ஞாயிறு, 26 மே, 2019

97. (676) ஊடகம்- கொலுசு May- நூலேணி உதவுமா?




May கொலுசு மின்னிதழில் என் வரிகள். கொலுசு குழுமத்திற்கு நன்றிகள்.

நூலேணி உதவுமா?

வான வயல்களின் விதைப்போ 
வாகுடை நட்சத்திர மணிகள்!
தேவதை மாளிகை யன்னலால்
தினமும் தேடுகிறாள் அது
ஒளி மலர்த் தோட்டம்
களிதருமுலகம் விற்பனைக்கு வருமோ!

மனம் விரிக்கும் இன்பம்
புத்துணர்வு தெளிக்கும் நந்தவனம்
மின்மினி வானம் கண்ட
தித்திப்பில் கடலலையும் ஆர்ப்பரிக்கும்
நுரைமொழி சிந்திச் சிந்தி

ஓளி மலர்கள் சேகரிக்க
நூலேணி உதவுமா! என்
எண்ண ஏணி விரிந்தது
முகிலொன்று வருமா என்னை
எடுத்துச் செல்ல என்
வெளிச்சக் கனவு பலிக்குமா!
நத்தைக் கூட்டு வாழ்வின்றி
வித்தகத் தமிழ் வான 
விதானம் எட்ட வேண்டும்!
எத்தனிப்பின் இனிமையில் நனைந்து.

 26-5-2019









கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

494 (1036) கவியரங்கம் எனது 10வது

             நிலாமுற்றம் தொடர் நிகழ்வாகக் கவியரங்கம் நடந்ததில் சிலவற்றில் நான் கலந்து கொண்டேன். வேதாவின் வலை ஒன்றில் கவியரங்கம் நிகழ்வில் 6...