சனி, 29 பிப்ரவரி, 2020

256. (819 ) ஆச்சரியம் அல்ல - மன்று போற்ற வேண்டும்!









ஆச்சரியம் அல்ல

அகமும் முகமும் மலர்ந்திட உண்மையாய்
சுகமான வார்த்தை கலந்து பொருளாய்
நல்லதை வாழ்த்தும் மன உயர்வுடை
மனிதர்களோடு வாழ்விணைய வேண்டும்
நல்லதை வாழ்த்திட மனமயர்ந்திட வேண்டாம்.

பள்ளத்தில் நிற்காது துணிந்து
வாழ்த்திடத் தேவை வார்த்தைகள்!
தாழ்ந்திடாத மன எண்ணங்கள!;
சூழ்ந்திடாது பகை!  வாழ்த்துங்கள்!
வீழ்ந்திட மாட்டோம் உயர்வோம்!

17-5-2003





மன்று போற்ற வேண்டும்!

அயர்வு இன்றி அரும் பாடுபடு
முயற்சி பிழிந்து வெற்றி எடு!
மனித முயற்சியில் இது வெற்றிக்கோடு!
இனிது பொருந்துமிது உலக வாழ்வோடு
மென்று முழுங்காத சுய திறமைகள்
பொன்றிடாது ஒளிர வாழ்த்திடும் வரவேற்புகள்
குன்றிடாது உயரும் ஊக்குவிப்புகள்
நன்று திறக்குமது அறிவுக் கண்கள்.

மன்று போற்றும் மார்க்கங்கள்
குன்றில் ஏற்றும் வாய்ப்புகள்
குன்றுக்கும் உண்டு இவ்வாதரவுகள்
எம் முயற்சி தரும் சந்தர்ப்பங்கள்.
வண்ணத் தமிழ் வரிகள் போல்
வளமான கவிதைகள் போல்
ஏறுநடை போட வேண்டும்
வேன்றிட ஏது தடை!

7-6-2003





வெள்ளி, 28 பிப்ரவரி, 2020

255. (818 ) அவையளுக்குத் தெரியுமோ!









அவையளுக்குத் தெரியுமோ!

ஆன்பே வானலைகளில் இனிய பாடல் இசைக்கிறதே!
தொலைக்காட்சியில் இனிய ஒலிபரப்பு நடக்கிறதே!
அலைபோல் பரவியதா எம்வீட்டுத் திருமணச்செய்தி!
நிலையாக இன்றிக் காற்று தென்றலாய் வீசுதே!
இலைகளெல்லாம் அசைந்து வாழ்த்துக் கூறுகிறதே!
இவைகளுக்குத் தெரியுமோ நம்வீட்டுத் திருமணச் செய்தி!

பெற்றோருக்குப் பெருமை பிள்ளைகளின் திருமணம்
உற்றாருக்குப் பெருமை ஊரில் ஒரு திருமணம்
நாம்காத்திருந்த இன்ப வேளை வந்தது
நல்ல சேதி காதில் இன்பம் ஓதுது
அன்புச் சிறையிலிpருந்து அகம் மகிழ்ந்த
பண்புச் சிறை காக்கப் படியேற்றம்.

துன்பச் சிறையாம் அன்னிய கலாச்சாரத்தில்
இன்பச் சிறை, கலாச்சார பலம் திருமணம்.
வாழ்வு வழுகாது இறுக்கும் வச்சிரம். திருமண்ம. 
தாழ்வை நோக்காது வாழ்விலுயரத் திருமணம்.
தானாகக் கனிய வேண்டும் திருமணம்
தேனாகப் பாலாகத் தித்திக்க வேண்டும் திருமணம்.

23-1-2003
தமிழ் அலை கவிதை பாடுவோம்.(லோகதாஸ்)





254. (817 ) சின்ன வயதுச் சில ஆசைகள்.











சின்ன வயதுச் சில ஆசைகள்.

சங்கீதம் எனக்கென்றும் சர்க்கரைப் பொங்கல்
இங்கித ஆர்வம் இழைந்தது அங்கத்தில்
சங்கீதச் சூழலில் என்கீதம் வளர்ந்தது
சங்கம் அமைத்ததென் கௌரவ இதயத்தில்
பங்கமில்லா இசையைச் சபையில் பாடிடும்
மங்காத ஆவல் எரிந்தது சுடராக
நீங்காத ஆசையுடன் வரமாகக் காத்திருந்து
ஏங்கி ஓடுவேன் சனிக்கிழமைக்காய் ஆச்சி வீட்டிற்கு

பாட்டு  வாத்தியார் மாமிமார் இருவருக்கு
வீட்டிலே பழக்குவார் கர்நாடக இசை
நாட்டமுடன் அருகிருந்து ஆர்வமாய்
கேட்டிருப்பேன்  ஈர்மூன்று வயதில் இசையை
சினிமாப் பாடல்கள் ' சிவாயநம ' தான்
இனிமை வரிகளும் இதயத்தில் நிறைந்து
இசையோடு இதமாய் நானும் பாடுவேன்
மேசையில் தாளம் மாமியோடு நாமும்.

ஓசையெழும் கூட்டாக இரவின் அமைதியில்
ஆசையில் பாடுவோம் நானும் தம்பியும்.
வண்ணங்கள் எம் கரங்களில் வசியமாய்
கண்கள் பதிப்பதைக் கைகள் புனையும்
புன்னகையாய்த் தீட்டுவோம் பல ஓவியம்.
நுண்ணிய திறமையாம் எமது ஆர்வத்திற்கு
புன்னகையும் வாழ்த்துகளும் பெற்றவர் பரிசு.
பண்ணியவைகளைப் பயிற்றுவித்தேன்  தொழிலிடத்தில்.

ஏண்ணங்கள் யாவும் தறி ஏறுவதில்லை
வண்ணச் சருகையாய் ஆவதுமில்லை
கண்கள் அதனால் மூடுவதுமில்லை
மண்ணில் அவைகள் புதைவதுமில்லை
புண்ணியமாகப் பயின்றனர் பாலர் நிலையத்தில்.
சங்கீத ஆசை என்றும் தனியே தனியே
மங்காது மனதிலே அலை அலையாய்.
பொங்கும் என்றும் அமைதியாய் ஆத்மீகமாய்.

30-1-2003.  இலண்டன் ரைம் வியாழன் கவிதை
11-6-2007 தமிழ் அலை கவிதை பாடுவோமில் 






வியாழன், 27 பிப்ரவரி, 2020

253. (816 ) (ஊடகம் - செம்பருத்தி) - வேண்டாத மைகள்






வேண்டாத மைகள்

கனம் பண்ண வேண்டாக் கருமைகள்
தினம் புரளி பண்ணும் ஆமைகள்
மனிதன் உயர்ந்திட ஒவ்வாத சுமைகள்
மனிதன் அழித்திட வேண்டிய மைகள்.
அஞ்சாமைச் சால்வை அகவிதழ் அலங்காரம்.
ஆற்றாமை  அழிந்தமனம் பெரு மைதானம்.

இயலாமையின் இழப்பு  இமயமூலதனம்.
ஈயாமை,  ஈகை, ஈனமிகு  கசப்பு இனம்.
உட்பகைமை,  உலர்தல் உற்சாக  வேதனம்
உதவாமை உதிர்ந்திட உவக்கும் உள்மனம்
கல்லாமை கரைதல்  களிமிகு   பூவனம்.
கயமை அழிதல் அர்த்தமிகு   ஆதனம்

பொய்மை பொசுங்குதல் பொலிகின்ற பூரணம்.
பொறாமை பொன்றுதல் பேறுடை இலக்கணம்.
பேதமை பொய்த்தல் பீடுடை வெகுமானம்
குடியாமை குவலய தத்துவப் பயணம்.
சொற்பகைமை சேர்க்காது சொர்க்கவனம்.
இவ்வாமைகள் இறந்தால்   இகலோகம் நந்தவனம்.

10-11-2004
11-3-2003 ரிஆர்ரி தமிழ்அலை வானொலி
29-4-2003 இலண்டன் தமிழ் வானொலி
ஐப்பசி – கார்த்திகை 2004 அலேசியா செம்பருத்தி இதழ். பிரசுரமானது.


  






புதன், 26 பிப்ரவரி, 2020

252. (815 ) நேரம்.





நேரம்.

தாளலய சங்கமம்
காலப்பிரமாண அங்கம்.
மாத்திரை விலக இசை 
யாத்திரை பாழாகும்.

நேரமெனப்   படுவது 
சாரமிகு  நிறைகோல்
தூரம் தள்ளப் படுவது
பாரமிகு சிலுவைகள்.

நேரப்பிரமாணம் வாழ்வின் முத்தாரம்
நேரமதிப்பு வாழ்வின் வித்தாரம்
விநாடிகள், மணித்தியாலங்கள்
சுக நாடிகள நற்கணிப்பீடுகளில்

சனி விரதம் ஞாயிறில் வராது
சிவராத்திரி நவராத்திரி ஆகாது
சுபநேரம் விலகிடில் சுப கிரியைக்குத் தடை
தன்நேரமாகினால் காலனும் விரிப்பான் கடை.

காலப்பிரமாணம் தவறிய சிசுவும்
கர்ப்பத்தில் தாயிற்கும் சிசுவிற்கும் காலன்.
நிர்ணய  நேரத்தில் மின்சடப் பொருளும்
நிர்வாகம் புரியும் தன்னியங்கி நிலையில்

ஞாலம் அளக்கும் மானிடம் மட்டுமேன்
ஆலகாலவிசமாய்க் காலத்தைக் கருதுகிறான்.
ஈரமனதில் நேரம் ஓரம் நகரும்
நேரம் தவற பிறர் நேரமும் நகர்த்தப்படும்.

சுயகட்டுப்பாடு நழுவிடில்
நேரக் கட்டுப்பாடு  நழுவும்
ஆசை அளவுக்கு மேவிடில்
நேரம் கட்டுவிட்டு விலகிடும்

வரம்பு கட்டிய ஆசை வயலுள்
தரம்நிறை சுயகட்டுப் பாட்டினுள்
நேரம் மனிதனுக்கு வாய்த்த வரம்.
நேரநிர்வாகம், நன்மதிப்பு,  நாகரீகம்.

செய்வன நேரத்துள்  செய்தல்
செய்வன நன்மையாய்ச் செய்தல்
செய்வன மகிழ்வுடன்  செய்தல்
பெய்திடும் பல நிறைவுகள்.

13-3-2003
(இலண்டன் ரைம் வானொலி பொதுத் தலைப்புக் கவிதை
11-4-2005 ரிஆர்ரி  தமிழ் அலையில்  வாசித்தேன். கே.பி. லோகதாஸ்)
















திங்கள், 10 பிப்ரவரி, 2020

251 (814 ) ஊடகம் ஏழைதாசன் - இன்னும் வேண்டும்.













250.. (813 ) விரல் நுனியில் உலகு






விரல் நுனியில் உலகு

விஞ்ஞானக் குழந்தை நன்று
முதிர் ஞானமாய் வளர்ச்சி இன்று
கல்வி ஆய்வு ஞானமாய்
கணக்கற்ற முன்னேற்றம் இன்று

அஞ்ஞானமின்றி அறிவு வளர
எஞ்ஞான்றும் கணனி தஞ்சமென
கிஞ்சித்தும் எழாது அமர்ந்தால்
நஞ்சது உடலாரோக்கியத்திற்கு



சாமியாரானாலும் ஆசாமியானாலும் விரலுக்குள் உலகம்.

கணனியைத் தள்ளி வைத்து ஒரு
காரியமாற்ற இயலாத நிலையில் இன்று
உரிமம் கொண்டுள்ளது உலகு ஆச்சரியமல்ல
கணனியின் தந்தை சார்ல்ஸ் பாபேஜ்

கணக்குகள் தரவுகள் மிக விரைவானது
நம்பக் கூடியதும் சரியானதும் ஆகிறது
தரவுகள் சேமித்து நினைத்தவுடன் எடுக்கலாம்
நிகழ்வுத் திட்டம் பிழையானால் அனைத்தும் பிழையாகும்.

சரியற்ற மின்சாரம் கணனியைப் பழுதாக்கும்
உறவுகளைச் சேர்க்க, இணைக்க்
உலவாத  இடங்களைப்பர்க்க என்று

உள்ளங்கையில் உலகு வந்தது எனலாம்.

2018




428 (961) ஆலமர விழுதற்ற அவலநிலை மனிதக்காட்சிச் சாலை.

                       ஆலமர விழுதற்ற அவலநிலை மனிதக்காட்சிச் சாலை மிருகக் காட்சிச் சாலை மாறி மனிதரே மறந்த மனிதம் போனதால் மனிதக் காட்சிச் சாலை...