புதன், 20 பிப்ரவரி, 2019

26. (612) ஊரோடு ஒத்து வாழ்தல்.






ஊரோடு ஒத்து வாழ்தல்.

பேரோடு பொருந்தி வாழ்தல்

நீரோடு சேர்ந்து ஓடுதலாய்

ஊரோடு ஒத்து வாழாது

நாரோடு பூவான சுயநலமுயர்ந்து

வேரோடு சேறான ஒற்றுமை

வேறாகி மரத்துப் போகிறது.

உருவாக்கிய இராகத்தை உள்ளம்

உருத்திர வீணையாய் வாசிக்காதா!

உறவு இராகம் சிதறிட

உதறி எறியப்படுகிறதே அலட்சியமாய்

உச்சி குளிர உறவாடலாமே

உறவுப் பூப்பந்தலின் கீழ்.

சுயநலச் சொகுசு இருக்கையில்

நயமற்ற சொல் மாலைகளை

பயமின்றிக் கோர்த்தலை விடுத்து

துயரற்ற நதியாக ஓடு!

இயல்பாய் புறக்கணிப்பை எறி!

நயமாய் மடிநுகர உறவையணை!

பா வானதி வேதா. இலங்காதிலகம். 

டென்மார்க். 20-2-2019







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

494 (1036) கவியரங்கம் எனது 10வது

             நிலாமுற்றம் தொடர் நிகழ்வாகக் கவியரங்கம் நடந்ததில் சிலவற்றில் நான் கலந்து கொண்டேன். வேதாவின் வலை ஒன்றில் கவியரங்கம் நிகழ்வில் 6...