வெள்ளி, 3 மே, 2019

83. (663) ஊடகம்-Jalpavanan





உன் பிறவி அரியது!

Jeevalingam Kasirajalingam


சுடச் சுடக் கவிதை தாருங்கள்...?


இலங்கையில் அவிசாவளையில் தனது காதலி
"நீ போய் சாவு!" எனக் கூறியமையினால், நகரப்பகுதியில் தனது உடலில்
தீ வைத்து எரியும் இளைஞரைப் பாரும்...! "ஆயிரமுறை மதியுரை (உபதேசம்) செய்தாலும் - இந்த காதல் பையித்தியங்களை - ஒரு அறிஞனாலும் திருத்த முடியாது இது உண்மைக் காதலா...? - இல்லை அறியாமையின் வெளிப்பாடா...? என முகநூல் அறிஞர் இராவணன் பாலம்இப்படிக் கேட்பதில் - எத்தனையோ எண்ணங்கள் உங்களில் தோன்றலாம்!
"தோன்றிய எண்ணங்களைத் தொகுத்தே "காதல்" எனும் சொல்லைச் சுட்டியே ஆணோ பெண்ணோ தற்கொலை செய்வதை நிறுத்துங்கோ" என
உரைக்கும் சிறந்த கவிதைகளை - அதுவும்முதல் நூறு கவிதைகளை
மின்நூலாக்கி வெளியிட்டு உதவுகிறேன்!
தற்கொலைக்குச் செல்லாது வாழ வழிகாட்டும் கவிதைகளே
இன்றைய தேவை என்பதால் - இந்த மின்நூலாக்கும் பணிக்கு - உங்கள்
பாவண்ணங்களைக் கருத்துகளாகப் பகிருங்கள்! உங்களுக்குத் தெரிந்த
முகநூல் கவிஞர்களுக்கும் பகிர்ந்து "காதல்" என்ற போர்வையில்
தற்கொலை செய்யாதீர்களென வழிகாட்டும் கவிதைகளைப் பகிர
முன்வாருங்கள் முகநூல் உறவுகளே!
கவிதைகள் யாவும் பின்னூட்டங்களாகவே தரப்பட வேண்டும். அதாவது இப்பதிவுக்கான கருத்துகளாகவே தரப்பட வேண்டும். இப்பதிவுக்குப் பின்னூட்டமாகவோ கருத்தாகவோ கிடைத்த முதல் நூறு கவிதைகளை மின்நூலாக்கி வெளியிட்டு உதவுகிறேன்!


காதல் உன்னையும் மீறிநெஞ்சில்
ஆழப்பதிந்தால் இறுகப் பற்று!
நீளத் தொடர்!...உன் காதலை!
அன்றேல் விலகிச் செல்!
ஆழக் காதலைத் தேடு!...
அருமை மானுடப் பிறவி!
தற்கொலை என்ற பெயரால்
உன்னை அழிக்காதே!....
யார் தந்தது இந்த உரிமை!
பெற்றவர் தந்த உடலன்றோ இது!
எங்கிருந்து வந்தது உன்னையழிக்கும்
இந்த உரிமை! தூர நட.!..
நண்பர்களைத் தேடு!
கடலில் மீன்கள் போல உலகில்
ஆயிரம் பெண்கள்!...உன்னவளைத் தேடு!


7-7-2017
மின்னூல் பிரதி


மிக்க நன்றி சகேதரா.


2 கருத்துகள்:

  1. Lingathasan Ramalingam Sornalingam:- "உண்மைக் காதல் என்று இங்கு ஒன்றும் இல்லை;
    நீயும் காதல் கொள்ள வேறு பெண்ணா இல்லை?
    என்ற வரியை இவனுக்குச் சொல்ல அருகில் ஒருவர் கூடவா இல்லை.
    நம்ம கமல் கூட ஒரு படத்தில் சொல்வாரே "டாக்டர் பொண்ணு No சொன்னா, நர்ஸ் பொண்ண Love பண்னு என்று.
    //எங்கிருந்து வந்தது உன்னையழிக்கும்
    இந்த உரிமை! தூர நட.!..
    நண்பர்களைத் தேடு!
    கடலில் மீன்கள் போல உலகில்
    ஆயிரம் பெண்கள்!...உன்னவளைத் தேடு!// வரிகள் அருமை வேதா ஆன்டி.
    https://www.youtube.com/watch?v=1avFZukSk2Q
    7-7-2017

    Vetha Langathilakam:- நன்றி உறவே கருத்திடலிற்கு.
    மகிழ்ச்சி.
    2017

    பதிலளிநீக்கு

423 (962) ஊடகம் -- தடம் தீட்டு