால் தழுவுமலையின்  மதிப்பு
மேல் முழுதும் சிலிர்ப்பு உதிப்பு
பால் போன்ற பண்பு தரும்
பசுந்தான மரியாதை மதிப்பு.

ஆங்காரம், அதிகாரம், புகழ்
ஓங்காரமிடும் இடத்தில் மதிப்பின்
ரீங்காரம் கீழ்  நிலையே!
பாங்காக உணர்ந்து பழகுதல் சிறப்பு!


28-8-2020


நான் கவிதைகளைப் பதிந்து வைப்பேன்.
எனது வலையில் ஏற்றியபின் அழிப்பேன்.
அப்படிப் பார்த்த போது இது காத்திருந்தது தெரிந்தது.
மகிழ்ச்சி சௌந்தரி. மிக மகிழ்ச்சி...
இனிய வாழ்த்துகள்.










வெள்ளி, 18 செப்டம்பர், 2020

301. (864 ) ஊடகம் - வளரி - மனக் காப்பு.

 

வளரி புரட்டாதி இதழில்.. எனது கவிதை. இதழாளருக்கு மனமார்ந்த நன்றியும் வாழ்த்துகளும்.
மனக் காப்பு.

ஒன்றாக ஒன்றிய பாதையிது.
அன்றிலிருந்து இவளுக்கு உதவியது.
என்றும் இனியும் உதவுவது
நன்றான அவள் கரமது.
கணவன் வந்தான், கரைந்து
காதல் தந்தான், அவசரமாய்
காலன் அழைத்தான் தன்னுடன்
காப்பு என்றுமவள் மனமே.
பிள்ளைகள் வளர்ந்து தமது
பிரிய வாழ்வில் பிணைப்பு.
பிடித்ததிந்தத் தனிமை என்று
பிடிவாத வாழ்வு யோகமாக
போரில் உறவிழந்தவர் போல
ஊரில் யாருமற்ற வாழ்வாக
நீண்ட பாதையிலிவள் நடக்கிறாள்.
நீளம் எதுவரையோ யாரறிவார்!
மனதில் கருணை இணைந்து பெருகும்.
மனிதம் மரித்தால் வசந்தம் வருமா
இனிதாய் மனதைக் குவித்து உணரும்
புனித இணைப்பு மனதின் சுகமே-

( யோகம் - தகுதி)

23-8-2015












வெள்ளி, 11 செப்டம்பர், 2020

300. (863 ) Radio.---time மணிகாட்டிக் குடை

 

   https://www.facebook.com/sownthary.sivananthan/videos/10159029202278984


    


      மணிகாட்டிக் குடை


விநாடிகள் வைரத்துகள்கள்!

நிமிடங்கள் தங்கப் பாளங்கள்!

மணித்தியாலங்கள் மகத்துவங்கள்!

கணிப்பீடுகளில் ஏன் கவனக்குறைவு!

கடிகார அசைவு மதுரமந்திரம்!

காலப்பிரமாணம் கவனத்தில் நழுவலாமா!


அவசியமற்ற கேள்விகள் கேட்டு

தவமுடைய விலைமதிப்பற்ற நேரங்களை

அவமாக்குதல் விலக்குக!! நிற்காது அது!

அவதாரம் மறுபடி எடுக்காது!

அவநெறியற்ற நிர்வாகி பணிந்தால்.!

அவதானமாகக் கையாளுகை பொன்.!


மணிகாட்டிக் குடையின் கீழ்

அணிபெறும் வாழ்வின் மந்தகாசம்!

கணிதமிடும் காலமதிப்பின் 

கோலம் கவினுறு கவிதையாகும்.

நேர நிர்வகிப்புத் தவறினால் 

நாகரீகம் நிலவறையேகும்!


நேரம் நகரும் அடையாளம்!

உரமான வினைகளின் உன்னதம்.!

வரமான நம்பிக்கைத் தரிசனம்.!

தரமான வளர்ச்சி இன்பம்.

விரயமாகலாம்- நாளை அது கனவு!

கரத்திலெடுங்களின்று வாழ்வினிக்கும் நேரமேலாண்மையை!


 21-8-2020









வெள்ளி, 4 செப்டம்பர், 2020

299 . ( 862) ( ஊடகம் ) செனித்தலின் சென்ம பலன்.

 


காற்றுவெளிக்கு மனமார்ந்த நன்றி. வாழ்க! வளர்க!


செனித்தலின் சென்ம பலன்.


திருவுடை வானம் போல

அருமையாய் நீந்திய அலை

உருப்பெற்ற உல்லாசப் பன்னீர்

எவரும் தொடமுடியாதது.

கருவில் இருந்து வெளியேறிப் 

பெரும் சத்தத்தில் கலந்தோம்.


பூப்போல கரத்தில் ஏந்தினர்.

பூசைப் பொருளாய் அன்பிலாடுவோம்

பூமியில் பிறத்தல் மகிழ்வு

பூரிக்கும் மனிதப் பூவாகுதல்

பூக்கும் ஒரு நிகழ்வு.


மெல்ல மெல்ல அகர

வில்லெறிதலில் தொடக்கம்

வல்லமை, அதிகார ஏளனத்

தோல்வி ஆயுதம், இளக்காரம்

சொல்லதிகாரச் சிம்மாசன அமர்வு.


வீழ்புனல் வாழ்வில் சிறகடித்து

ஆழ்ந்திடாது உயரப் பறக்கும்

மூழ்குதலற்ற வாழ்வு இது

வீழ்ந்திடாதே! பரமபத ஆட்டமிது!

தாழ்ந்திடாது தூசகற்றி எழுதலுயர்வு.!


இனித்தமுடைய  எண்ணச் சொற்கடலுள்

அனித்தமுடை(நிலையில்லாத) வாழ்வை வெல்லுதலில்

குனித்தல் (வளைதல்) நிமிர்தலாய்ச் சாகசங்கள்

தனித்துத் தடுக்காது தொடர்தல்

செனித்தலின் சென்ம புண்ணியமே.


பா வானதி வேதா. இலங்காதிலகம். 

டென்மார்க்.  16-8-2020











புதன், 2 செப்டம்பர், 2020

298. (861 ) 1. (ஊடகம் - மண்.) தாரண ஆண்டே வருக! 2. (ஊடகம் - கலைவிளக்கு. தாரண ஆண்டே)

 


(2004 ல் மண் சஞ்சிகையில் சித்திரை மாதம் வெளியான எனது கவிதை.)


தாரண ஆண்டே வருக!


தாரணி சிறக்க் தவழ்ந்திடும் புதிய ஆண்டெ வருக!

தாரண ஆண்டெனப் பெயர் தாங்கித் தமிழாக வருக.

சுப சகுனமாகச் சுடர் ஏந்திச் சுவாசம் தருக!

சுற்று முற்றும் சுபிட்சம் சுமந்து வருக வருக!


மனுநீதிச் சோழ மன்னனாக மனம் நிலைக்க

அனுகூல ஆராய்ச்சி மணியென அறிவுக்கண் திறக்க

மனுதர்ம வாழ்வு கோலோச்ச அனுராகமாகத் தாரண ஆண்டு

மகிழ்வோடு வருக வருக!


அன்னை நிலம் அன்னை மொழி கையிலாக வருக!

பின்னைக் கவலைகள் புறமாகப் புலத்தில் தமிழோடு வருக!

தென்னையாகப் பண்பு உயரப்இ பாசம் உயர வருக!

முன்னைப் பெருமைகளை வாரிசுகள்  அறிந்து வளர வருக!


தாய் நிலத்து நலம் பெருகச் சமாதானம் தருக!

காய் மனங்கள் கனிந்து பகை நோய்கள் தொலைக!

தாரண ஆண்டே தாம்பூலத்துடன் முகம் மலர வருக!

பூரண கும்பமாக உன்னை வரவேற்கிறோம் வருக வருக!


ந.குலவேணி -  ஸ்கன்டிநேவியன் ( என்ற பெயரில் எழுதினேன்)



-------------------------------------------------------------------------------------------- 













428 (961) ஆலமர விழுதற்ற அவலநிலை மனிதக்காட்சிச் சாலை.

                       ஆலமர விழுதற்ற அவலநிலை மனிதக்காட்சிச் சாலை மிருகக் காட்சிச் சாலை மாறி மனிதரே மறந்த மனிதம் போனதால் மனிதக் காட்சிச் சாலை...