இன்னும் சிறிது நேரத்தில்....
' தீதும் நன்றும் பிறர் தர வாரா '
ஓதினார் கணியன் பூங்குன்றனார் (புறநானூற்றில்)
தானே நினைந்து தானே குடித்து
வீணே விதிவழி மாளுதலிவன் தீர்ப்போ
விறைத்து உடல் பருத்து விகாரமாகி
விண்டலம் (தேவருலகு) ஏகுவானோ! அன்றி மனிதநேயமுடன்
விரும்பி அவசர உதவிக்கு அழைத்து
உரிய சிகிச்சை பெறுவானென நம்புவோம்
போதை பாதை மாற்றும் நிலை
வியாபார நிலையம் பூட்டிய பின்பு
இரவுணவாக மது நிலையத்தின் அருகில்
ஆழ்ந்து கிடக்கிறான் உள்ளும் புறமும்
'நோதலும் தணிதலும் அவற்றோரன்ன
சாதலும் புதுவது அன்றே வாழ்தல்
இனிதென மகிழ்ந்தன்றும் இலமே'
என்பதும்; பூங:குன்றனார் தான்.
(நன்மை தீமை அடுத்தவரால் வருவதில்லை.
துன்பமும் ஆறுதலும் கூட மற்றவர்
தருவதில்லை சாதல் புதுமையில்லை வாழ்தல்
இன்பமென்று மகிழ்ந்ததும் இல்லை)
அமலன் தந்த வாழவொரு கொடை
அமாவாசை ஆக்குதலும் நாமே மறக்கிறோம்.
தனது வாழ்வு காப்பற்றப்படுமா இன்னும்
சிறிது நேரத்தில் எந்நிலை! புரியாதவனிவன்.
31-8-2016
அருமை
பதிலளிநீக்குmikka nanry bro
நீக்குVetha Langathilakam
பதிலளிநீக்குLIKERS:- sakthi - umamaheswaran
14-3-2021h
Denmark Shan Subramaniam
நன்று. வாழ்த்துகள்
14-3-2021
Vetha Langathilakam
Denmark Shan Subramaniam
May be an image of flower and text that says 'அன்புட மகிழ்ச்சி'
14-3-2021
Sarala Vimalarajah
அருமை அக்கா
14-3-2021
Vetha Langathilakam
Sarala Vimalarajah
May be an image of flower and text that says 'அன்புடன் என் மகிழ்ச்சி!'