புதன், 17 ஜூன், 2020

279. (842 ) திண்மையை உன்னுள் திணி







திண்மையை உன்னுள் திணி

திறமைசாலிகள் அடுத்தவரைத் 
திகைத்திட வைத்துத்
திடகாத்திரமாய்ப் பாதையில்
திங்களாய் ஒளிர்வதால்
திணறுகிறார்கள் பலர்.

திரிகரண சுத்தமாய்
திடசித்தமாய் உலகில்
தித்திக்க உலாவுதல்
திருக்காப்பாய் ஒருவகையில:
திருநீறாகிறது தன்னம்பிக்கை

திடநெஞ்சு இல்லாவிடில்
தினையளவும் உயருதல்
திருவிழா ஆகாது. 
திமிருடை விற்பன்னர்கள்
திட்டமிட்டு அழிப்பார்கள்.

  17-6-2020





4 கருத்துகள்:


  1. Sivaneswary Sivarasah :- அருமை அருமை 👏
    17-6-2020
    love

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக மகிழ்ச்சி சிவா.
      தகவான ஊக்குவிப்பு
      மிகவான உற்சாகம் குவிக்கும்.
      நன்றி. 17-6-2020

      நீக்கு

  2. Sarala Vimalarajah:- திடநெஞசு இல்லாவிடின் திணையளவும் உயருதல் முடியாது அழகான வரிகள் அக்கா உண்மை நாம் உயர வேண்டும் என்றஅல் திடமான மனம் இல்லாட்டால் எதிலும் உயரமுடியாது சிறப்பு வாழ்த்துக்கள் அக்கா💕
    Love
    17-6-2020

    Vetha Langathilakam:- சுஷாந்தின் மரணத்தால் வந்த சிந்தனை.
    . அது கொலையாகவும் இருக்கலாம்
    அல்லது மற்றவரின் குள்ள நரி வேலையாகவும் இருக்கலாம்.
    மகிழ்ச்சி சகோதரி கருத்திடலிற்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Sarala Vimalarajah :- Vetha Langathilakam இப்ப குள்ளநரிகள் அதிகம் அக்கா மனிதனை மனிதனே ஏமாற்றி வாழ்கிறார்கள். நன்றி அக்கா
      17-6-2020
      Like

      Vetha Langathilakam :- Sarala Vimalarajah உண்மை நம் வாழ்விலும் சந்திக்கிறோமே.
      சிரிப்பையும் கூட நம்ப முடியாமல் உள்ளது.
      17-6-2020---like

      நீக்கு

423 (962) ஊடகம் -- தடம் தீட்டு