திங்கள், 28 நவம்பர், 2022

402. ( 935) இனத்தை அளப்பது இலக்கிமாம்

 


    



இனத்தை அளப்பது இலக்கிமாம்


கனம் அளப்பது தராசுகோல்

மனதை அளப்பது  நடத்தை.

இனத்தை அளப்பது இலக்கியம்

உனது  எனது நல்லதை 

வானமளவான உன்னன்பு. எடுத்துரைக்கும்

எதுவாயினும் இறுதியிடம் சுடுகாடே

00

காதல் - காமம் மட்டுமல்ல வாழ்வு

காதல் இளமையோடும் தொலையும் 

காதல் முதுமை வரையும் வாழும் 

காதல் கொள்ளு அனைத்திலும்

மலர்ந்த மலராக மனதைவிரி

சொரி பரிந்த ஆதரவுச் சொல்

00

பொன்னிறகுகள் தேவையில்லைப் பறக்க

உனது கறந்தபாலான  தமிழ் போதும்.

வழிந்து புலன்களைத் தூண்டி

சுழியோடும் கவித்துவம் என்னையும்

உலகையும் நனைக்கும் அது

உள்ளுற ஊறும் உணர்வு மழை

00

 -28-11-2022




புதன், 23 நவம்பர், 2022

401 (934) மன்பதைக்கு நன்மையாம் கவிமேகம்!

 



     




     மன்பதைக்கு நன்மையாம் கவிமேகம்!



( மன்பதை – மக்கட் பரப்பு)

உன்னுள்ளுணர்வுக் கவிச் சொல்லோவியம் 

உன்னூற்றுக் கவிதை என்னுள்

மென் சங்கீதத் தென்றலாய்

வான் நட்சத்திரப் பூக்களாய்

இன் நவரசம் தூண்டும்

00

பண்ணெனும் அமிர்தப் புல்லாங்குழலாய்

தண்ணருவிச் சாரலாய் விழும்

என்னுளுன்  தேனருவிக் காவியம்!

மன்பதைக்கு நன்மையாம் கவிமேகம்

பின் தங்கி எங்கே மறைந்தது!

00

துள்ளருவியாய்ச் சலசலத்துத் தூவும்

வெள்ளப் பிரவாக வார்த்தைகள்

பள்ளம் மேடற்ற  பக்குவமொழியடுக்கு

கள்ளம் கபடறியாக் குழந்தையாய்

துள்ளி என்றுவரும் ஊர்வலமாய்!

00

 26-1-2001



திங்கள், 21 நவம்பர், 2022

400. (933) விருப்போடு மலரட்டும்!

   


          




  விருப்போடு மலரட்டும்!


தேடித் தேடிக் கருத்துகள் அறிந்து

கூடித் தமிழ் சொற்களோடு

சோடித்து எழுதுதல் இன்பம்

நாடிச் சிறந்த கருத்து

போடுதலும் இன்பம்

00

வரிகள் ஒரு பக்கம்

உரிய படம் தேடல்

மறு பக்கம். இனிமை

கருத்து விழாவிடிலும்

கவிஞர்   போகமாட்டார்!

00  

கருத்திடல்  என்ன 

பெரும் தொல்லையா?

அருமையாகக் குவிதலும் 

கருத்துக் குறைதலும்

உருத்துடை நேசமல்லவே!

00

உணர்வுகளை மனதிலடக்கும் லைக்குகள்.

மனம் விரிந்த கருத்துகள்

இனம் காட்டும் தமிழுணர்வை 

இனம் காட்டும்  தமிழறிவை

00

கருத்துக்கு எட்டாத கவிதையென்று

பருத்த மனது சுருங்குகிறதா!

குருத்தாய் விரி! மலரட்டும்!

செருக்கடை உன் தமிழால்!

00

-20-11-2022

செவ்வாய், 15 நவம்பர், 2022

399. (932) (ஊடகம் - அங்கீகாரம்

      


               (மதிமலர் முகநூல் மாத இதழின் .புதுக் கவிதை)

மிக்க நன்றி. 

00

அங்கீகாரம்


அங்கீகாரத்தில் பூவாணமாய் மனம்

பொங்கி மின்னும் பூந்தூறலால்

இங்கிதக் களிப்பு விண்ணில் சொரியலாய்;

00

உரத்து உணர்வுகள் உயரும்

பரத்தும் வனக்காடாக பசும் நினைவுகள்

இரத்தம் உடலெங்கும் போர்த்தும்

00

எண்ணக் கட்டிலில் ஆனந்த 

வண்ணங்களில் சுழியிடும் மீன்களாக

எண்ணிறந்த ஆனந்த வளையங்கள்

00

சிலிர்க்கும் உணர்வுச் சிந்தனைகள்

கெலிப்புடை சாய்வில்லாத் தமிழாகச்

சாகசமாய்த் தமிழ்க்கடலாகச் சாகுபடியாகட்டும்

00

- 19-10-2022



மதிமலருக்கு இரண்டாவதான   காதற் கவிதை)

காதலாற்றுப்படை

00

கொண்டையில் மலர் சரியச் சரிய

கண்டபடி மனம் அலைய அலைய

வண்டுவிழிகள் எனை இழுக்குதடி

செண்டுப்  பாவாகத் தொடுத்திட

பண்டுத் தமிழை மேய்கிறேனடி.

00

கலிங்கத்துப்பரணிக்  கடைத்திறப்புப்  பகுதியை

நலிவு அற்ற பரணியை

பொலிவுடை ஊடற் பிரிவை

பொருத்தமாய்ப் புரட்டிப் பார்த்து

பொழுது சாயமுன் சந்திப்போம்

00

தமிழாடிக்  கவிதையாடிக் காதலாடி

தமிழ்ச் சொற்சுள்ளிகளை அள்ளிப்போடு

அமிழ்ந்திட வரிகளைக் கொழுத்திடு!

அமிர்தமாகட்டும் எமது சந்திப்பு.

அருகில் சேர்ந்து இணைவோம்.

00

வேதா. இலங்காதிலகம் -தென்மார்க் - 20-10-2022












ஞாயிறு, 6 நவம்பர், 2022

398. (931) கைக்கு எட்டாத வானம்

 



         



    கைக்கு எட்டாத வானம்


வானம் கைக்கு எட்டாததால்

வானவெளியை விட்டு வைத்துள்ளனராம்

நானும் நீயும் கனவுகளை

ஆனவரை வளர்த்து நிரப்புவோம்.

தேனமுத தமிழில் மூழ்குவோம்.

00

எதுகை மோனை சீரெனும்

பாதுகையோடு இலக்கியக் கவிதை

மோதுதல் மிக அழகு

கவிதை ஊர்வலம் ஒரு

மதுகைக் கனவு தேசம்.

00

வழிய வழியும்  உணர்வுகளின்

அழியாத ஊர்வலம் கவிதைகளாய்

செழித்த நதி ஓட்டமாய்

கொழித்துச் சிற்றாறுகளையும் இணைத்து

விழி நிறைந்து தன் வழியேகுகிறது.

00

வரும் மழை கண்டு

பெரும் பூமழை சொரிவதாகப் 

பாமழை மனதில் பொங்குகிறது

பகீரதியாய்ப் பார்த்தும் கேட்டும்

பாகுபாடின்றிச் சிந்தனை சொரிகிறது.

00

உன் காலடிப் பதிவிலே

என் கவியடி மனதிலே

நன் முதலடி தேடுதே

முன்னிலையாக மதிக்கும் வரி

மின்னலென ஒளிரட்டும் உலகிற்கு.

00

வேதா. .இலங்காதிலகம் -தென்மார்க்- 6-11-2022

( படம் - நாங்கள் ஒபேரா கட்டிடம் சிட்னியில் )


வியாழன், 3 நவம்பர், 2022

397. (930) அகவெளியில் நிலைப்பது ஞானம்!

         



      




அகவெளியில் நிலைப்பது ஞானம்!


அறிவைத் தொலைப்பது சோம்பல்.

அன்பைத் தொலைப்பது சந்N;தகம்.

அகிம்சையைத் தொலைப்பது வன்முறை.

அக்கறையைத் தொலைப்பது  அலட்சியம்

அச்சத்தைப் தொலைப்பது துணிவு.

அகவெளியில் நிலைப்பது ஞானம்.

00

பணமே கனதியெனும் சிந்தனையால்

குணம் சுமையாகி இனமொதுங்கும்

வன்சொல்லின்றி நன் சொல்லாக

தன்சொல் பிறத்தலே இன்சொல் பேசல்

மன்பதைக்கு உயிர்க் காற்று அன்பு.

தென்புடை பாலைவன நீரூற்று.

00

காட்டாறாய்ப்  பெருகும் திறமையால்

கொட்டும் நல்லாக்கம் ஊன்றுதலால் 

தேட்டம் பயிராக உயரும்.

சூட்டிக்கை (கூர்மை அறிவு) நாட்டம் புதிதாகும்.

தீட்டிட ஊக்குவிக்கும் போட்டியும்

போட்டுத் தாக்கும் ஈட்டியாக.

00

 3-11-2022



428 (961) ஆலமர விழுதற்ற அவலநிலை மனிதக்காட்சிச் சாலை.

                       ஆலமர விழுதற்ற அவலநிலை மனிதக்காட்சிச் சாலை மிருகக் காட்சிச் சாலை மாறி மனிதரே மறந்த மனிதம் போனதால் மனிதக் காட்சிச் சாலை...