ஞாயிறு, 26 மே, 2019

99.. (678) உருத்து உனக்குமில்லை







உருத்து உனக்குமில்லை

தடுமாறும் தருணங்கள்
வடுவாகும் வாழ்விலே!
அடுக்குத் தொடரானால் 
கொடுமையே துன்பத்தால்.

இடும்பையாம் இந்நிலையை
அடுக்குதல் கேடு!
இடுக்குவழி கண்டு
எடுத்தெறிந்து உயர்!

உடுத்திடும் மனத்துணிவாலிதை
ஒடுக்கும் மனப்பயிற்சி
உடுக்கு அடித்திட்டால் 
தொடுக்கும் சிலிர்க்கும் மனம்!

பெருகும் மனத்துணிவை
கருக்கிட, நொறுக்கிட
உருத்து உனக்குமில்லை
விருப்போடு நிமிர்ந்தெழு!

 25-5-2019




98. (677) ஊடகம் - காற்றுவெளி - பல்லாங்குழி





பழமையாம் பல்லாங்குழி.

புல்லாங்குழலின் துளைகள் போன்று பெரிதாக
பல்லாங்குழியில் பதின்னான்கு துளைகள் கண்டேன்.
வல்லமையாய் என்னாளும் விளையாடும் ஆட்டம்
பன்னாங்குழி என்றும் முன்னோர் அழைத்தாராம்.
பகிரும் காய்கள் பதின்னான்கு குழிகளில்.
பளபளக்கும் சிறு கண்ணாடி உருண்டைகள்
பசுந்தான கடற்கரைக் கற்கள், சோகிகள்,
புளியங் கொட்டைகள். விதைகளும் காய்களாம்.

பாரம்பரிய விளையாட்டு, பாண்டி என்றும்
பாலர் வகுப்பிலும் பாவனை உண்டு.
எல்லாமாக மூன்று வகை ஆட்டம்
பசுவாட்டம், முத்தாட்டம், கட்டாட்டம் என்று
புகட்டுகிறது சிக்கனம், சேமிப்பு, இழப்பென்று.
பல தேசத்தவரும் பகலிரவாய் விளையாடும்
பல்லாங்குழி திண்ணையிலமர்ந்தும் பரவசமாய் ஆடுவார்.
மதிவன்மையுடைய எட்டாயிரமாண்டு பழைமை உடையது.

மண்ணிலும்  ஏழேழு குழிகளோடு ஆடுவது.
மரம் உலோகத்தில் வந்து முன்னேறியது.
மகிழ்ந்து ஆடும்  இவ்  விளையாட்டு.
முன்னைய நல்லதொரு திருமண சீர்வரிசை.
வில்லங்கம் இன்றி ஆட்டம் தொடரலாம் 
அல்லாடும் மனசு ஆட்டத்தில் தவறி
நல்லாய் ஏமாற்றுவோரும் எரிச்சலோடு தொடர்வார்.
வெல்லாவிடில் கோபம் திடீரென வருமே!

எகிப்திய பிரமிட்டிலும் இச்செதுக்கல் உண்டாம்.
ஆபிரிக்கா, சூடான், உகன்டா, கென்யாவிலுமுண்டாம்.
எண்ணும் திறன்இ விரல்களில் இரத்தோட்டம்,
நுண்ணிய கணிதத் திறன் வண்ணமாய்ப் பெருகுமாம்.
இந்தியில் மங்கலா, பிலிப்பைன்ஸ் நாடு
இந்தோனேசியாவில் சொங்கக், சுங்க என்றும்
இது சங்க்யா (எண்ணிக்கை) சமஸ்கிருதத் திரிபாம்.
எழுபது காய்களில் ஆடும் விளையாட்டு

 10-12-2018










97. (676) ஊடகம்- கொலுசு May- நூலேணி உதவுமா?




May கொலுசு மின்னிதழில் என் வரிகள். கொலுசு குழுமத்திற்கு நன்றிகள்.

நூலேணி உதவுமா?

வான வயல்களின் விதைப்போ 
வாகுடை நட்சத்திர மணிகள்!
தேவதை மாளிகை யன்னலால்
தினமும் தேடுகிறாள் அது
ஒளி மலர்த் தோட்டம்
களிதருமுலகம் விற்பனைக்கு வருமோ!

மனம் விரிக்கும் இன்பம்
புத்துணர்வு தெளிக்கும் நந்தவனம்
மின்மினி வானம் கண்ட
தித்திப்பில் கடலலையும் ஆர்ப்பரிக்கும்
நுரைமொழி சிந்திச் சிந்தி

ஓளி மலர்கள் சேகரிக்க
நூலேணி உதவுமா! என்
எண்ண ஏணி விரிந்தது
முகிலொன்று வருமா என்னை
எடுத்துச் செல்ல என்
வெளிச்சக் கனவு பலிக்குமா!
நத்தைக் கூட்டு வாழ்வின்றி
வித்தகத் தமிழ் வான 
விதானம் எட்ட வேண்டும்!
எத்தனிப்பின் இனிமையில் நனைந்து.

 26-5-2019









புதன், 22 மே, 2019

96. (675) 1. வாழ்க நல்மனம்! - 2. காழ்த்தலின்றியே வாழ்த்தலாம்.







வாழ்க நல்மனம்!

வாழ்த்தில் மகிழ்ந்த முதிய உள்ளம்
வாழ்ந்திடட்டும் பல்லாண்டு பல்லாண்டு காலம்!
வாழ்வாங்கு வாழ்ந்திட வாழ்த்துதல் வழமை.
வாழ்த்திடவும் நல் மனம் வேண்டும்.
வாழ்த்தை ஏற்றிடவும் பண்பு வேண்டும்.

சேந்தனார் சிவனையும், பெரியாழ்வார் திருமாலையும்
ஏந்தி வாழ்த்திய பாடல்கள் திருப்பல்லாண்டாம்.
வாழ்த்தினை விரும்பி ஆசியாக ஏற்பதும்
வாழ்த்தினை ஏற்றிட்டால் வசவு விழுமோ!
வாசலுக்கு    எடுக்காரென்றும்    அச்சமும் பலருக்கு

வாழ்ந்த முதியோர்  இளையோரை வாழ்த்தல்
தாழ்ந்திடா வாழையடி வாழ்வான மரபாம்.
சூழ்கலி நீங்க வாழ்வு துலங்க
ஆழ்க தீயதென நல்மனதோர் வாழ்த்துவோர்.
வீழ்க ஆணவம்!   வாழ்க நல்மனம்!

    14-2-2019





காழ்த்தலின்றியே வாழ்த்தலாம். 
00








சொற் பொருள் -
(காழ்த்தல் - மனவயிரங் கொள்ளுதல்.   பேழ் -பெருமை.  போழ்வு - பிளவு.
00
வாழ்ந்த மனது  நல்லதற்கு
வாழ்த்த எண்ணுதல் இயற்கை.
ஆழ்ந்த புரிந்துணர்வு அங்கீகரிக்கும்
தாழ்ந்த புரிதல் நிராகரிக்கும்.
வாழ்த்தை மதிப்புடையோர் மதிப்பார்.
00
வாழ்த்திற்காகப் பலர் ஏங்குவார்
வாழ்த்திடார் வக்கிரங் கொள்வோர்.
வாழ்த்துங்கள்! மனதார வாழ்த்துதல்
வீழ்த்தி விடாது யாரையும்.
வாழ்த்தவுமொரு மனம் வேண்டும்
00
வாழ்த்துங்கள் தராதரம் அறிந்து
வாழ்த்து உயர்த்தும் ஆசியுடைத்து.
ஆழ்த்துவது மதிப்பு! மகிழ்ச்சி!
வாழ்த்துகள் தொண்ணூற்றொன்பதுடன் ஒரு
வாழ்த்து   நூறு ஆக்கிடும்.
00
வாழ்த்தும் மனமொரு கொடை
வாழ்த்து கேட்டும் பெறுவார்.
கீழ்மையாய்ப்  பணத்திற்கும் வாங்குவார்.
நிகழ்விலிருந்தும்  நன்மையாய் வாழ்த்தாதோர்
காழ்த்தல் நெஞ்சுடைய கீழோர்.
00
வாழ்த்து குவிதலால் வருந்திடார்.
பேழ் மனம் பெறுமதியறியும்.
போழ்வு மனம் நல்லதையும் வெறுக்கும்.
வாழ்த்து ஒவ்வொன்றும் ஈடற்றது.
வாழ்த்துங்கள் காழ்த்தலின்றி வாழ்த்துங்கள்
00


வேதா. இலங்காதிலகம் - தென்மார்க் - 2-8-2022





95. (674) கவிதை இயக்கம்








கவிதை இயக்கம்

வண்ண வண்ண அழகுடன்
எண்ணற்ற மலர் மொழிகள்.
எண்ணி வியப்புறும் பாக்கள்
திண்மைச் சரித்திரத் தகவல்கள்
கண்கவரும் காட்சிகள் படங்கள்
கிண்ணம் நிறை உணவுகள்
பண்பாடுடை ஆன்மிகமென சுவாசத்தை
பண்புடனும்  நிறைக்கும் முகநூல் 

வெற்று நடைபாதை
வற்றிய மனிதமற்ற கள்ளிக்காடு
முற்றும் சுடுகாடு,   பாலைவனமாகி
அற்புதச் சோலை வீதி
உற்சவக் கோலம்  அழிதலும்
முற்றிய சிந்தனைச் செதுக்குதலே! 
பற்றற்ற  கோல வண்ணமென்று
பெற்றிடும் பரிசு  ஒன்று.

புன்முறுவலில் பாசி, வரண்ட
இன்ப உணர்வின் அடம்
வன்மமாகிப் போலி முகமூடியாகிறது.
புன்னகையிதழ் விரிக்கும் மலர்களும் 
தேனீய மறுப்பதில்லை  வேண்டியோருக்கு.
என்றும் பேசும்நதி நிறுத்திடாது.
இன்ப நிறக்கலவையான  மேதினியில்
என் கவிதையியக்கத்தோடு நானும்!

2-3-2019















செவ்வாய், 21 மே, 2019

94. . (673) ஏனோ உறவுநிலை....







ஏனோ உறவுநிலை....

சிகரத்தில் சிகாமணியெனச் சிங்காரமாய்
சித்த சாந்தியாய் நிற்கலாம்.
சித்திரப்படமாய்ச் சுருளும் வானம்
சிமிட்டும் சின்ன மின்மினிகள்.

காடு தழுவி ஓடும் நதி
காவல் உன் நிழலே
கானல் வரி சொல்லும்
கதிரவன் துளிகளுமே துணை

மானுட நிலத்தில் விசிறும்
மாதவச் சிந்தனைகள் ஒருமை 
மனப்போக்கில் ஒதுங்கவிடாது
மனங்கலத்தல் மகிழ்வு தரும்.

பேதலித்த சமூகம் விலக்கி
காதலித்துன்னையே எண்ணியிருத்தல் கேடு.
பாய்விரிக்கும் எண்ணக் கடலில்
பாசமாய்ப் பிள்ளைகளும் படிக்கட்டும்.

மறுபடி மறுபடி உனையெண்ணும்
மனது பூவாக விரியவில்லையே
தானே விரியும் பூவாயின்றி
ஏனோ உறவுநிலை மாறுதே!

 28-3.2019

93. (672) அழுக்கு வரலாறு ....






அழுக்கு வரலாறு ....


நோய் கொண்ட மனிதர்
தீய்கிறார் பிறர் மகிழ்வினால்
ஓய்வின்றிக் காயம் செய்து

ஒற்றுமை ஒரு நோயென்று
கொய்கிறார் பிறர் உயிரை.
கூற்றுவனாகிக் குண்டு வெடிக்கிறார்.
வேற்றுமையில் ஆனந்தித்துக் கொலைத்தலில்

கனதியாம் அதிர்வுகள் காலந்தோறும்
மாற்றவியலா அழுக்கு வரலாறு தொடர்கிறது
மனக் கலக்கமாக உள்ளது. 
தினமும் அகங்காரிக்கும் மனங்கள் சாகட்டும்
தனமெனும் உயிர் கிள்ளுக்கீரையாகிறது.
21.4.2019


ஞாயிறு, 19 மே, 2019

92.. . (671) தேர்தல்







தேர்தல்
ஊர்வதிங்கு அரசியல் தேர்தலா! ஆர்வமுடைய கவித் தேர்தலா! ஊர்முழுதும் பேசும் ஊழலால் கார்மேகம் சூழும் காடைத்தனப் பேர்வழிகள் பங்கெடுக்குமரசியல் தேர்தலா! ஆர்வமுடைய தடாகத்தின் கவிதைத் தேர்தலே எனக்குப் பிடித்ததாகிறது! தேர்வாகாதோ என் தமிழ்! நெஞ்சிலே நீதி நேர்மை தஞ்சமடைந்த மனிதநேயப் பண்பு அஞ்சாத ஆணித்தரக் கொள்கையாளர்கள் விஞ்சும் சமூகசேவைக்காகவும் நல்லாதரவுடன் வஞ்சமின்றித் தேர்தலிற்கு நிற்பார். விசேடமாக வாக்களித்துத் தேர்வாகிறார்கள். பிரதிநிதித்துவக் குடியாட்சிச் செயற்பாடிது. பதினேழாம் நூற்றாண்டிலிருந்து செயற்படுகிறது. மக்களாட்சிக்கு நடக்கும் தேர்தல் அக்கப்போராகிறது பணப் பட்டுவாடாவில். மக்கள் சேவை மகேசனிற்குரிய சிக்கலற்ற சேவையாக மிளிர்த்துபவனே திக்கெட்டும் புகழ் அடைவான். மக்களின் நல்லாதரவு பெறுவான். அக்கறையாகச் சிலர் இலவசங்களீந்து பக்குவமாய்த் தேர்தலில் வென்றிடுவார். சூதாட்டமெனத் தேர்தலும் ஒரு வேட்டையாகி மாக்களாகிறார் மனிதர். நாட்டை உயர்த்துவோமென நல்லவராக ஓட்டுப் போடுங்கள் என்பார். வேட்பாளர் உண்மையாக நாடாண்டால் பட்டொளி வீசும் நல்லாட்சியைக் கட்டாயமாக நாம் காணலாம். கிட்டுமாவென்பதேயின்று பெரும் கேள்வி. மாசி - 2018


91. (670) ஆன்ம விடுதலை






ஆன்ம விடுதலை

சாக்காடால் மனம் பதறும்
பூக்காடில் புயல் புகுவதாய்
நோக்காடே உடற்காற்று விலகல்!
மாக்கோல வாழ்வு! மரணத்தை
மாதவமும் தடுக்காது! ஆக்கை
முட்டைக்கோது! பிரியும் உயிர்ப்பறவை!

மோதல் மிதித்தலாய் அச்சமடையும்
சாதல் புதிது அல்ல
செல்லும் செல்லும் உயிரென
நில்லாது எண்ணுதல் மனதில்
நிரந்தரமாய் பதிதல் 
நிறை நிதானம் தந்திடலாம்

ஊதுபத்தி போன்றது வாழ்வு
ஏது வயதெல்லை இறப்பிற்கு!
பொது விதிக் கோட்பாடு
(வுhந வாநழசல ழக மயசஅய ழச கயவந)
மெதுவான ஒத்தடம் ஆகிறது.

முதுமொழிகள் மரண 
விடுகதையை அவிழ்க்கிறது.


18-5-2019






செவ்வாய், 7 மே, 2019

90. (669) . பழைமைக்கு உயிர் கொடுப்போம்






 பழைமைக்கு உயிர் கொடுப்போம் 

( மட்பாண்டம் - பொதுவாக மண்ணால் செய்யும் பொருட்கள்) பனையோலைஇ மூங்கிலால் பின்னும் வினைகளுயர சிறுகைத்தொழில் உயர்த்துவோம். மனையொளிர நெகிழியுதைத்து சிறுதானியமுண்போம். மட்பாண்டமும்இ சித்தவைத்தியமும் புழங்குவோம். காலையிலெழுந்து கடவுளை வணங்குவோம். மாலையிலெம் வயலோரம் சிறுவரோடுலாவுவோம். வேலையோடு திருக்குறள் ஒளவை மொழியோடு பழைமை வாழ்வூட்டுவோம். ஒருவனுக்கொருத்தியெனும் ஒழுக்க வாழ்வுப் பெருமையோடு கூட்டுவாழ்வை ஊக்குவோம். பெருவிருப்போடு தருக்கள் ஊன்றுவோம். சுற்றுசூழல் பாதுகாப்பில் மழையேந்துவோம். பாலோடு பழைமையை பசுமையை பாலவயதில் ஊட்டுவோம். ஐந்தில் வளைப்பது ஐம்பதிற்கேகும். 8-1-201 



89. (668) நடுநிலைமை. (மதிப்பீடு)





நடுநிலைமை.
(மதிப்பீடு)

முகம்    பார்க்காதீர்!
முன்னர்  தெரிந்தவர் 
என்று    எண்ணாதீர்!!
முதிர்மொழி பாரீர்!
முத்தமிழ்ப்  பெருமையுடைக்காதீர்!
முதுகு    நிமிர்த்திடுவீர்!

தமிழுக்குச்    சேவை
தரமுடன்   தேவை
தளர்ந்த  நெஞ்சைத்
தண்டாக    நிமிர்த்துவீர்.!
தகவுரை    விலக்குவீர்!
தகவுடையது    நடுநிலைமை.


நேர்மை    நீதி 
கூர்மை     பெறட்டும்!
பொய்    சிகரமேறும்
ஏய்த்தல் மாறட்டும்!
ஓய்வற்ற இது 
சாய்த்திடும் சுயத்தை!

 8-1-2018





திங்கள், 6 மே, 2019

88. (667) பேச்சு







பேச்சு

பெண்ணோ ஆணோ பேசும் 
கண்ணியமான தமிழ் மனிதரின்
பண்பைக் காட்டுவது உண்மை.
மண்ணை மதிக்கும் பேச்சு
தண்மை தரும் பேச்சு
புண் படுத்தாதுஇ இன்னும்
விண்ணிற்கு  உயர்த்தும்   தன்மையது.
உண்மையறிவு எண்ணும் திறனுடைத்து

புண்பட்ட மனதில் இயல்பாய்
முண்டியடிக்கும் பண்பட்ட சொற்கள்.
உண்மையை ஏற்பது சிரமமே.
ஆள் பாதியாடை பாதியென்பர்
மொழிஇ பேச்சுமதே போன்றதே.
பேச்சுஇ எழுத்தொரு கலை.
சொற்களை ஆளும் கலை
பேச்சு தெய்வப் பரிசு.

மனிதன் விலங்கின் வேறுபாடு
புனிதப் பேச்சு  என்பர்.
சொற்கள் மலரானவை தொடுத்தால் 
மாலையாகும் மதிப்பும் ஆகும்.
சிந்தனையின் மறுபக்கம் பேச்சு.
தானத்தில் சிறந்தது நிதானமாம்.
மென்மையான வார்த்தை நிதானமுடைத்து.
பேச்சு வெள்ளியானால் மௌனம் தங்கமாம்.

17-12-2017




87. (666) . திவலையாய் வழித்தெறிந்து நிமிர்!








திவலையாய் வழித்தெறிந்து நிமிர்!

உறுதியற்ற உறவுச் சிறகுகள்
இறுக்கமின்றி ஈடாட்டமாய் இதுவரை
நொறுங்கும் கண்ணாடிகளாகத் தான்
வெறும் துரோகங்களாலே இணைந்திருந்ததோ!

காலின்  முள்ளையெடுத்து நகருகிறாம்
காரணத் தண்டனையை ஏற்று
காதலோடு தொடர மறப்பதேன்!
கல்லாகிறது எப்படி இதயம்!

ஆத்ம பந்தம் அன்பென்பதை
ஆத்மார்த்தமாய் மனிதன் உணர்வதில்லை
ஆத்திரம் ஆக்கிரோசம் பெரிதென்று
ஆனந்த பரவசத்தை உரித்துப் போடுகிறான்.

உயிர்த்திருத்தலே அன்பானந்த வாழ்விற்காய்.
உயிராமன்பு நேசத்தைப் பகடைக் காயாய்
உருட்டி வைராக்கியம் வளர்த்தல்
உட்சூத்திரமாதல் உண்மை ஞானமல்லவே!

திமிர் ஆக்கிரோசத்தை உருட்டித்
திரட்டி முறுக்குப் பிழிதலல்ல
திருவுடை  இன்ப வாழ்வு!
திவலையாய் வழித்தெறிந்து நிமிர்!

 13-11-2017.


திமிர் ஆட்களை மதிக்காது.
நிமிர்ந்து வயதையும் பார்க்காது
அமிர்தஞ்சீவியும் விடமாய் தெரியும்
சமிர்த்தியும் (நிறைவு) அடையாது.


5-8-2014




ஞாயிறு, 5 மே, 2019

86. (665) பாதங்களால் நிறையும் வீடு.







பாதங்களால் நிறையும் வீடு.


பூம்பாதம் பஞ்சுப் பாதங்களால் நிறைந்த
பூக்காலம் குழந்தைகள் மழலைக் காலம்.
பூப்பாத அடிகளையும் வரைந்து நிறமாக்கிய
பூம்பனி உணர்வு மனதில் நெகிழ்வு!
பூரணமாய் வளர்ந்தனர், பாலகர் பாதங்கள்
பூரிப்புடன் குதித்து விளையாடி ஓடின.
மிதித்து மிதித்து மினுக்கமானது தரை
குறுமணல்களைப் பெருக்கித் தள்ளுவதும் சுத்தம்.
பாதம் மிதக்காத மாக்கோலமும் வீட்டுக்கழகு.
பாதங்களில் வீழ்ந்து வணங்கினால் ஆசிகள்.
பாதம் பதியாத இடம் வெறுமையன்றோ!
பக்தியற்ற வீட்டில் இறைவனின் பாதங்களேயில்லை.
நண்பர்களின் பாதங்களால் நிறைந்த வீட்டினால்
கண்ணிறைந்த கலகலப்புத் தான் நாளும்!
அன்பும் அறமும் செய்யுங்கள்! தினம்
அன்பான பாதங்களால் வீடு நிறையும்!
வன்முறையாளர்களை அழிக்க இந்த அன்பே
நன்முறை மருந்தாகும் நாளும் புரிந்திடுவோம்!
11-11-2017.


85. (664) மட்டைப் பந்தும் எழுத்தும்







மட்டைப் பந்தும் எழுத்தும்


கவி விளையாட்டும் இப்படித்தான்!
கருத்தாய் சொற்களை விசிறியடி!
மட்டையாய் எழுதுகோல் எடு!
வீதியானாலும் பயிற்சி முக்கியம்!
எழுத்து கருத்து பிரதானம்.

ஏழையும் பணக்காரனும் விளையாடும்
மட்டைப் பந்தும் எழுத்தும்
மதியைப் பாவித்து வெல்லலாம்!
உடலிற்கும் மனதிற்கும் உதவும்
பாடமெனும் நிலாமுற்றப் பயிற்சி!


10-10-2017



84 ( பாமாலிகை. (பெண்மை - 30) கவி போன்ற விழியாளே









கவி போன்ற விழியாளே

கவி போன்ற விழியாளே!
கவின் கலை நடனமே! 
குவியும் பாவம் அபிநயமுமே
குரலசைவில் தாளத்துடனசைக்கும் கலையே!

கண்ணாலே அழகியல்இ சமூகம்,
பண்பாடு, கலை, நெறிமுறையுள்
எண்ணம் பரிமாற்றம் தொடர்பாடல்
வண்ணமாக நடனம் அமைத்தல்.

காதலையும் கூறும் காந்தவிழி.
ஆதலாலும் கட்டுடல் அழகவசியம்.
தீதல்ல தெய்வீகக் கலையை
ஓது! முறைப்படி ஓதிடுவாய்!

ஓத்துழைப்புத் தருவேன் கண்மணி.
ஓன்றாகக் கலை வளர்ப்போம்!
ஓப்பீடற்றவுன் அழகில் கரைகிறேன்!
ஒயிலாயருகில் வருவாய் மயிலே!

 பா வானதி  வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க். 19-4-2016






வெள்ளி, 3 மே, 2019

83. (663) ஊடகம்-Jalpavanan





உன் பிறவி அரியது!

Jeevalingam Kasirajalingam


சுடச் சுடக் கவிதை தாருங்கள்...?


இலங்கையில் அவிசாவளையில் தனது காதலி
"நீ போய் சாவு!" எனக் கூறியமையினால், நகரப்பகுதியில் தனது உடலில்
தீ வைத்து எரியும் இளைஞரைப் பாரும்...! "ஆயிரமுறை மதியுரை (உபதேசம்) செய்தாலும் - இந்த காதல் பையித்தியங்களை - ஒரு அறிஞனாலும் திருத்த முடியாது இது உண்மைக் காதலா...? - இல்லை அறியாமையின் வெளிப்பாடா...? என முகநூல் அறிஞர் இராவணன் பாலம்இப்படிக் கேட்பதில் - எத்தனையோ எண்ணங்கள் உங்களில் தோன்றலாம்!
"தோன்றிய எண்ணங்களைத் தொகுத்தே "காதல்" எனும் சொல்லைச் சுட்டியே ஆணோ பெண்ணோ தற்கொலை செய்வதை நிறுத்துங்கோ" என
உரைக்கும் சிறந்த கவிதைகளை - அதுவும்முதல் நூறு கவிதைகளை
மின்நூலாக்கி வெளியிட்டு உதவுகிறேன்!
தற்கொலைக்குச் செல்லாது வாழ வழிகாட்டும் கவிதைகளே
இன்றைய தேவை என்பதால் - இந்த மின்நூலாக்கும் பணிக்கு - உங்கள்
பாவண்ணங்களைக் கருத்துகளாகப் பகிருங்கள்! உங்களுக்குத் தெரிந்த
முகநூல் கவிஞர்களுக்கும் பகிர்ந்து "காதல்" என்ற போர்வையில்
தற்கொலை செய்யாதீர்களென வழிகாட்டும் கவிதைகளைப் பகிர
முன்வாருங்கள் முகநூல் உறவுகளே!
கவிதைகள் யாவும் பின்னூட்டங்களாகவே தரப்பட வேண்டும். அதாவது இப்பதிவுக்கான கருத்துகளாகவே தரப்பட வேண்டும். இப்பதிவுக்குப் பின்னூட்டமாகவோ கருத்தாகவோ கிடைத்த முதல் நூறு கவிதைகளை மின்நூலாக்கி வெளியிட்டு உதவுகிறேன்!


காதல் உன்னையும் மீறிநெஞ்சில்
ஆழப்பதிந்தால் இறுகப் பற்று!
நீளத் தொடர்!...உன் காதலை!
அன்றேல் விலகிச் செல்!
ஆழக் காதலைத் தேடு!...
அருமை மானுடப் பிறவி!
தற்கொலை என்ற பெயரால்
உன்னை அழிக்காதே!....
யார் தந்தது இந்த உரிமை!
பெற்றவர் தந்த உடலன்றோ இது!
எங்கிருந்து வந்தது உன்னையழிக்கும்
இந்த உரிமை! தூர நட.!..
நண்பர்களைத் தேடு!
கடலில் மீன்கள் போல உலகில்
ஆயிரம் பெண்கள்!...உன்னவளைத் தேடு!


7-7-2017
மின்னூல் பிரதி


மிக்க நன்றி சகேதரா.


82. (662) கலை ராகங்கள்









Kavignar Ara to Vetha Langathilakam

காலைகலை ராகங்கள் 
-----
மலர் மலர்ச்சி உன் சிரிப்பு
தினம் விரியும் புன்னகை கீதம் 
அதில் சங்கீதம் பாதம் முதல் உச்சி வரை 
பாடும் பரதம் கால் மொழி பேசும்
வாய் கவிதை பேசும் மலரே கண்கள் என மனம் தென்றலாகும் தீந்தமிழே 
சங்கீத சிறப்பின் எதிரொலியோ 
என் சிந்தை கவர் தோழி
பூந்தென்றல் தாளமிடும் 
பூபாள ராகம் குதித் தோடி 
ஆலாபனை செய்யும் கரகரப் பிரியா 
கை கொட்டும் ரஞ்சினி இசஹாணாஇ
வசந்தா ரசிக்க 
ஶ்ரீ ஆகும் மோகனம் 
கல்யாணி ஆகி மத்திமாவதியில் 
சங்கமமாகும் ---------- தோழி 
வாழி வாழிய வே!............ '


ஆக்கம் ஆரா





428 (961) ஆலமர விழுதற்ற அவலநிலை மனிதக்காட்சிச் சாலை.

                       ஆலமர விழுதற்ற அவலநிலை மனிதக்காட்சிச் சாலை மிருகக் காட்சிச் சாலை மாறி மனிதரே மறந்த மனிதம் போனதால் மனிதக் காட்சிச் சாலை...