புதன், 30 டிசம்பர், 2020

321. (884) வலிமையாய் விரியட்டும் 2021

 




வலிமையாய் விரியட்டும் 2021

வலிமையாய் விரியட்டும் 2021
மெலியார் வலியவராகட்டும்
மெலிகோல (கொடுங்கோல்) அழியட்டும் 
பொலியட்டும் சிறப்புகள்.
பலிப்பு (வெற்றி) குவியட்டும் நோய்
நலிவுகள் ஒழியட்டும்

வலிவுடை நிகழ்வுகள்
பொலிவுடை தமிழ்
மலிவற்ந உயர்ச்சியாய்
சலிக்காது சேர்ந்தது
சிலிர்க்கும் நிறைவிது
ஜொலிக்கட்டும் புத்தாண்டிலும்

அலட்சியங்கள் தாண்டி  
அவமானங்கள் நீராக்கித் 
தவமெனும் வாழ்வு 
அவமின்றிச் சித்திக்கட்டும் 
புவனம் சிறக்கப்  
புத்தாண்டு மலரட்டும்


2020-31 மார்கழி






செவ்வாய், 29 டிசம்பர், 2020

320. (883) கிளி சாத்திரம்

 





கிளி சாத்திரம்


அன்பாலே பேசி அணைக்கலாம் உன்னை

வன்முறைக் கிளியோசியக் கைதி

சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை நீ

செவ்வாரமுடை சொக்கிடும்   சொண்டுக்காரி


அலெக்சாண்டரீனா பரகீட்  உய்தாக் கிளியாம்

அடர்ந்த காட்டில் வசிக்கும் நீளமானவளாம்

வழலையோ இரண்டாயிரம் ரூபாவாம் கோவை

வஉசி உயிரியல் பூங்காவில் காணலாமாம்


பச்சைக்கிளி பால்சோறு

கொச்சி மஞ்சள் கொஞ்சி விளையாட

அச்சா குழந்தைப் பாடல் வரிகள்

இச்சையாய் இசைந்து பாடுவாராம்.


17-5-2016






புதன், 23 டிசம்பர், 2020

319. (882) மீண்டும் வருவாரோ

 





மீண்டும் வருவாரோ


தீண்டும் துன்பங்களுக்காய் மனமுவந்து

ஆண்டவர் சிலுவையை மறுபடி சுமந்து

மீண்டும் சிலுவையில் அறைந்து நொந்து

தாண்டும் துன்பம் அவருக்கு வேண்டாம்.

தோண் டி   மறுபடியதை  அனுபவிக்க வேண்டாம்.

தோன்றாத் துணையாயவர் சாத்தானை (கோரோனாவை) அழிக்கட்டும்.


தூணெனும் பக்தி மனதுள் நிலைத்திட்டால்

நாணெனும் நம்பிக்கை மலையளவு உயர்ந்திட்டால்

பூணெனும் மனிதநேயம் மனதில் ஊன்றிட்டால்

மீண்டும் வருவாரோ இரட்சகர் பூமிக்கு!

நீண்டிடும் துன்பம் அவருக்கு வேண்டாம்

ஆண்டவர் அங்கிருந்தெமை ஆளுமை செய்யட்டும்


சீண்டும தீய பழக்கங்கள் துஞ்சும்

தொண்டு மனம், தோழமை நெஞ்சம்

கொண்ட வாழ்வினில் ஆண்டவர் மஞ்சம்!

மீண்டும் எதற்கவர் வர வேண்டும்!

தீப்பழக்கங்கள் இல்லாத் தோழமை மனதோர்

வாழ்வில் ஆண்டவனுள்ளார் மீண்டவர் வரமாட்டார்!


(பூணெனும் - ஆபரணம் எனும். )

இலண்டன் தமிழ் வானொலி வியாளன் கவிதை)


18-12.2004





திங்கள், 21 டிசம்பர், 2020

318. (881) நமக்கென்று நால்வர்

 



நமக்கென்று நால்வர்


அழுத்தும் விரலியக்க உலகில்

அனைத்தும் உடனடையும் உலகில்

சுமக்கின்ற பணப்பொதி தேன்.

நமக்கென்று நாலுபேர் ஏன்!


அடுப்புக்கு மூன்று கல்லு

அமைச்சிற்குச் சேவகர் குழு

மலரிற்கு ஒரு தண்டு

மனதிற்கு ஒரு பற்றுக்கோடு.


எமக்கென்ற இக வாழ்வில் 

நிலைக்கின்ற சொந்தம் யார்!

சுமக்கின்ற நாலு பேரா 

நமக்கென்று நாலு பேர்!


அன்பைப் பிழி! பண்பைத்தெளி!

அறிவை அளி! ஆதரவு உளி!

உனக்கென்று நால்வர் அல்ல

உலகில் நாற்பது பேர் உருவாவார்


 29-5-2004

(இலண்டன் தமிழ்வானொலியில் ஒலிபரப்பானது.)





வியாழன், 10 டிசம்பர், 2020

317. (880) ஊடகம் - ஞானம் சஞ்சிகை - ராஐராஐசோழன்

 


ஞானம் சஞ்சிகை - இலங்கையில் இருந்து. எனது கவிதை .
ஞானம் - மனமார்ந்த நன்றி.
----------------
ராஐராஐசோழன்.

திராவிட நாகரீகம் செழித்திருந்த காலம்.
கிரேக்கர்களை இந்தியாவிற்குள் நுழைய
வட இந்தியா தெற்கே கர்நாடகம்
மெனரியப் பேரரசு விடவில்லை.
வரை நீண்டன இராச்சியம்
தமிழ் நாட்டைத் தொட முடியவில்லை
சந்திரகுப்த மெனரியனிலிருந்து
பின் வந்த மன்னர்களால்
அண்ட துளியம் அனுமதிக்கவில்லை
மூவேந்தராம் சேர, சோழ, பாண்டியர்
முரண்பட்டாலுமவர்கள் அயலார் தம்மரசை
சங்ககாலத்துக் கரிகால்சோழன்
வடக்கேயும் கடல் தாண்டி
புலிக்கொடி பறக்க விட்டனர்.
இவர்களின் ஆரம்பப் புள்ளி
காலில் சூடுபட்டு கரிகாலன் ஆகினான்.
சோழன் கரிகாலன் பெருவளத்தான்.
இளமையில் தீயில் அகப்பட்டு
முதியவர் இருவருக்கு நீதிசொல்ல வர
சோழ முதற் கதாநாயகன் இவனே.
இவர் இளையவரென்று அவர்கள்
பின்னின்றது அறிந்து முதியவர் வேடமிட்டு
நீதி சொன்ன சோழனாம் பெருமைமிகு
சேரன் பெருஞ்சேரலாதன் பணிய
அனைவருக்கம் முன் உதாரணமானவன்.
இமயம் வரை படையெடுத்து
இமயத்தில் புலி இலச்சினை பதித்தவன்.
வெண்ணியென்ற ஊரில் போரிட்டு
தமிழகத்தில் கட்டுமான வேலைக்கமர்த்தியவன்.
அரசன் ஒருவனையும் வீழ்த்தினான்.
இலங்கை மீது படையெடுத்தான்.
சிங்களர் பன்னிரண்டாயிரமரைச் சிறைசெய்து
( சங்ககாலத்தில் கரிகாலன்)
19-5-2020










செவ்வாய், 8 டிசம்பர், 2020

316, (879) ஊடகம் அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்// 'உன்னை நம்பு'

 



உன்னை நம்பு  


தன்னை நம்பாதவன் தாழ்வது

தன்னாட்சியாம் பொதுவிதி! உச்சிச் சூரியனாகு

தன் நிழல் தனக்குள்ளாகாது

தன்னம்பிக்கை வாழ்வின் முதுகு நாண்.


சாதனை வித்தை ஊன்ற

தீதினை, சூதினை வெல்ல

வேதனை துடைத்தெறி! நீயே நீதிபதி!

நாதனை ஆரதனை செய்!


விதையை அழுகவிடுவது சந்தேகம்

விளையாட்டை ஆரம்பத்திலேயே தோற்கடிக்கும்!

வினைத் திறன் சிகரச்சுடர்

வித்தகக் கனவு, இலக்கோடு படியேறு!


நளபாகமான  அசையாத நம்பிக்கை 

நங்கூரமாகி  மனிதனைக் கரையேற்றும்!.

பொங்கும் ஓயா அலையாய் விடாமுயற்சியைத்

தங்கவை உன்னோடு! தாழ்வுமனப்பான்மையோடும்!


சூதுடை சதுரங்கப் பொய்மையழித்து

சூடமாய் அறிவொளி விரித்து

பாடான எண்ணங்கள் மாற்றி உயர்!

நம்பு நஞ்சில்லா உலகு உன்கையில்!


 23-10-2020







வெள்ளி, 27 நவம்பர், 2020

315. (878) ஊடகம் - நேர்படப்பேசு - இதழ்

 






நேர்படப் பேசு


கூர்மையாக நீதிவழியாகக் கூறுங்கள்

ஆர்வமுடை வரிகளைத் தினம்

நேர்பட வீசுங்கள் நல் விதையை

ஊர்ப்பிள்ளைகள் விருத்தி உளவியலுக்காக


ஓளவையின் ஆத்திசூடிஇ கொன்றை வேந்தன்

பையப்பைய மூதுரை நல்வழியும்

தைரியம் நேர்மை வண்ணங்களை

வைரமாய் மனதில் உருவாக்கும்.


திருக்குறள் கலப்பையால் மனதைத்

திரு பெற உழுவதால் பாலைமனம்

திருந்தி சோலைவனமாகும் நல் விளைச்சலால்.

திருமை பெறுகிறது செந்தமிழாக


பாரதியார் வந்தார் பாநூறெனப்பாடி

சாரதியானார் தமிழ்வீதியில் செருக்காக

ஊரதிர இன்பத் தமிழ்த்தேன் சிந்தினார்.

நிமிர்ந்து நில் நேர்படப் பேசென்றார்.


தமிழ்வானம் சிறக்கநாமெல்லாம்

அமிழ்தினும் இனிய தமிழால்

அகிலம் எங்கும் சிறகடிக்கிறோம்

பேசுங்கள் தமிழைப்பாடிப் பறவையாகுங்கள்.


 3-1-2020






ஞாயிறு, 15 நவம்பர், 2020

314. (877) 2020 Deepavali

 


2020


அமைதியாக வீட்டில் பலகாரங்களுடன்  கொரோனாத் தீபாவளி  

நடந்து முடிந்தது. சிந்தனை மொழிகளுடனும் 

சிறந்த கவிதைகளும் ஒரு புறம். அடுத்த 

தீபாவளி கொரோனா இன்றி நடைபெற

இறைவனை வேண்டுவோம். ----2020








செவ்வாய், 3 நவம்பர், 2020

312. (875) (ஊடகம் - காற்றுவெளி) உயிரின் நிலா

 

காற்றுவெளி கார்த்திகை 2020 என் கவிதை
மனடார்ந்த நன்றி காற்றுவெளிக்கு.
------------------------------------

உயிரின் நிலா! 


பரிசுத்த நெருப்பு! ஆதித் தீ!

பகர்ந்திட வியலாத சக்தி

பங்கமற்று உலகைப் புரட்டும்

புது ஊற்று உத்வேகமுடையது


உணர்ச்சியின் மொழி வெளிப்பாடு

புணரி (கரை) காணாத தேடலிது

பிணக்கம்கொள்ளா இணக்கமிது

புணர்கிறேன் நேசிப்பான  அவத்தையை


தோன்றும் நுட்பமான கருத்து

ஊற்றெடுத்துப் பயன் கூட்டும்

றிற்காத நீரூற்று கவிதை

வற்றாது விழுவதேயதன் வேலை


கவிதைகளைப் பகிரக் கனகச்சிதமான

கவிதை மனம் வேண்டுமிது

பூவிதையான நுண்ணிய உணர்வு

பூவாக விரியும் மனம் நரைக்காது


எண்ணங்கள் கனத்த மனதால்

வண்ணக் கவிதைச் சுருளெழும்

திண்ணமாய் வெற்றியெட்ட வேண்டி

பண்ணட்டும் தொல்லைகள் உன்னுள்.


உயிரின் நிலா கவிதை!

பயிராவது  புதிதாயரும்புவது மகிழ்வு!

வயிரச் சொல் மணிமாலை

உயிர்பிக்கும் நாளும் தமிழுலகை


3-8-2020











வெள்ளி, 30 அக்டோபர், 2020

310. (873) (ஊடகம் -சிட்னி வானொலி...) திறந்த புத்தகம்

 

https://www.facebook.com/sownthary.sivananthan/videos/10159170328623984  


திறந்த புத்தகம்.


சுயசரிதை திறந்த புத்தகம்.

பயமின்றியெழுதத் துணிபவர் சிலரே

சுயநாட்குறிப்பும் சில மனிதரின்

நயமுடை வரலாறு பதிக்கும்.


எல்லாவற்றையும் எல்லோரும் எழுதுவார்களா!

வெல்லமாய்க் கரைந்தினிக்கும் புத்தகமாய்

மெல்லக் கதை வெளியாகி

வென்றிடுமா வாழ்க்கை நூலகத்தில்.!


நவரசங்கள், பள்ளங்கள், சிகரங்கள்

தவமுடை வாழ்வில் இயற்கை

துவண்டிடாது தடை தாண்டினால்

உவப்புடை உயரம் எட்டலாம்.


குடும்பப் பெருமையை நற்

துடுப்பாக்கிப், பலமாகக் காத்திடல்

வடுவில்லாப் பக்கங்கள் பெருக்கும்.

சிடுசிடுப்பற்ற புன்னகை பலமாக்கும்.


அகண்ட சாதனையாகத் திறவுகோல் 

மிக உண்மையான விருப்பமே!

அகம் காதலுடன் தூரிகையாகும்.

முகவுரை, அட்டை, முடிவுரை தானாக விரியும்.


கணவர், குழந்தைகள், பெற்றோர், பேரப்பிள்ளைகள்

உணர்வுடை பளபளக்கும் தங்கப் படங்கள்!

திணறடிக்கும் இறைப் பரிசுகள்.!

வணங்கிடும் சிறப்புடை ஆசீர்வாதங்கள்.!


மூச்சிரைக்கும் வாழ்வென்பது உண்மையே!

ஆச்சரியம், ஓட்டப்  பந்தயமே!

நீச்சலடித்து நற்தருணத்தைப் பதிப்போம்.

முயற்சியுடன் நம்பிக்கைச் சுடரேற்றுங்கள்.!


9-10-2020









செவ்வாய், 20 அக்டோபர், 2020

309. (872) ( - ஊடகம் - ஜீவநதி ) புகழ்

 புகழ்..

புகழ் தேடலொரு பக்கம்
புகழ் அழிப்பு மறுபக்கம்.
திகழ்ந்திடுமிது பாலைவனச் சோலை
பகட்டான ஒளி !..... மாந்தர்
திகட்டாது நாடுவார் தேடுவார்
கைதட்டலுக்கு ஏங்கும் ஒரு
வெல்வெட் புல்வெளி!...வதனம்
வண்ணமடித்து ஒளிரும்!...புகழ்
வல்லமை வினைகளின் எதிரொலி!
செல்லப் புகழ்மண்டபப் பிரவேசம்.
மனிதன் மனிதனா என்று
மதிப்பிடும் சோதனைக் கருவி.
தானாக வரும் புகழ்
நீயாக சம்பாதிக்கும் புகழ்
தேய்ந்தும் தேயாத சுவையுடைத்து
செல்வம், அழகின் புகழ்
செல்வோம் என்று போகும்
ஞானம் மேன்மையறிவுப் புகழ்
சூனியம் ஆகாத நிரந்தரம்!
நானிலத்தின் அதிசய மந்திரநாண்.
என் புகழென் கவிதை
மென் சிறகு விரித்து
தன் பயணம் தொடரும்
பணிவு கடலாக, ஒழுக்கம்
சிகரமாக, மொழி நித்தியமாகட்டும்!
முயற்சி, தேடல் விவேக
ஆன்மாவின் தணியாத தாகம்
பரபரப்பானது புகழ் வீடு
சக்தி, பெயர் புகழால் முக்தியல்ல
ஒற்றுமை அன்பே சொர்க்கத்தில் நந்தவனம்.

பா வானதி வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க். 12-7-2020











வெள்ளி, 16 அக்டோபர், 2020

307. (870) (ஊடகம்- ரேடியோ ) முடிவுகள்.

 https://www.facebook.com/sownthary.sivananthan/videos/10159128811698984

  முடிவுகள். 


திறமை மின்னவோ, வளரவோ

தினையளவும் வேண்டாம் திக்கரித்து (வெறுத்து)

திறமையாயுயிரைத்;  திட்டமாய்க்  கொலைத்தனர்.

வறுமையாகிறது சுஷாந்தின் வழக்கு முடிவுகள்.


முடிவுகள் முடிசூடவும் மனிதன்

அடியோடு அழியவும் காரணியாகிறது.

அடிவைத்துயரும் வானுயர் வாழ்வின்

முடிவுகள் ஏற்றப் படிககட்டுகளாகலாம்.


படியும் நிறைவு, பயன்,

துடிக்கும் சாவு, தீர்மானம்

முடிவு,  இறுதி, எல்லை கருத்துகளாம்

முடிவுகள் தொடர்கதை தான்.


துரதிஷ்டம், பச்சாத்தாபங்களில புரளாது

மனச்சாட்சியைப் பாதுகாத்திடுங்கள்.

மேசமான முடிவு கெட்ட

பாதையால் நிகழும் பொறுப்பே


இடறி  விடும் முடிவுகள்

கடனெடுத்தல்,  தவறான துணையே.

பட்ட மரத்திலொரு மலராகலாம்

திடமான  நன் முடிவு.

அது பாலைவனத்தின் சாரலாகும்.


பா வானதி வேதா. இலங்காதிலகம் டென்மார்க். 24-9-2020







வெள்ளி, 2 அக்டோபர், 2020

305. (868) (ஊடகம்) உயிரேந்தும் கலச ஒளி! (அன்பு)

 


https://www.facebook.com/sownthary.sivananthan/videos/10159087990158984


உயிரேந்தும் கலச ஒளி! (அன்பு)


புத்தியில் பயிரிடும் மானுட  அகல்விளக்கு

சத்தியமான உலக வனத்தின் உறவுக்கயிறு

சித்திக்கும் மதுரச இன்பக் கணை

சுத்தமாயிது அழிந்தால் நிர்வாண மனமே


என்புமுருகும் அதிசய இன்ப ஊற்று!

இன்புறும் ஒரு வார்த்தை, நோக்கு,

அன்பான தொடுகை அற்புதங்கள் செய்யும்.

பென்னம் பெரிய யானை பலமீயும்.


துயர் நீக்கும் அச்சாணி  ஆதரவு!

பயிராகும் ஆதரவு மாசற்ற தேசியகானம்

உயிரையும் கொடுக்கும் தன்மையது அன்பு

நயமுடையிவ் மூன்றேழுத்தே நானிலம்  ஆளுகிறது


மன்பதை சிறந்து வாழ தீருவள்ளுவரும்

அன்புடைமையை விளக்குகிறார் அறவொளி வாழ

வன்மையற்று ஆன்மாவிற்குள்  தேன் சொரியும் 

அனபு   உகையாளும்! அன்பு செய்யுங்கள்!.


 11-9-2020









செவ்வாய், 22 செப்டம்பர், 2020

304. ( 867) (ஊடகம் - மண்.) பசுந்தான பண்பு.

 


பசுந்தான பண்பு.


முதலாவது வலையில் 300வது கவிதை பண்பு தலைப்பில் உள்ளது. 

https://kovaikkavi.wordpress.com/2014/01/02/299-%e0%ae%aa%e0%ae%a3%e0%af%8d%e0%ae%aa%e0%af%81/





Samme karu.:-   

https://kovaikkavi.wordpress.com/2014/01/02/299-%e0%ae%aa%e0%ae%a3%e0%af%8d%e0%ae%aa%e0%af%81/




சனி, 19 செப்டம்பர், 2020

302. (865 ) ஊடகம் radio மதிக்கப் பழகு

 


https://www.facebook.com/sownthary.sivananthan/videos/10159051028638984




மதிக்கப் பழகு!  


மதிப்பு ....கொடுத்து வாங்குவது
மதிக்கப் பழக வேண்டுமா!
மதித்திடு நீயாகப் பிறரை!
மதிப்பைத் தானாகப் பெறுவாய்!

நன்னெறி உன்னிடம் மதிப்பைப்
புன்னகையோடு தரும்
மின்னும் எல்லையற்ற அன்பு 
இன்னும் மரியாதை தரும்.

விரிந்த கரங்களாய் மனமிருந்தால்
எரிந்திடாதோ கெட்ட எண்ணங்கள்.!
பரிந்துரை தேவை  யில்லை 
சொரிந்த நல் விதிகளைப் பின்பற்று.

கால் தழுவுமலையின்  மதிப்பு
மேல் முழுதும் சிலிர்ப்பு உதிப்பு
பால் போன்ற பண்பு தரும்
பசுந்தான மரியாதை மதிப்பு.

ஆங்காரம், அதிகாரம், புகழ்
ஓங்காரமிடும் இடத்தில் மதிப்பின்
ரீங்காரம் கீழ்  நிலையே!
பாங்காக உணர்ந்து பழகுதல் சிறப்பு!


28-8-2020


நான் கவிதைகளைப் பதிந்து வைப்பேன்.
எனது வலையில் ஏற்றியபின் அழிப்பேன்.
அப்படிப் பார்த்த போது இது காத்திருந்தது தெரிந்தது.
மகிழ்ச்சி சௌந்தரி. மிக மகிழ்ச்சி...
இனிய வாழ்த்துகள்.










வெள்ளி, 18 செப்டம்பர், 2020

301. (864 ) ஊடகம் - வளரி - மனக் காப்பு.

 

வளரி புரட்டாதி இதழில்.. எனது கவிதை. இதழாளருக்கு மனமார்ந்த நன்றியும் வாழ்த்துகளும்.
மனக் காப்பு.

ஒன்றாக ஒன்றிய பாதையிது.
அன்றிலிருந்து இவளுக்கு உதவியது.
என்றும் இனியும் உதவுவது
நன்றான அவள் கரமது.
கணவன் வந்தான், கரைந்து
காதல் தந்தான், அவசரமாய்
காலன் அழைத்தான் தன்னுடன்
காப்பு என்றுமவள் மனமே.
பிள்ளைகள் வளர்ந்து தமது
பிரிய வாழ்வில் பிணைப்பு.
பிடித்ததிந்தத் தனிமை என்று
பிடிவாத வாழ்வு யோகமாக
போரில் உறவிழந்தவர் போல
ஊரில் யாருமற்ற வாழ்வாக
நீண்ட பாதையிலிவள் நடக்கிறாள்.
நீளம் எதுவரையோ யாரறிவார்!
மனதில் கருணை இணைந்து பெருகும்.
மனிதம் மரித்தால் வசந்தம் வருமா
இனிதாய் மனதைக் குவித்து உணரும்
புனித இணைப்பு மனதின் சுகமே-

( யோகம் - தகுதி)

23-8-2015












428 (961) ஆலமர விழுதற்ற அவலநிலை மனிதக்காட்சிச் சாலை.

                       ஆலமர விழுதற்ற அவலநிலை மனிதக்காட்சிச் சாலை மிருகக் காட்சிச் சாலை மாறி மனிதரே மறந்த மனிதம் போனதால் மனிதக் காட்சிச் சாலை...