வியாழன், 13 ஜனவரி, 2022

374. (907) புதிய பொங்கல் 2022

 





                               புதிய  பொங்கல் 2022


(பொதிவு - ஒற்றுமை)


புதிய பொங்கல் (14-1-) 2022 ஆனந்தப்

பொதிவுடன்  நடை பயிலட்டும்.

புதிய நற்சிந்தனைகள் மனதில்

புதிய நற்பலன்  ஈயட்டும்

00

இன்பங்கள் நிறைந்து பொலியட்டும்!

துன்பங்கள் மறைந்து விலகட்டும்!

அமைதி தென்றலெனத் தவழட்டும்

அரக்க குணங்கள் மாறட்டும்

00

தாழ்வின் கிழ்நிலையை எதிர்த்திட்டு

வாழ்வின் வலிமைத் தடையுடைத்திட்டு

வெற்றிக் கொடியை உயர்த்திடுவோம்!

நெற்றி நிமிரப் பொங்கிடுவோம்!

00

நெஞ்சம் வலிமை பெற

அஞ்சும் பெருந்தொற்று ஒழிய

பஞ்சென மனம் மகிழ்வில்

தஞ்சமடையப் பொங்குக பொங்கல்!!!!

00

( 2002ல் ரிஆர்ரி  தமிழ்அலை வானொலியில்  வாசித்த கவிதை    சில மாற்றங்களுடன்  இன்று 2022ல்)

கவியூற்று – வேதா. இலங்காதிலகம் -டென்மார்க் 2022.





வெள்ளி, 7 ஜனவரி, 2022

373. (906) உழைப்பாளிகள்

 





உழைப்பாளிகள்


இழிவற்ற    இராச்சியத்தின் 

இராசபாட்டை   உழைப்பு.

இயக்கமே   இசையானவர்

இரத்தம்  வியர்வையாக்குவோர்.

இலக்கு ஒன்றானவர்

இடைவிடாது உழைப்பவர்

இதயத்தில் வலியவர்கள்

இராசிமிக்கவர்   உழைப்பாளிகள்.

00

இன்பம் எதிர்நோக்கும் 

இருளற்ற    காலத்தோர்

இரத்தலை வெறுப்போர்.

இலவசத்தைத் தவிர்ப்போர்.

இடைவேளை   விரும்பாது

இயந்திரமாய் உழைப்போர்.

இடறலின்றி   முன்னேறுவோர்.

இணையில்லா உழைப்பாளிகள்.

00

தப்படியற்ற சமூகத் தளபதிகள்

தத்தகிட  தத்தகிட

தகதகிட தத்தோமென்று

தாளம்    பிசகாதவர்

மரங்கொத்தி   மரம்கொத்தும்

சிரத்தை கொண்டவர்கள்

தரம் உயர்த்தும் நோக்கம்

தளராதவர்கள்  உழைப்பாளிகள்

00

கவினெழி  -  வேதா. இலங்காதிலகம். டென்மார்க்  - 20-4-2006



உழைப்பாளிகள்  கருத்துடைய  வேறொரு கவிதை

492. மே தினம்…. மே தினம் | வேதாவின் வலை.. (wordpress.com)







372. ( 905) ( பெண்மை - 40 ) பெண்ணே கவனமாக இரு!!!!!

 




 Hello! 

Dont shout to your  children!

Don't shout to your husband/ wife

go to consult with a manaviyal nipunar.....

------

ஆண்களைப் பற்றிய   எச்சரிப்புக்   கவிதைக்கு  பதிலாக எழுதிய  வரிகள்

https://www.youtube.com/watch?v=ksJvba2whIo

----------

பெண்ணே கவனமாக இரு!!!!!


பண்பிழந்து கணவனைத் பங்கப்படுத்தி

புண்ணாக்கி நிம்மதி அழித்து

கண்ணான செல்வங்களைத் திட்டி

கண்மூடித்தனமாக வாழ்வைத் தரமிறக்காதே!

00

உன் பெருமையை உடைத்து

பொன் மனதுடை பிள்ளைகளை

வன் கொடுமையாய் வதைத்து

துன்புறுத்தும் நீ பெண்ணா!!!!

00

உன்னருகே கணவனிருப்பது பெருமை!

அன்புடன் குடும்பத்திற்காக உழைக்கிறான்

ஆடை பாத்திரம் கழுவு!

அன்னம் சமையென்கிறாய்! அநியாயமல்லவா!

00

பிள்ளை சுமப்பதைக் கூறி

பின்னி எடுக்கிறாய்! கடிவாளம்

உன் கையில் மட்டுமல்ல!

அன்புடை இணைச்சவாரியே இல்லறம்

00

திட்டமின்றி ஊர் சுற்றுகிறாய்

திசைமாறிப் பிள்ளைகள் தவிக்க.

திரிகரணம் அடக்கு! நல்லறம்

திவ்வியமாதல் இருவர் திறனிலுமே!!!!

00

வேதா. இலங்காதிலகம் - டென்மார்க் - 23-12-2021




ஞாயிறு, 2 ஜனவரி, 2022

371. (904) காலம் ஒரு பாலம்

 



காலம் ஒரு பாலம்

00


காலச்சக்கரக் கோள்கள் சுழற்சியால்

காலத்தில் பல தன்மை காலபேதம்

காலகதி நிகழ்வாய் இறப்பும் பிறப்பும்.

காலமெனும் சொல் பல கருத்துகளேந்தி

ஞால வாழ்வுக்காய் இக் கோலங்கள்.

ஞான மனிதன் ஆய்ந்த அர்த்தங்கள்

காலம் கடமையின்  அரிய பாலம்

காலக் குறிகள் இயற்கை அழகுப் புதையல்

00

முக்காலம் நிகழ்வு    இறப்பு   எதிர்வு

காலம் இருபத்தி  நான்கு  மணிகள்.

காலை   மாலை  நாளிரு பக்கம்

காலப்   புலர்வு விடியற் காலை

காலக்    காட்டின் வழியோடு ஏகும்

காலம் பொன் வழுவுதல் வீண் 

காலமறிந்த செயல் கனகம்

காலமாகுதல் உயிர்க் கூடு பிரிதல்

00

திருவிழாக்காலம் பூசைக்காலம்

புண்ணியகாலம் விரதம் வேண்டுதலாய்

இலையுதிர்கால மொட்டை மரங்களாய்

இலைக்குக் காத்திருக்கும் கர்ப்பகாலம்

கோடைகாலம் இரசிக்கும் அனுபவமாய்

பனிகாலம் பனிமனிதன் செய்ய

மாரிகாலம் மழையோடு நனைவோம்

எக்காலமும் நற்காலம்  நம்பிக்கை இருந்தால்

00

கருப்பகால மனிதம் பத்து மாதம்

பருவ  காலங்கள் ஆறு வகையாம்

காலம் நல்லது கெட்டது அகாலம்

காலப்பயிர் விவசாயியின் உயர்ச்சி

காலப்பிரமாணம் கலையின மூலம்

கற்கால மனிதம் ஆரம்ப வாழ்வு

காலகதி வளர்ச்சியில்  காலக்கிரமத்தில்

கணனிக் காலம் நவீனகாலமாகிறது

00

வேதா. இலங்காதிலகம் -டென்மார்க் 

(இலண்டன் தமிழ் வானொலி( பெஃஸ்ட் ஓடியோ) வியாழன் கவிதை 

2006 பங்குனி 19  நான் வாசித்த கவிதை)











428 (961) ஆலமர விழுதற்ற அவலநிலை மனிதக்காட்சிச் சாலை.

                       ஆலமர விழுதற்ற அவலநிலை மனிதக்காட்சிச் சாலை மிருகக் காட்சிச் சாலை மாறி மனிதரே மறந்த மனிதம் போனதால் மனிதக் காட்சிச் சாலை...