திங்கள், 10 பிப்ரவரி, 2020

250.. (813 ) விரல் நுனியில் உலகு






விரல் நுனியில் உலகு

விஞ்ஞானக் குழந்தை நன்று
முதிர் ஞானமாய் வளர்ச்சி இன்று
கல்வி ஆய்வு ஞானமாய்
கணக்கற்ற முன்னேற்றம் இன்று

அஞ்ஞானமின்றி அறிவு வளர
எஞ்ஞான்றும் கணனி தஞ்சமென
கிஞ்சித்தும் எழாது அமர்ந்தால்
நஞ்சது உடலாரோக்கியத்திற்கு



சாமியாரானாலும் ஆசாமியானாலும் விரலுக்குள் உலகம்.

கணனியைத் தள்ளி வைத்து ஒரு
காரியமாற்ற இயலாத நிலையில் இன்று
உரிமம் கொண்டுள்ளது உலகு ஆச்சரியமல்ல
கணனியின் தந்தை சார்ல்ஸ் பாபேஜ்

கணக்குகள் தரவுகள் மிக விரைவானது
நம்பக் கூடியதும் சரியானதும் ஆகிறது
தரவுகள் சேமித்து நினைத்தவுடன் எடுக்கலாம்
நிகழ்வுத் திட்டம் பிழையானால் அனைத்தும் பிழையாகும்.

சரியற்ற மின்சாரம் கணனியைப் பழுதாக்கும்
உறவுகளைச் சேர்க்க, இணைக்க்
உலவாத  இடங்களைப்பர்க்க என்று

உள்ளங்கையில் உலகு வந்தது எனலாம்.

2018




2 கருத்துகள்:

  1. Ashok MA Mphil அடடா..!இதுதானே
    காவியக் கவிதை..!
    தீட்டிய
    விரல்களை
    தூரத்திலிருந்தே
    முத்தமிடுகிறேன்.
    10-2-2020

    Vetha Langathilakam :- Nanry....Ashok MA Mphil

    பதிலளிநீக்கு
  2. Alvit Vasantharany Vincent :- Ashok MA Mphil உண்மை, விரல் நுனியில் உலகு வந்து அதனால் பல சிக்கல்களும் சேர்ந்தே வந்தன.
    14-2-2020

    பதிலளிநீக்கு

423 (962) ஊடகம் -- தடம் தீட்டு