கைக்கு எட்டாத வானம்
வானம் கைக்கு எட்டாததால்
வானவெளியை விட்டு வைத்துள்ளனராம்
நானும் நீயும் கனவுகளை
ஆனவரை வளர்த்து நிரப்புவோம்.
தேனமுத தமிழில் மூழ்குவோம்.
00
எதுகை மோனை சீரெனும்
பாதுகையோடு இலக்கியக் கவிதை
மோதுதல் மிக அழகு
கவிதை ஊர்வலம் ஒரு
மதுகைக் கனவு தேசம்.
00
வழிய வழியும் உணர்வுகளின்
அழியாத ஊர்வலம் கவிதைகளாய்
செழித்த நதி ஓட்டமாய்
கொழித்துச் சிற்றாறுகளையும் இணைத்து
விழி நிறைந்து தன் வழியேகுகிறது.
00
வரும் மழை கண்டு
பெரும் பூமழை சொரிவதாகப்
பாமழை மனதில் பொங்குகிறது
பகீரதியாய்ப் பார்த்தும் கேட்டும்
பாகுபாடின்றிச் சிந்தனை சொரிகிறது.
00
உன் காலடிப் பதிவிலே
என் கவியடி மனதிலே
நன் முதலடி தேடுதே
முன்னிலையாக மதிக்கும் வரி
மின்னலென ஒளிரட்டும் உலகிற்கு.
00
வேதா. .இலங்காதிலகம் -தென்மார்க்- 6-11-2022
( படம் - நாங்கள் ஒபேரா கட்டிடம் சிட்னியில் )
சிந்தியா சிந்தி
பதிலளிநீக்குகனவுகள் வளர்ந்து நிரப்பட்டும் இடைவெளியை.
6-11-2022
Vetha Langathilakam
Amudha Bharathy
நன்று ! நன்று !
வாழ்த்துகள் !
7-11-2022
Vetha Langathilakam
Author
Amudha Bharathy மகிழ்ச்சி தங்கள் கருத்திற்கு.
இறையாசி நிறையட்டும்.
11-11-22
Vetha Langathilakam
Vetha Langathilakam
Author
ஏழு பேர் விருப்பும் கருத்தாகினால்
என் விருப்பு அதிகமாகுமே!
நன்றி
11-11-2022
Vetha Langathilakam
Author
nanry likers..
Vetha Langathilakam
பருத்த மனதைச் சுருக்கினாயா!
கருத்துக்கு எட்டாத கவிதையா!
Vetha Langathilakam
Arivukkan Raju Naidu
That's awesome! Congratulations!
14-11-2022
Vetha Langathilakam
Author
Arivukkan Raju Naidu Mikk nanry. tholainthu vidavillai...
Vetha Langathilakam
NV Easwary
Sarala Vimalarajah
Reka Rajakumar
Manjula Yugesh...Thank you all..
Janaki Sreenivasulu
Very nice 👍