வியாழன், 28 பிப்ரவரி, 2019

36 (622) எ - எழுத்து வரிகள்





                                                


எ - எழுத்து வரிகள்

எழுத்தாணி கொண்டு   எ - யின்  ஆரம்பத்தில்
எட்டு    வரிகள்  அமைப்பது   எளிமையே.
எழும்  கருத்துகள்  எழுத்தகராதி  இணைப்பே
எழிலாகக் கட்டுதல்  திறமைக்குச்  சவால்.

(எங்கள்   ஒற்றுமை  இணைவு  மாநிலத்தில்
எல்லையற்ற  சாதனையை  நிச்சயம்  எட்டட்டும்.
எண்ணங்கள் உயர்ந்தால்  செயலும்  சிறக்கும்.
எள்ளளவும்  பயமற்ற    துணிவின்  பயணமிது.

எது வரை போவோமென்பதில்லை வெல்லும்
எழுகளம். எள்ளுதலின்றி வாழ்தல் பிரதானம்.
எளிதல்ல ஏற்றம் காண முயன்றிடு.
எல்லவன் போன்று ஒளி பெறலாம்.

எஃகென   வலிமையாயச்   சேர்ந்து நடத்தல்  
எதிரிகளை   எட்டிச்   செல்ல  வைக்கும்.
எசகு  பிசகு  வழி  விலக்கி
எச்சரிக்கையாக   ஏறு  நடை   போடுவோம்.

எல்லவன் -  சூரியன்.
எழுகளம் - போர்களம்.
 9-5-2017.




புதன், 27 பிப்ரவரி, 2019

35 (621). . நீங்காத நினைவுகள்.







நீங்காத நினைவுகள்.

என்னுயிர் படைத்த பிரம்மாக்கள்
இன்பத் தாய் தந்தையர்
பண்பு பாச உடன்பிறப்புகள்
என்றுமேயுடனிருந்து என்னைச் செதுக்கியவர்கள்.
இன்னும் கனவிலவர்களைக் காண்பதில்
ஆனந்தம் நீங்காத நினைவுகளென்பதே.

எல்லையற்று இருபது வருடங்கள்
ஆனந்தித்த ஊர், கோயில்
வெள்ளி கூட்டுப் பிரார்த்தனைகள்
நட்புகள், ஞானமூட்டிய கல்வியகம்
இன்றாடும் இன்பத் தமிழ்
அடிப்படை அத்திவாரமங்கு தானே!

-அ- தொடங்கியகண்ட சொற்பொழிவு 
வரை அச்செழுத்தாயெழுதிப் பெற்ற
பாராட்டுகள், ஆறாம் வகுப்பிலிருந்து
மூன்று வருட விடுதிவாழ்வு 
வாழ்வு அனுபவங்களைத்  தெளிவாக்கியது.
என்பது நீங்காத நினைவுகள்.

இவ்வின்ப நினைவு முகில்களின்
கூடலும் பிரிவுமான  இணைவுகள்
புத்தக அடுக்குத் தூசிகளாக
நினைக்கவும் துடைக்கவும் எத்துணையானந்தங்கள்.
எம்மில் இனிக்கவினிக்கப் படிந்தவை
சௌந்தரியமானவை  இளமை நினைவுகள்.

4-8-2016-





செவ்வாய், 26 பிப்ரவரி, 2019

34. (620) அழகு






   அழகு

அழகு   மனிதர்  எண்ணம்  பொருளிடவியல்பு.
பழகிட  மகிழ்வு    திருப்தி  காட்சியநுபவம்.
அழகாடை,  முடி  முகவழகிலும்  நல்லொழுக்கம்
கல்வியழகு  பேரழகு  கவர்ச்சியீர்ப்பு  நல்கும்.

வணிகமய   அழகென  மனிதனை ஆட்டுகிறது.
வணிதமிகு   மனவமைதி,  நிதானம்,   ஆரோக்கியம்,
பிணியற்றவுடல்   மட்டுமல்ல  தன்னம்பிக்கையுள்ளமே  அழகு  
துணிவுடன்   நாமினியர்,  திறமையாளரெனுமெண்ணமே  பேரழகீயும்.

(வணிதம் - செப்பம்)


11-5-2017













திங்கள், 25 பிப்ரவரி, 2019

33. (619) தடை அதை உடை








தடை அதை உடை

தடை அதை உடைக்க
விடை  தன்னம்பிக்கை  மேடை.
அடை இயலாமைக் கடை.
குடை  உன்னூக்க நடை.
தேரோடும்  பெரும் சாதனைக்காய்
போராடு தினமும்!  ஏன்
நீராடுகிறாய்  கவலைக்  குளத்தில்!
யாரோடு கோபம் உனக்கு!

ஏரோடும்  போராட்டம் விவசாயிக்கு
ஊரோடு  போட்டியிடு  நேர்மைக்காய்
கூராக சிந்தி  செயலெடு.
சீரோடு  நன்மை  செய்.
வேரோடு  உறவுகளை  இறுக்கு
பேரோடு  புகழ்  பூக்க
நேரோடு  தருமம் விதையது
நீரோடு  அடித்துப்  போகாது.

நாரோடு பூவான நல்லோரிணைவு
தூரோடு   நன்மை  பொழியும்
வீரமிகு மன எண்ணத்தால்
வீசுதலாகும்  தடைக்  கற்கள்.
வேதனைகள் வெந்து  அழியும்.
சூரியன்  நதியின்  தடையற்ற
கடமை உணர்வாய் இயங்கு!
தடைகள் உடைபடும் வெற்றியுனதே!

வேதா. இலங்காதிலகம். டென்மார்க். 6-6-2017




32. (618) வாழ்தல் ஒரு சவால்







வாழ்தல் ஒரு சவால்

தீராமை- ஆற்றாமை, கொடுமை. தூர்த்தல்- அடைத்தல், மறைத்தல். )

வாழ்தல் ஒரு சவால்
போழ்தல் இணைதல் வாடிக்கை.
வீழ்தலைப் பார்த்தல் வேடிக்கை.
.மூழ்தல் நம்பிக்கை ஊன்றுகோல்.
தாழ்தல் ஒரு கண்காட்சி.
சூழ்தல் தாராளமான துன்பமே.

போர்க்கள வாழ்வை மாற்றிட 
சாராம்சம் ஆராய்ந்து சீராக்கிடு!
தீராமை தூர்த்தல் செய்து
போராடிப் பார் சோர்ந்திடாது!
ஊராருக்கும் உதாரண வாழ்வை
ஆராதிக்கும் தோராயத்தில் அமைப்போம்.

போராளிகள் நாம். போராட்டத்தில் 
நேராக நேர்மையாய் தேரோட்டி
வேரோடிய பண்பாடு காப்போம்.
வைராக்கியமாய் ஒருவனுக்கு ஒருத்தியாய்
தூரமாய்த் துன்பங்கள் துரத்தி
பாராட்டுடன் வாழ்வைப் பூவனமாக்கலாம்.

ஆராத போராட்ட ஆடுகளம்.
ஆசை மேடையொரு ஆயுதகளம்.
ஆசைக்கு இடு கடிவாளம்.
ஆடும் வாழ்க்கையொரு முறையே
ஆளுமைத் திறமையின் ஆலாபனையிது.
ஆற்றலின் வெற்றியே வாழ்வு.  

23-3-2018










ஞாயிறு, 24 பிப்ரவரி, 2019

31 (617) . மின்னூல் - கார்த்திகை விளக்கீடு




இலக்கியப் பூந்தோட்டம் மின்னூல் கார்த்திகை மாதம்.
என் கவிதை





30.. . (616) தந்தையாகி தலைவனுமாகி







தந்தையாகி தலைவனுமாகி

தந்தையாகி தலைவனுமாகி முந்தைப் பிறவியேந்திய புண்ணியத்தில் நல்ல தந்தையாகிப் பிள்ளைக்குத் தலைவனாகிக் குடும்பத்திற்கு
அந்தகாரவுலகில் ஆதவனாய் ஒளியூட்டி ஆதி அந்தம் வரை குடும்ப நேச பந்தம் காவும் பாசமுடைய பெருஞ்சொந்தமப்பா. பிள்ளைக்காக அனைத்தையும் தாங்குபவன் இங்கு கொள்ளை மழையையும் தான் வாங்கியுயிர்க் கிள்ளைக்காய்ப் பெருங்குடைப் பாதுகாவலனாகிறான். தெள்ளிய காட்சியிது தனை ஈந்து அள்ளியன்பு சொரியும் தந்தையாகிய தலைவன். உயிர் உடலாய் ஒன்றானவன் தந்தை. அன்பு அருளீய்ந்து நிற்பவன், நிறைந்தவன் தென்புடன் தோளில் ஏந்தியே நடப்பான். அன்புடன் யானையின் அம்பாரி தோளானவன். என்ன கேட்டதும் வாங்கித் தருபவன். முளைத்தெழும் உயிரசைவின் முகிழ்வாம் தந்தையன்பு. கிளைத்து பெருகித் திகழ்தல் இறையாணை. இளைத்தலின்று கட்டற்றுப் பெருகுதல் இயல்பு. விளைவு பிள்ளையகத்திலூன்றும் முதலறிதல் சித்தியடைதல். களைப்பற்றுத் தெய்வமிறங்கி வந்தாடும் களியாட்டாகுமிது. கருவில் சுமந்தவளம்மா, தன் நெஞ்சில், உருவில் சுமப்பாரப்பா, அரவணைக்கும் ஆளுமை. திருவான பிள்ளையின் முதற் கதாநாயகன். பெருமுயிரின் முகிழ்வு தந்தைப் பாசம். அருமையுறவின் நற்சொற்கொடையாகிறானிவன் தந்தையாகி தலைவனுமாகி. வேதா. இலங்காதிலகம். டென்மார்க். 14-6-2017.




சனி, 23 பிப்ரவரி, 2019

29. (615) பற்றிக் கொண்டு படர்!







பற்றிக் கொண்டு படர்

ஆம்! அத்தனையும்  பற்றிக்கொண்டு  படர்தலே.
பொன்மொழிகளாம்   நல் வார்த்தைகளை
பண்புடைய நல்ல செயல்களை நாம்
பற்றிப் படர்ந்தே நல் மனிதரானோம்.
காற்று எப்படி  யெங்கும் புகுந்திடுதோ
ஒற்றும் நல்லவைகளும் பரவி ஒளிர்கிறது.

உயிர்க்க நினைக்கும் கொடிகளான பச்சைகள்
கொழுகொம்பைப்   பற்றுதலாக  நல்லவற்றைப் பற்றுதலுயர்வு.
வழுகினாலும் இறுகப் பற்றி எழு!
ஒற்றை   விரல்   பற்றி   ஆரம்பிக்கும்
பெற்றவர் நற் பண்புகள் தொற்றி
மழலை எம்மைச் சுற்றியே படர்கிறது.

பெற்றவர் பொறுப்பு  விலை  மதிப்பற்றது.
கற்றுக் கொண்டு வளர்தலும் கருணை
காட்டிக்   கொண்டு  வாழ்தலும்  பெருமை.
புற்றாக கெட்டவை வளர்த்து வாழ்வில்
கருநாகவிடமாக அவற்றை உமிழ்தல் கேடு.
ஆகவே  நல்லதைப் பற்றிக்கொண்டு படர்!

.12-7-2017






புதன், 20 பிப்ரவரி, 2019

27. (613). முதுமை முழுமை தான்







முதுமை முழுமை தான்


இளமை எல்லைக் கோட்டு ஓவியங்கள்
உளம் உடலின் அழகு மாற்றும்
அளவற்ற திமிருக்கு முதுமையொரு சாட்டை.
தளர்ச்சிக்கோடு தான் அனுபவத் தங்கக்கோடு.

வாழ்த்தாம் ஆசீர்வாதமும் வேண்டாத உலகம்
தாழ்த்தாத நம்பிக்கை வீரக் கைத்தடி.
ஆழ்த்தும் தாழ்வு ஆராய்ச்சிகள் உதறி
வாழ்த்திடு முதுமையைத் தாழ்த்துவோரையும்

வேதா. இலங்காதிலகம். பா வானதி 
டென்மார்க் 16-2.2019


************************



26. (612) ஊரோடு ஒத்து வாழ்தல்.






ஊரோடு ஒத்து வாழ்தல்.

பேரோடு பொருந்தி வாழ்தல்

நீரோடு சேர்ந்து ஓடுதலாய்

ஊரோடு ஒத்து வாழாது

நாரோடு பூவான சுயநலமுயர்ந்து

வேரோடு சேறான ஒற்றுமை

வேறாகி மரத்துப் போகிறது.

உருவாக்கிய இராகத்தை உள்ளம்

உருத்திர வீணையாய் வாசிக்காதா!

உறவு இராகம் சிதறிட

உதறி எறியப்படுகிறதே அலட்சியமாய்

உச்சி குளிர உறவாடலாமே

உறவுப் பூப்பந்தலின் கீழ்.

சுயநலச் சொகுசு இருக்கையில்

நயமற்ற சொல் மாலைகளை

பயமின்றிக் கோர்த்தலை விடுத்து

துயரற்ற நதியாக ஓடு!

இயல்பாய் புறக்கணிப்பை எறி!

நயமாய் மடிநுகர உறவையணை!

பா வானதி வேதா. இலங்காதிலகம். 

டென்மார்க். 20-2-2019







திங்கள், 18 பிப்ரவரி, 2019

25. பயணக் கட்டுரைகள் – (அவுஸ்திரேலிய (கங்காரு நாட்டுப் பயணம்). (24 இறுதி அங்கம். )








24.  இறுதி அங்கம்.  

அவுஸ்திரேலிய (கங்காரு நாட்டுப்  பயணக் கட்டுரை 

 பிறிஸ்பேர்ண் முடித்து  மெலபேர்ண் வந்திட்டோம். 
இனி மெல்பேர்ண் காட்சிகள் காண்கிறீர்கள். விமான நிலையத்திலிருந்து மகன் வீடு செல்லும் காட்சி



அடுத்த நாள் பேரக்குழந்தைகளுக்குப் பொருட்கள் வாங்க கடைகளுக்குச் சென்றோம்.



கண்  கவர்ந்தவை  சில



அடுத்த நாள் மெல்பேர்ண் விமானநிலையம் டென்மார்க்கிற்குப் பயணமானோம்.



டுபாயில் விமானம் மாறினோம்.  டென்மார்க் விமான நிலையம் இறுதிப் படம்.



Denmark Air port.. 



எமது அவுஸ்திரேலியாப் பயண விவரணமும் இத்தடன் முடிவடைகிறது.
(இறுதி மூன்று அங்கமும் இந்த இணையத் தளத்திலும் முன்னைய 21 அங்கங்களும் எனது முதல் வலை வேதாவின் வலை யில் காணமுடியும்.)


என்னுடன் பயணமான உங்களுக்கு நன்றிகள்.





ஞாயிறு, 17 பிப்ரவரி, 2019

24. பயணக் கட்டுரைகள் – (அவுஸ்திரேலிய (கங்காரு நாட்டுப் பயணம்). (23)





23. அவுஸ்திரேலிய (கங்காரு நாட்டுப் பயணம்

இந்தப் பயணக் கட்டுரையின் 21அங்கங்கள் என்  முதலாவது இணையத்தளமான வேதாவின் வலை யில் உள்ளது அதன் இணைப்பு இங்கு தருகிறேன்.



https://kovaikkavi.wordpress.com/category/6-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4/ அங்கம் 23.

தங்கக் கடற்கரையில் நாள் முழுதும் சுற்றி எங்கு வந்து இறங்கினோமோ கிறே கவுண்ட் பேருந்து நிலையத்திற்கு வந்தோம். பேருந்திற்காகச் சிறிது நேரம் காத்திருந்தோம்.அங்கு சொகுசு வாகனங்களும் வாடகைக்கு விடுகிறார்கள் இதில் இரண்டு நிற வாகனங்களைப் பார்க்கிறீர்கள்.



பின்னர் பேருந்தில் பயணிக்கும் போது பிமபிஸ்பேர்ண் தங்கக் கடற்கரைப் பட்டினக் ஖ாட்சி காணுகிறீர்கள். தெருவில் கொள்ளிக் கட்டைகளாக இரவு வெளிச்சம் வாகனத்தில்.



அப்படியே நமது அறைக்குப் போக முதல் கோவிந்தாஸ் மரக்கறி உணவகத்திலவக்தில் இரவு உணவை வாங்கிக் கொண்டு



நமது சிட்டிஎட்ஜ் அறைக்குச் சென்றோம்.
நன்கு குளித்து இரவுணவு முடித்து எல்லா ஆயத்தங்களையும் அடுத்தததாள் மெல்பேர்ண் செல்வதற்குச் சய்து விட்டு நித்திரை கொண்டோம்.





அடுத்த நாள் பேசியபடி பேருந்து வந்தது மெல்பேர்ண் செல்ல விமான நிலையம் சென்றோம். சுகமாக ஆகாய விமானத்தில் மெல்பேர்ண் சென்றோம்.

மிகுதியை அடுத்த அங்கத்தில் பார்ப்போம்.



                                                        *****************************************************


23. பயணக் கட்டுரைகள் – (அவுஸ்திரேலிய (கங்காரு நாட்டுப் பயணம்). (22 அங்கம்)





அவுஸ்திரேலிய (கங்காரு நாட்டுப் பயணம்

இந்தப் பயணக் கட்டுரையின் 21அங்கங்கள் எனது முதலாவது இணையத்தளமான வேதாவின் வலை யில் உள்ளது அதன் இணைப்பு இங்கு தருகிறேன். இன்னும் ஓரிரு அங்கங்களில் இது முடிவுறுகிறது.

https://kovaikkavi.wordpress.com/category/6-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4/


22 அங்கம்

   தங்கக் கடற்கரைகிறேகவுண்ட் பஸ் தரிப்பிடத்தில் எங்களைக் கொண்டு வந்து நிறுத்தினார்கள்.     



 இதிலிருந்து மாலை திரும்பிப் போகும் பேருந்து நேரத்தைக் கவனித்தோம். பின்பு அதிலிருந்து சிறிது தூரம் நடந்தால் தங்கக் கடற்கரை.





கடற்கரை வாசலாக மேலிரு படங்களும் தெரிந்தது.  இவர் தண்ணிரில் இறங்கமாட்டேன் என்று அடம் பிடித்தார். ' பசிபிக் கடல் நீரில் கால் நனைக்காமல் என்ன இது!..வாங்கோ!.. என்னை வந்து படம் எடுங்கோ!..நான் நீருள் நிற்கிறேன்..' என்று இழுத்து வந்து   நிறைய படங்கள் எடுத்தார்.
 பறவைகள் தமது இரையைத் தேடியபடி. நாமும் கரையோரமாக நடை.

 ரைகர் ஐலண்ட என்று மணலால் செய்திருந்தனர்.
 இயற்கை அழகுகள்  பாம் மரக் காய்- பழம்...
பாதுகாப்புக் கருதி வேலி....

அப்படியே ஒரு நாள் முழுதும் கடல் காற்று வாங்கி...பேருந்து எடுக்க நடந்து சென்றோம். மறக்க முடியாத அழகு நடை. கண்கவரும் வான் தொடும் கட்டிடங்கள் அழகு கொஞ்சியது. மிகுதியை அடுத்த   இறுதி அங்கத்தில் காணுவோம்.

வேதா. இலங்காதிலகம். டென்மார்க். 17-2-2019










சனி, 16 பிப்ரவரி, 2019

22 (611) .தேவரகசியத் தூக்கம்.








தேவரகசியத் தூக்கம்.

மூடிய இமைக்குள் மூங்கில் வனம்
மூடுமந்திரம் பேசும் மூக்குத்திப் பூக்கள்
மூட்டம் இல்லாத மேக நீலம்
மூலை  முடுக்கிற்கு கதிரிட்டது மூளை.

சுடரும் சுழலுமான சுதந்திர மனவோட்டம்
சுகமான கோழியிறகு  சொகுசுப் போர்வை
சுகிக்காது இமைமூடி சுழலும் மனம்
சுற்றுகிறாள் நித்திராதேவி வட்டமடித்துத் தூரமாய்

பேசாமல் தூங்காது பேயாய் அலைந்து
பேரலை போல பாயாது மெதுவாக
பாம்பு  மாதிரி பாசியில் அசைந்து
பம்மாத்துக் காட்டுது விழி மூடாது.

தேவார திருவாசகம் துணை வருமா!
தேக்கமின்றி  இமைகளை தூக்கம் இணைக்கட்டும்.
தேம்பும் மனமோ  தேடலோ இல்லை
தேவதைச் சிறகு தேவரகசியமாக அணைக்கட்டும்.

வேதா. இலங்காதிலகம். பா வானதி
டென்மார்க்.  15-2-2019.






428 (961) ஆலமர விழுதற்ற அவலநிலை மனிதக்காட்சிச் சாலை.

                       ஆலமர விழுதற்ற அவலநிலை மனிதக்காட்சிச் சாலை மிருகக் காட்சிச் சாலை மாறி மனிதரே மறந்த மனிதம் போனதால் மனிதக் காட்சிச் சாலை...