செவ்வாய், 16 மார்ச், 2021

338. (901) கிராமத்துக் கிளிகள்

 



 கிராமத்துக் கிளிகள்


இயற்கை மாலைகளை அள்ளியணிந்து

இங்கித சுவாச ஆரோக்கியம்

இறைந்தது கிராமத்தின் உயிரோட்டம்.

உலகை வாழவைக்கும் கிராமத்துக்

கிளிகள் செதுக்கிய சிட்டுகள்

செருக்குடன் ஊறிய செங்கமலங்கள்.

0

சிலர் பின்கொய்யகச் சேலைச்

சிட்டுகள். ஓசத்திக் கொண்டையிட்டு

வெத்திலை சப்பிய செவத்தை

உதட்டோடு சிலுப்பிப் பேசுவாக.

குடத்தை இடுப்பிலமர்த்தி ஒய்யாரமா

கூட்டமா போவாக தண்ணியெடுக்க.

0

கூடையைத் தூக்கிக்கிட்டுப் புல்லறுக்கப்

போகையில வம்பு பண்ணுகிறவனை

வாயாடி வெட்டும் கிளிகள்.

மாமரத்துக் கிளிகளும் மச்சானோடு

பண்பாடு மராமத்துப் பண்ணும்

கிராமத்துக் கிளிகளும் சமம்தாங்க.

0

வேலைசெய்து உடலைக் கட்டாக்கி

வெச்சிருக்கிறா பாரு! உரலில்

மாவிடித்து உட்கார்ந்து மாவரித்து

உருட்டுக் கட்டையாட்டம் உருண்டுள்ளா.

கண்டாலே ஆசை பிறக்குமழகியவள்

காதலிக்க மனசு தோணுது.

0

மாரியம்மன் கோயில் ஆலமர

நிழலிலே மச்சானையும் சந்திப்பா மாலதி

ஒற்றையடிப் பாதையிலே ஒய்யாரநடையோடு

அன்றைய கிளி பாட்டியம்மா.

சுருக்குப் பையில் வெற்றிலை

பாக்கோடு பணமும் ஒளிந்திருக்கும்.

0

சின்ன உரலில் வெத்திலையிடித்துக்

கொடுத்தல் என்ன ஆனந்தம்!

நானும் ருசிக்கவென்றால் கொஞ்சமீயும்;

பாட்டியம்மா அன்றைய ஐஸ்வர்யாராய்.

ஓடியோடி உதவுமுள்ளத்தார் சமூக

உணர்வாளர் கிராமத்துக் கிளிகள்.

0

 18-8-16






1 கருத்து:

  1. Vetha Langathilakam
    Dsaravana Kumar
    nice..💐
    16-3-2021

    Denmark Shan Subramaniam
    நன்று. வாழ்த்துகள்

    Subajini Sriranjan
    சின்ன உரலில் வெத்திலையிடித்துக்
    கொடுத்தல் என்ன ஆனந்தம்!
    நானும் ருசிக்கவென்றால் கொஞ்சமீயும்
    பாட்டி
    இனிய நினைவுளை கவியாக்கி தந்தீர்கள்
    17-3-2021
    Sarala Vimalarajah
    சிறப்பு அக்கா

    Rathy Mohan
    மிக அருமையான வரிகள்..கிராம மண் வாசனை..
    17-3-2021
    Vetha Langathilakam
    Ramesh Kannan
    ஊறிய செங்கமலங்கள்
    வெற்றிலை சப்பிய உதடு
    மராமத்துப் பண்
    உருட்டுக்கட்டை
    பாக்கோடு சேர்ந்த பணம்
    ஐஸ்வர்யாராய்
    அழகு ..........❤ 17-3-2021'

    Reeta Naharajan
    Fantastisk ⚘
    17-3-2021
    Vetha Langathilakam
    அன்புடன் கருத்தாளர்கள் வாழ்த்தாளர்கள் எல்லோருக்கும்
    மன மகிழ்வும் நன்றியும் உரித்தாகுக.

    பதிலளிநீக்கு

494 (1036) கவியரங்கம் எனது 10வது

             நிலாமுற்றம் தொடர் நிகழ்வாகக் கவியரங்கம் நடந்ததில் சிலவற்றில் நான் கலந்து கொண்டேன். வேதாவின் வலை ஒன்றில் கவியரங்கம் நிகழ்வில் 6...