புதிய பொங்கல் 2022
(பொதிவு - ஒற்றுமை)
புதிய பொங்கல் (14-1-) 2022 ஆனந்தப்
பொதிவுடன் நடை பயிலட்டும்.
புதிய நற்சிந்தனைகள் மனதில்
புதிய நற்பலன் ஈயட்டும்
00
இன்பங்கள் நிறைந்து பொலியட்டும்!
துன்பங்கள் மறைந்து விலகட்டும்!
அமைதி தென்றலெனத் தவழட்டும்
அரக்க குணங்கள் மாறட்டும்
00
தாழ்வின் கிழ்நிலையை எதிர்த்திட்டு
வாழ்வின் வலிமைத் தடையுடைத்திட்டு
வெற்றிக் கொடியை உயர்த்திடுவோம்!
நெற்றி நிமிரப் பொங்கிடுவோம்!
00
நெஞ்சம் வலிமை பெற
அஞ்சும் பெருந்தொற்று ஒழிய
பஞ்சென மனம் மகிழ்வில்
தஞ்சமடையப் பொங்குக பொங்கல்!!!!
00
( 2002ல் ரிஆர்ரி தமிழ்அலை வானொலியில் வாசித்த கவிதை சில மாற்றங்களுடன் இன்று 2022ல்)
கவியூற்று – வேதா. இலங்காதிலகம் -டென்மார்க் 2022.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக