திங்கள், 22 ஜூன், 2020

283. (846 ) சொற்கள், இறைவனின் பார்வை ....., நீதி சுரக்கும்...








சொற்கள் 

சொற்களை மதிப்பவர் தமிழின்
சொற்சுவை அறிந்த நேசர்.
சொற்பமென்பவர் சொல்வளம் அறியாதவரோ!
சொல்லணி, சொல்லதிகாரம் அறியாது
சொரி மணல் போன்று
சொரிவோரும் பலர் உளர்.  19-5-2020
0000  

இறைவனின் பார்வை வேண்டாமா!

அன்பீரம், அறிவீரம், கருணையீரம் 
மனித  மன ஈரத்தால்
என்றும் நெகிழ்வு மனமாகும்
நன்றென்று உபதேசம் ஊருக்கே! சிலருக்குத் 
தன்பாதை தலைகீழ்த் தவமாகும்!
0000

நீதி சுரக்கும்...

பீதி கொள்ளாது என்றும்
நீதி சுரக்கும் மனக்கேணி
மேதினியில் வேற்றுமை பாராது
மாதுன்னை அலட்சியம் செய்பவரோடு
மோதி வருந்தாது விலகியிரு!

மதியாரெனில் அவ்வளவே மதிநுட்பம்
மலடாகியது என்று நினைத்திடு!
மடமையே பகிரப்படும் அலட்சியம்
மலையருவியாய் நன்மை செய்ய
மகத்துவப் பிறவி வேண்டும்.
0000

 22-6-2020   




ஞாயிறு, 21 ஜூன், 2020

282. (845 ) Australia radio poem விரும்புவதும் விரும்பாதவையும்.




அவுஸ்திரேவிய வானொலி கவிதை




விரும்புவதும்    விரும்பாதவையும்.

அகம் திறந்து பாராட்டும் 
முகம் மலரும் நட்பு
தகவான   சோலைக்   குளிர்ப்  
புலவேளியோடு   ஒரு   வீடு
சிறிய அலை சேர்வதும் 
சிதறுவதுமான கடல் வெளி

புரளும் சொற்கள் கவிதையாய்
வரட்சியின்றி ஆன்மாவை நீவ வேண்டும்.
திரளும்    உயர்ந்த   இசை
தரளம்,    தாமரை  பயமற்ற
மிரளாத குழந்தை  இன்னும் 
பற்பல     விரும்புவது

மன உறுதியற்ற    மனிதர்
விழி    மூடித் தலை   சாய  
வழிநெடுகத் தோப்பற்ற பாலைவனம்
அன்பெனும் ஆயுதம் தொலைத்து
நயவுரைக்காத   மனிதராக  ஏக்கமும்
வாதையும் நிறைந்த உலகு பிடிக்கவில்லை.

 19-6-2020.




281 (844 ) ஊடகம் - கவிதைப் பெட்டகம். வைகாசி 2020











Siddukkuruvi Poem

சிட்டுக்குருவி 

கட்டில்லாது   பறக்கும் 
சிட்டுக்குருவிகளை   நகரமயமாக்கலால்
தட்டுத்   தடுமாற  
விட்டிடாது மனிதநேயமுடன்
பெட்டகமாய்ப் பாதுகாத்தல் 
மட்டில்லாச் சிறப்பு.


 15-5-2020






சனி, 20 ஜூன், 2020

280. (843 ) என் மனச்சுவரில் (Radio)









என் மனச்சுவரில்

(அம்பாரம்- நெற்குவியல், களஞ்சியம்.)

நம்புவீர்களா!  இருபது வருடங்கள்
அம்பாரம் அடுக்குகளுடன்  ஆற்றோட்டமாய்
எம்மவருடன் வாழ்ந்தவென் ஆதிமனை
அம்ணமாய்த் தரை மட்டத்துடன்

கூடிக் குலாவிய உறவுகள் 
ஆடி அவி அடங்கினர்
பாடி ஆடிப் பழகியவை 
ஓடி விடுமா மனதிலிருந்து

வாழ்வியல் படித்த கூடு
தாழ்ந்திடாது மனச் சுவரிலிருந்து
ஆழ்ந்த ஏக்கம் பசையாக ச்
சூழ்ந்து வருத்தும்   இடையிடையே

கூறுபடுத்தும்  மனஎழுச்சி..
கூகிளில்  புகுந்தேன் நிமிடத்தில் 
கூடினேன் ஆருயிர் கிராமத்தில்
கூச்சமின்றி உலாவினேன் ஆ;திநினைவுகளுடன்

மனச்சுவர்  ஓவியச்சுவர் 
தனமாம் ஆவியின் கூர்மையை 
வனமாக்கும் வளமாக்கும்  மனவியல்
கனமின்றி வாழ திடம் திண்மையே வரை கோல்.

 12-6-2020





புதன், 17 ஜூன், 2020

279. (842 ) திண்மையை உன்னுள் திணி







திண்மையை உன்னுள் திணி

திறமைசாலிகள் அடுத்தவரைத் 
திகைத்திட வைத்துத்
திடகாத்திரமாய்ப் பாதையில்
திங்களாய் ஒளிர்வதால்
திணறுகிறார்கள் பலர்.

திரிகரண சுத்தமாய்
திடசித்தமாய் உலகில்
தித்திக்க உலாவுதல்
திருக்காப்பாய் ஒருவகையில:
திருநீறாகிறது தன்னம்பிக்கை

திடநெஞ்சு இல்லாவிடில்
தினையளவும் உயருதல்
திருவிழா ஆகாது. 
திமிருடை விற்பன்னர்கள்
திட்டமிட்டு அழிப்பார்கள்.

  17-6-2020





428 (961) ஆலமர விழுதற்ற அவலநிலை மனிதக்காட்சிச் சாலை.

                       ஆலமர விழுதற்ற அவலநிலை மனிதக்காட்சிச் சாலை மிருகக் காட்சிச் சாலை மாறி மனிதரே மறந்த மனிதம் போனதால் மனிதக் காட்சிச் சாலை...