புதன், 17 மார்ச், 2021

339. (902) அம்மாவின் நலமறிந்து...

 






அம்மாவின் நலமறிந்து...


அதிகாலை துயில் நீங்க

திகில் போலொரு ஏக்கம்

பொதியாக ஒரு மனத்தாங்கல்

பதியே! நீ அருகில் இல்லை


உத்தியோக  இடைவேளையில்

நித்தமும் தொலைத்தொடர்பில்

மொத்தமும் பரிமாறிடல்

சித்திக்கவில்லையெனும் ஏங்கல்


மாலையானால் தாயின்

சேலை தேடும் குழந்தையாய்

வேலை முடிய நீ வருவாய்

அவ்வேளை தேடுதே மனம்


காதலின் கலையரங்கில்

கானடா இசைப்பவரே  உம்

கருவறை ஆலயம் காண

கடிதென  பறந்தவரே


தமிழோடு உறவாடல்

அளவோடு சமையல்

ஒரு குவளை தேநீர்

சிறிது உணவு தயார்!


பிரிவெனும் அழலின்

எரிவுக்குத் தாள்!

ஊடகத்தோடு பதிகம்

பாடுகிறது மனம் அதிகம்.


அன்புக்குள் வாழ்வினை

அடங்கவைத்த அன்பரே

அன்புச் சுவடுகளை 

அழகாக எண்ணுகிறேன்


அம்மாவின் நலமறிந்து

அமைதியாய்த் திரும்பிடுவாய்.


2-8-2003

(இலண்டன் ரைம் கவிதை நேரம்.)






2 கருத்துகள்:

  1. 21-3-2021 comments:-

    Denmark Shan Subramaniam
    நல் வாழ்த்துகள்
    21-3- 2021
    Mathavan Venugopal
    நல்வாழ்த்துக்கள் அம்மா

    Manjula Kulendranathan
    வாழ்த்துக்கள்

    Verona Sharmila
    வாழ்த்துக்கள்

    Subajini Sriranjan
    ஏக்கம் நிறைந்த பாடல்
    அழகு வேதாமா

    Jeya Sivapalan
    "அம்மா " உயிர் சொல்ல ♥🙏
    Vetha Langathilakam
    May be an image of flower and text Thanks photo

    பதிலளிநீக்கு
  2. Kugananthaluxmy Ganesan
    நல்வாழ்த்துக்கள் சகோதரி.
    21-3-2021
    Rathy Mohan
    ஏக்கம் கொண்ட வரிகள்
    21-3-2021
    Maniyin Paakkal
    அருமை
    21-3-2021
    Vetha Langathilakam
    Maniyin Paakkal மணி நீண்ட இடைவேளை .நலமா?
    21-3-2021


    Ratha Mariyaratnam
    மிக அழகான உணர்ச்சிபூர்வமான வரிகள் அக்கா
    21-3-2021
    Ani Vijay
    உயிரோட்டமான வரிகள் அம்மா.
    2021
    Reeta Naharajan
    Reply44w
    Vetha Langathilakam
    Reeta Naharajan Thanksda.......Makilchchy..
    2021


    Sujatha Anton
    nic.pic.
    2021

    பதிலளிநீக்கு

423 (962) ஊடகம் -- தடம் தீட்டு