புதன், 31 மார்ச், 2021

341 (904) மீண்டும் மிடுக்கோடு (வானொலி)

 




மீண்டும் மிடுக்கோடு (வானொலி)


கூண்டுப் பறவை நிலையோடு

தாண்டிய காலம் முன்னோடு

ஈண்டு சொந்தக் காலோடு

மீண்டும் வந்தாய் மிடுக்கோடு

நீண்டு நிலைத்த வாழ்வோடு

தாண்டும் இனிய பண்போடு

தீண்டு எம்மை மகிழ்வோடு!

தூண்டு தாமரைத் தமிழோடு!


செண்டாக ஆக்கங்கள் காலத்தோடு

வண்டாக மொய்க்கட்டும் வேகத்தோடு

துண்டாடும் மிடுக்கைக் காலதாமதம்

கண்டு திருந்திடு கம்பீரமுண்டு.

இணைந்த தமிழ் வானொலியோடு

தோண்டும் இலக்கிய வளத்தோடு

ஆண்டுகள் கடந்தது மாண்போடு

பண்டிகையாகக் காலங்களைக்  கையிலெடு!


  5-3-2005







வெள்ளி, 19 மார்ச், 2021

340. (903) படிப்போம்.

 



5வது 3 வரிகள்
நதியோரநாணல்கள் - நீயும் நானும்- 09

குகையாய் புதையலான குடவறைத் தமிழை
நகையாய் நந்தா விளக்காய் நினைப்போம்.
தொகையாய் உள்ளெடுத்து தொகுத்துப் படிப்போம்.
வகையாய் தொடங்கி மகிழ்வாய் முடிப்போம்.

வேதா. இலங்காதிலகம். டென்மார்க். 26-2-2018

கவித் தென்றல் அனுராதா கட்டபொம்மன்கவித் தென்றல் is a moderator in this group.வணக்கம் எதுகையும், மோனையும் ''கரு''த்தும் துள்ளி விளையாட இரண்டு இடங்களில் சந்தம் தட்டுகிறது. ''நந்தாவிளக்காய்'' என்பது இரண்டு சொற்களுக்கான கால அளவை எடுத்துக் கொள்கிறது. அதை சரி செய்ய முடியுமா என்று பாருங்கள். ''எண்ணுவோம்.'' - என்பதை நினைப்போம் என்று மாற்றினால் சந்தம் சரியாக இருக்கும். சரி செய்ய முடியுமா என்று பாருங்களேன். Vetha Langathilakam அதை சரி செய்த பிறகு தான் நான் இந்த பாடலை ஆய்வுக்கு எடுத்துக் கொள்ள முடியும். வாழ்த்துகள். - ''அகன்'' நடுவர்.




புதன், 17 மார்ச், 2021

339. (902) அம்மாவின் நலமறிந்து...

 






அம்மாவின் நலமறிந்து...


அதிகாலை துயில் நீங்க

திகில் போலொரு ஏக்கம்

பொதியாக ஒரு மனத்தாங்கல்

பதியே! நீ அருகில் இல்லை


உத்தியோக  இடைவேளையில்

நித்தமும் தொலைத்தொடர்பில்

மொத்தமும் பரிமாறிடல்

சித்திக்கவில்லையெனும் ஏங்கல்


மாலையானால் தாயின்

சேலை தேடும் குழந்தையாய்

வேலை முடிய நீ வருவாய்

அவ்வேளை தேடுதே மனம்


காதலின் கலையரங்கில்

கானடா இசைப்பவரே  உம்

கருவறை ஆலயம் காண

கடிதென  பறந்தவரே


தமிழோடு உறவாடல்

அளவோடு சமையல்

ஒரு குவளை தேநீர்

சிறிது உணவு தயார்!


பிரிவெனும் அழலின்

எரிவுக்குத் தாள்!

ஊடகத்தோடு பதிகம்

பாடுகிறது மனம் அதிகம்.


அன்புக்குள் வாழ்வினை

அடங்கவைத்த அன்பரே

அன்புச் சுவடுகளை 

அழகாக எண்ணுகிறேன்


அம்மாவின் நலமறிந்து

அமைதியாய்த் திரும்பிடுவாய்.


2-8-2003

(இலண்டன் ரைம் கவிதை நேரம்.)






செவ்வாய், 16 மார்ச், 2021

338. (901) கிராமத்துக் கிளிகள்

 



 கிராமத்துக் கிளிகள்


இயற்கை மாலைகளை அள்ளியணிந்து

இங்கித சுவாச ஆரோக்கியம்

இறைந்தது கிராமத்தின் உயிரோட்டம்.

உலகை வாழவைக்கும் கிராமத்துக்

கிளிகள் செதுக்கிய சிட்டுகள்

செருக்குடன் ஊறிய செங்கமலங்கள்.

0

சிலர் பின்கொய்யகச் சேலைச்

சிட்டுகள். ஓசத்திக் கொண்டையிட்டு

வெத்திலை சப்பிய செவத்தை

உதட்டோடு சிலுப்பிப் பேசுவாக.

குடத்தை இடுப்பிலமர்த்தி ஒய்யாரமா

கூட்டமா போவாக தண்ணியெடுக்க.

0

கூடையைத் தூக்கிக்கிட்டுப் புல்லறுக்கப்

போகையில வம்பு பண்ணுகிறவனை

வாயாடி வெட்டும் கிளிகள்.

மாமரத்துக் கிளிகளும் மச்சானோடு

பண்பாடு மராமத்துப் பண்ணும்

கிராமத்துக் கிளிகளும் சமம்தாங்க.

0

வேலைசெய்து உடலைக் கட்டாக்கி

வெச்சிருக்கிறா பாரு! உரலில்

மாவிடித்து உட்கார்ந்து மாவரித்து

உருட்டுக் கட்டையாட்டம் உருண்டுள்ளா.

கண்டாலே ஆசை பிறக்குமழகியவள்

காதலிக்க மனசு தோணுது.

0

மாரியம்மன் கோயில் ஆலமர

நிழலிலே மச்சானையும் சந்திப்பா மாலதி

ஒற்றையடிப் பாதையிலே ஒய்யாரநடையோடு

அன்றைய கிளி பாட்டியம்மா.

சுருக்குப் பையில் வெற்றிலை

பாக்கோடு பணமும் ஒளிந்திருக்கும்.

0

சின்ன உரலில் வெத்திலையிடித்துக்

கொடுத்தல் என்ன ஆனந்தம்!

நானும் ருசிக்கவென்றால் கொஞ்சமீயும்;

பாட்டியம்மா அன்றைய ஐஸ்வர்யாராய்.

ஓடியோடி உதவுமுள்ளத்தார் சமூக

உணர்வாளர் கிராமத்துக் கிளிகள்.

0

 18-8-16






சனி, 13 மார்ச், 2021

337. (900) இன்னும் சிறிது நேரத்தில்....

 



இன்னும் சிறிது நேரத்தில்....


' தீதும் நன்றும் பிறர் தர வாரா '

ஓதினார் கணியன் பூங்குன்றனார் (புறநானூற்றில்)

தானே நினைந்து தானே குடித்து

வீணே விதிவழி மாளுதலிவன் தீர்ப்போ


விறைத்து உடல் பருத்து விகாரமாகி

விண்டலம் (தேவருலகு) ஏகுவானோ! அன்றி மனிதநேயமுடன்

விரும்பி அவசர உதவிக்கு அழைத்து 

உரிய சிகிச்சை பெறுவானென நம்புவோம்


போதை பாதை மாற்றும் நிலை

வியாபார நிலையம் பூட்டிய பின்பு

இரவுணவாக மது நிலையத்தின் அருகில்

ஆழ்ந்து கிடக்கிறான் உள்ளும் புறமும்


'நோதலும் தணிதலும் அவற்றோரன்ன

சாதலும் புதுவது அன்றே வாழ்தல்

இனிதென மகிழ்ந்தன்றும்  இலமே' 

என்பதும்;  பூங:குன்றனார் தான்.


(நன்மை தீமை அடுத்தவரால்  வருவதில்லை.

துன்பமும் ஆறுதலும் கூட மற்றவர் 

தருவதில்லை சாதல் புதுமையில்லை வாழ்தல்

இன்பமென்று மகிழ்ந்ததும் இல்லை)


அமலன் தந்த வாழவொரு கொடை

அமாவாசை ஆக்குதலும் நாமே மறக்கிறோம்.

தனது வாழ்வு காப்பற்றப்படுமா இன்னும்

சிறிது நேரத்தில் எந்நிலை! புரியாதவனிவன்.


31-8-2016






ஞாயிறு, 7 மார்ச், 2021

336. (899) பெண்மை . 39) 2021 பங்குனி 8 - பெண்கள் தினக் கவிதை

 




2021 பங்குனி 8 - பெண்கள் தினக் கவிதை


மானுடநதிப் பெருக்கின் ஆரம்பமா

ஆதாம் ஏவாள் -  படைப்பதிகாரம் 

மனிதர்கள் மாறி விட்டனரோ!

பெண்ணழகு ஆபத்தாகிப் புனித

திருமணம் தண்டனைக்கு உரியதாகிறதா!

திருவுடை மனிதஇயல்பை அழிக்கிறதா!


பெண்ணென்றும் ஆணென்றும் பொங்கிப் 

புனிதமிழக்கிறதா திருமண வாழ்வு!

மனிதக் காதல் தண்டனைக்குரியதா!

பரிசுத்தத் திருமணம் பழி வாங்கலா!

உரிமை இணைப்பு மாயத்தூரமாகிப்

பரிசு  தருகிறதா ஆணினமழியட்டுமென்று!


ஆணினம் அழிந்து பட்டால்

காணினம் பாலியலின்றிக் காணாமலாகாதா!

வீணில் வக்கிரம் பெருகாதா!

கோணிப் பையளவாயுலகு குறுகுமே!

உலகமுய்த்திட ஆணும் அவசியமே!

கலகமேன் பெண் ஆணென!


வன்மை, கோபம் ஆளும்திறனாம்

தன்மை இருபாலாருக்கும் பொது

மென்மை, சாந்தம், அமைதியும்

நன்னிலை இருமைக்கும் பொது

உன்னதமாய்ப் பேசியெட்டும் சமநிலை

உயர்த்தாதோ  இரு பாலையும்!


மனித மனவீணை சுயநல

மதுபோதையில் ஒருவரையொருவர் வீழ்த்த

மடமை, வீராப்பு, வீம்பாக

மகாசக்தியாகிக் காற்தடமிடுகிறது உறவையறுக்க

மகத்துவத்தோடு கூராய்வு செய்து

தகவோடு இருபாலும் இணையட்டும்.


 8-3-2021







428 (961) ஆலமர விழுதற்ற அவலநிலை மனிதக்காட்சிச் சாலை.

                       ஆலமர விழுதற்ற அவலநிலை மனிதக்காட்சிச் சாலை மிருகக் காட்சிச் சாலை மாறி மனிதரே மறந்த மனிதம் போனதால் மனிதக் காட்சிச் சாலை...